(3689)
இடையில் லையான் வளர்த்த கிளிகாள். பூவைகள் காள்.குயில் காள்!ம யில்காள்,
உடையநம் மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியவொட் டாது கொண்டான்,
அடையும் வைகுந்த மும்பாற் கடலும் அஞ்சன வெற்பும் அவை நணிய,
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை அன்றி யவனவை காண்கொ டானே.
பதவுரை
|
யான் வளர்த்த கிளிகாள் |
– |
நான் வளர்த்து வந்த கிளிகளே! |
|
பூவைகள் காள் |
– |
பூவைகளே! |
|
குயில்காள் |
– |
குயில்களே! |
|
மயில்காள் |
– |
மயில்களே! |
|
இடை இல்லை |
– |
(என்னிடத்தில் உங்களுக்கு) ஓர் அவகாசமில்லை, |
|
நம் உடைய மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழிய ஒட்டாது |
– |
நம்முடையதான நிறத்தையும் வளையையும் நெஞ்சையும் ஒன்றும் மிச்சப்படவொட்டாதே |
|
கொண்டான் |
– |
கொள்ளை கொண்டவன் |
|
அடையும் |
– |
இங்கிருந்து சென்று சேர்ந்த |
|
வைகுந்தமும் |
– |
திருநாடும் |
|
பால் கடலும் |
– |
திருப்பாற்கடலும் |
|
அஞ்சனம் வெற்பும் அவை |
– |
திருவேங்கடமலையுமாகிய அத்தலங்கள் |
|
நணிய |
– |
அருமையற்று எளியவையே (ஆனால்) |
|
பாசங்கள் |
– |
புறம்புண்டானபற்றுக்கள் |
|
கடை அற |
– |
ஸவாஸநமாக |
|
விட்ட பின்னை அன்றி |
– |
விட்டொழிந்தால்லலது |
|
அவன் |
– |
அப்பெருமான் |
|
அவை காண் கொடான் |
– |
அத்தலங்களைக் காணக் கொடான் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பதிகத்திற்கு இப்பாடே உயிர்நிலையாயிருக்கும். புறம்புண்டான பற்றுக்கள் சிறிது மில்லாமையைத் தெவிப்பதேயன்றோ இத்திருவாய்மொழிக்கு முக்யமான ப்ரமேயம், அஃது இப்பாட்டிலுள்ளது. கீழ்ப்பாட்டில் “உங்களோடெங்களிடையில்லையே“ என்று தோழிமாரோடு உறவறுத்தமை சொல்லிற்று, லீலோபகரணங்களிலும் அதரமுண்டானமை சொல்லுகிறதிப்பாட்டு. லீலோபகரணங்களால் பிறக்கும் ரஸமெல்லாம் தனக்கு எம்பெருமானாலே பிறக்குமென்பது தோன்ற முதலடி அமைந்துள்ளது. “யான்வளர்த்த“ என்பது கிளிகளிற்போலவே பூவை குயில் மயில்களிலும் அந்வயிக்கும்.
ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்தி, – “தன்னை ப்ரதிபந்திக்கிற அன்னைமாரோடும் உறவறச்செய்தேயும் அவனைக் காணாதொழிந்தவாறே. தான்வளர்த்த தன்னுடைய லீலோபகாணமான கிளிகள் பூவைகள் குயில்கள் மயில்கள் என்கிற விவற்றோடுள்ள ஸம்பந்தமாகாதே அவனைக்காண்கைக்கு ப்ரதிபந்தகமென்று பார்த்து அவற்றை நோக்கிச் சொல்லுகிறாள்.“ என்று.
ஆசார்யஹ்ருதயத்தில் (153) * கண்வலைப்படாதே அகவலைப்பட்டு * என்று தொடங்கும் சூர்ணையில் “பராபிமாநத்திலேயொதுங்கின நம்பிக்கன்பர் தலைமீதடிப்பொடி உடையவருடையார்போல்வாரைக் கிளிபூவை குயில்மயிலென்னும்“ என்று ஸ்வாபதேசார்த்தம் அருளிச்செய்யப்பட்டுள்ளது, தொண்டாடிப்பொடியாழ்வார் ஆழ்வான் ஆண்டான் எம்பார்அருளாளப்பெருமாளெம்பெருமானார் முதலானவர்கள் போல்வாரைக் கிளிபூவை குயில்மயிலாகச் சொல்லுவதாகத் தேறியுள்ளது. அப்படிப்பட்டவர்களிடத்தில் ஸங்கம் உபாதேயமேயல்லது த்யாஜ்யமன்றே, அப்படியிருக்க, இவற்றோடு ஸங்கமற்றதாகச் சொல்லுகிறவிது சேருமோவென்று சங்கை பிறக்கும், கேண்மின், சாணாகதி கத்யத்தில் * பிதரம் மாதாம் தாராந் புத்ராந் பந்தூந் ஸகீக் குருக் * என்று தொடங்கி குருக்களைமுட்பட்ட த்யஜித்ததாக அருளிச் செய்யப்படுகிறது. தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாரதார் அன்பு தன்பால் செய்தாலும் அம்புயைகோன் –இன்பமிகு விண்ணாடு தானளிக்கவேண்டியிரான், ஆதலால் நண்ணாவர்கள் திருநாடு * என்றும் * ஞானமனுட்டானமிவை நன்றாக வேயுடையனான குருவையடைந்தக்கால், மாநிலத்தீர்! தேனார்கமலத்திருமாமகன் கொழுநன்தானே வைகுந்தந்தரும் * என்றும்! (உபதேசரத்தினமாலையில்) அருளிச்செய்தபடியே ஆசார்யஸம்பந்தமே முக்திக்கு முதல்தனிவித்தாயிருக்க அப்படிப்பட்ட ஆசார்ய ஸம்பந்தத்தையும் சொல்யிருக்கிறதேயென்று கேட்கலாம், இதற்கு அவ்விடத்து வியாக்யானத்திலே விரியவுரைத்தோம். அவர்களை அறவே விட்டிடுவதாக இங்கு விவக்ஷித மன்று, மாதாபிதாக்களையும் ஆசார்யர்களையும் புத்ரமித்ராதிகளையும் பகவத் விபூதிகளாக் கருதுகின்றே னென்பதுவே இங்குப் பரமதாத்பரியம். இவர்கள்தாமே பகவத் பாகவதாநுபவ விரோதிகளாகில் இவர்களை ஸர்வாத்மநா த்யஜிக்கவும் ப்ராப்தமே, குரோரப்யவலிப்தஸ்ய கார்யாகார்ய மஜாநத“ உத்பதம் ப்ரதிபந்நஸ்ய ஸத்யஸ் த்யாகோ விதீதே * என்றது காண்க.
“பூவைகள்“ என்னும் பன்மைச்சொல்லின் மேல் விளியுருபு ஏறினால் “பூவைகாள்“ என்றாகும், “பூவைகள்காள் என்றாவதற்கு வழியில்லை எனினும், வடமொழி வேதத்தில் வரும் பலவகைப் பிரயோகங்களைச் “சாந்தஸத்வாத் நதோஷ“ என்பதுபோல இங்குங்கொள்க. “பூவைகாள்“ என்றே பாடமென்று சிலர் சொல்லுவது அஸம்பிரதாயம்.
“உடையம்“ என்றதை மாற்றி “நம்முடைய“ என்று கொள்வது. நம்மிடத்தில் ஸர்வஸ்வாபஹாரம் பண்ணினானென்கிறது இரண்டாமடி. கொண்டான் என்றது வினைமுற்றன்று, வினையாலணையும் பெயர், மூன்றாமடியின் முதலிலுள்ள அடையும் என்பதில் அந்வயிக்குமது, கொண்டானடையம்வைகுந்தமும் என்க. இத்தலையிலுள்ளதெல்லாம் நேராகக்கொண்டு எட்டவொண்ணாத நிலத்திலேபோய்ப் பாரித்து வெற்றிகொண்டாடியிருந்தானென்கை“ என்பது ஈடு. என்னையு மென்னுடைமையையுங் கொள்ளைக்கொண்டு அவன் பரமபதத்திலோ திருப்பாற்கடலிலோ * சேணுயர்வானத்தோடொத்தான * சேணுயர்வேங் கடத்திலோ சென்று சேர்ந்தாலும் (அவை நணிய) அவை நமக்குக் கிட்டத்தகாதவையல்ல, ஸமீபஸ்தங்களே என்கிறார். “நண்ணிய“ என்பது “நணிய“ என்று தொக்கிக் கிடக்கிறது. நண்ணத்தகுந்தவையே என்றபடி. அப்படியானால் அநுபவம் கிடைக்கவில்லையேயென்று அழுவானேன்? கிட்டியநுபவித்துச் சளிக்கலாகாதோவென்ன, அதற்கு உத்தரமுரைக்கிறார் கடையறப்பாசங்கள் விட்ட பின்னையன்றி அவனவைகாண்கொடானே என்று. இங்கே ஈடு, “அவன் சுணையுடையவன், புறம்பேஞமொருவிஷயத்திலே நசைகிடக்க ஸ்வாநுபவத்தைக் காட்டிக்கொடான், பின்னாட்டாதபடி ஸவாஸநமாக பாஹ்யருதிபோனாலல்லது போகஸ்தானங்களைக் காட்டிக் கொடான்“. என்று ஆறாயிரப்படி ஸ்ரீஸூக்திகாண்மின், -“அவன் நம்முடைய நிறமும் வளையும்நெஞ்சும் தொடக்கமாகவுள்ள ஸர்வஸ்வத்தையும் அபஹரித்துக்கொண்டு போனானாகிலும், பரமப்ராப்யமான திருநாடும் திருப்பாற்கடலும் திருமலையும் தன்னையாசைப்பட்டார்க்குக் காணநணியவாகில் காட்டாதொழிவானென்னென்னில், உங்கள் பக்கலுள்ள ஸங்கம் நிச்சேஷமாகப் போனாலல்லது அவனவை காண்கொடான், ஆதலால் இனி உங்களோடு முறவில்லையென்கிறார்.“ என்று.
English Translation
Out, out, my pet Mynahs, Parrots, my koels and my peacocks! He has stolen my health, wealth, heart and all else to the last bit. He resides in fair Vaikunta, in Milk Ocean and on Venkatam hill. Till my last remaining passions leave me, he will not see me, so get out!
