(3685)

(3685)

கூடச்சென் றேனினி என்கொ டுக்கேன்? கோல்வளை நெஞ்சத் தொடக்க மெல்லாம்,

பாடற் றொழிய இழந்து வைகல் பல்வளை யார்முன் பரிச ழிந்தேன்,

மாடக் கொடிமதிள் தென்கு ளந்தை வண்குட பால்நின்ற மாயக் கூத்தன்,

ஆடல் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவி னை யாதரித்தே.

 

பதவுரை

மாடம் கொடி மதிள் தென் குளந்தை

மாடங்கயும் கொடியணி மதிள்களையுடைய்ய பெருங்குளமென்னுந்திருப்பதியிலே

வண் குடபால் நின்ற மாயக்கூத்தன்

அழகிய மேற்பக்கத்திலே நின்ற மாயக்கூத்தப் பெருமானாய்

ஆடல் பறவை உயர்ந்த

மகிழ்ச்சியினால் களித்தாடுகிற கருடனாலே வஹிக்கப்பட்டிருப்பவனாய்

வெல் போர் ஆழிவலவனை

போர்க்களத்தில் வெற்றிபெறுமியல்வின்னான திருவாழி யாழ்வானை வலத்திருக்கை யிலுடையனான பெருமானை

ஆதரித்து

ஆசைப்பட்டு

கூட சென்றேன்

அவனோடு ஸம்ச்லேஷிக்கச் சென்றேன்,

கோல்வனை நெஞ்சம் தொடக்கம் எல்லாம்

அழகியவளையும் நெஞ்சும் முதலானவையெல்லாம்

பாடு அற்று ஒழிய இழந்து

என்பக்கல் சேஷியாமல் விட்டுப்போம்படியாக இழந்து

பல வளையார் முன் வைகல் பரிக அழிந்தேன்

பல வளைகளையுடைய பெண்டுகள் முன்னே நெடுங்கால மாகவே என் இயல்புமாறப் பெற்றேன்

இனி என் கொடுக்கேன்

(எல்லாமிழந்த நான்) இனி என்ன இழக்கக் கடவேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார்திருநகரியைச் சார்ந்த நவதிருப்பதிகளுள் நிருக்குளந்தை யென்பது ஒரு திருப்தி. இது பெருங்குளமென்று வழங்கப்படும். அத்தலத்திலுள்ள எம்பெருமான் மாயக்கூத்தன், அப்பெருமானிடத்து ஆழ்வார் தமக்குள்ள ஈடுபாட்டைச் சொல்வது இப்பாசுரம்.

(கூடச்சென்றேன்) இதற்கு இரண்டுபடியாகப் பொருளருளிச் செய்வர், * சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே* என்றவிடத்தும் * நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே * என்ற விடத்தும் திருநாடு செல்வதான பொருளை விவக்ஷித்தாப்போலே இஙகும் அப்பொருளே விவக்ஷிதமாகி “நான் இதோ முடிந்து திருநாடு செல்லப்புகாநின்றேன், (இனி என்கொடுக்கேன்) இங்கிருந்தா வேண்டியதென்னவிருக்கிறது? என்பதாக ஒரு பொருள்.

மற்றொரு பொருளாவது – கூட தேனானபின்பு, இனி என்கொடுக்கேன் – இனி இழக்கவேண்டியதென்னவுள்ளது? ன்பதாக “தென்குளத்தை வண்குடபால் நின்ற மாயக்கூத்தனையாதரித்துக் கூடச்சென்றேன்“ என்று தானே மூலமுள்ளது, இதற்கு – திருக்குளந்தைப்பெருமானே. விரும்பி அவனோடே ஸம்ச்லேஷிக்கச் சென்றேன் எனிசிறபொருள் தேறுமேயல்லது இதோ முடிந்து திருநாடு சென்றேன்“ என்கிற பொருள் எப்படியேற்கும்? என்று சங்கை தோன்றும், இப்பொருள் சொல்லும் நிர்வாஹத்தில் கூடச் சென்றேன் இனியென்கொடுக்கேன்“ என்பது தனிப்பட்ட வாக்யமாகக் கொள்ளத்தக்கது. பாட்டின் முடிவிலுள்ள “ஆமிவலவனையாதரித்தே“ என்பதற்கு “கூடச் சென்றேன்“ என்பதில் அந்வயமென்று இப்போது கொள்ளவேண்டா, “ஆதரித்து“ என்னும் வினையெச்சம் “பல்வளையார்முன் பரிசழிந்தேன்“ என்றதில் அந்வயிப்பதாகக் கொள்க.

ஆறாயிரப்படியில் – “திருக்குளந்தையில் பரமாதாரமான லைத்திக்கிலே நின்றருளினவனை யாதரித்துக் கூடச்சென்றேன்“ என்றிருக்கிறதேயென்னில், அது வொரு யோஜனை. அந்த யோஜநையும் கொள்ளப்பட்டேயுள்ளது. ஒரு யோஜனைக்கு மற்றொருயோஜனை விரோதியன் முதலால் “கூடச் சென்றேனினியென் கொடுக்கேன்“ என்பதை மேலோடே அந்வயியாமல் தனிவாக்யமாகக் கொள்ளும் யோஜதையும் பொருத்துமாதல் அறிக.

மாயக்கூத்தன் – இதற்குப் பலபடியாகப் பொருள்கூறலாம். கீதையில் * தைவிஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்ய்யா * என்று தானே சொல்லி வைத்தபடி குருவிபிணைத்த பினைபோலே மாயப்பிணையொன்று பிணைத்து அதிலே எல்லாரையும் மயக்கி இப்படியொரு கூத்துக்காண்பவன். அன்றியே, அந்த கீதையிலே.

*ஸம்பவாம்யாத்ம்மாய்யா* என்றருளிச் செய்தபடியே ஸங்கல்பமென்னும் பொருளதான மாயையினாலே திருவ்வதாரங்கள் செய்து அவள்ளிலே குடக்கூத்து, மரக்கால்கூத்து, குரவைக்கூத்து என்னும்படியான பலவகைக்கூத்துக்களைச் செய்து “மாயக்கோலப்பிரான் தன் செய்கை நினைத்து மனங்குழைந்து“ ன்னும் படியாக்குமவன். அன்றியே, * சூட்டு நன்மாலைகள் தாயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டி அந்தூபந்தாரநிற்கவேயங்கு ஓர் மயையினா வீட்டியவெண்ணெய் தொடுவுண்ணப் போந்து இமிலேற்றுவன்கூன் கோட்டிடை யாடினை கூத்து அடலாயர்தம் கொம்பினுக்கே * (திருவிருத்தம்) என்கிறபடியே நம்போல்வார்க்கு நெஞ்சினாலும் நினைக்கவொண்ணாத்தொரு மாயக்கூத்தைச் செய்பவனென்னவுமாம்.

வென்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடையிட்டு அதனோசை கேட்டு நிற்பது, புண்ணில் புளிப்பெய்தாலொக்குந் தீமைகளை மனைதோறுஞ் செய்வது, உருகவைத்தகுடத்தோடு வெண்ணெய் றிச்சியுடைத்திட்டுப் போந்து அருகிருந்தார் தம்மையநியாயஞ்செய்வது, இல்லம்புகுந்தொருமகளைக் கூவி கையில்வளையைக் கழற்றி கொண்டு கொல்லையில் நின்றுங் கொணர்ந்துவிற்ற அங்கொருத்திக்கவ்வளை கொடுத்து நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேனென்று சிரிப்பது, ஆற்றிலிருந்து விளையாடுபவர்களைச் சேற்றாலெறிந்து விளைதுகில் கைக்கொண்டு காற்றிற்கடியனாயோடி யகம்புகுவது, வண்டமர் பூங்குழலார் துகில் கைக்கொண்டு விண்டோய் மரத்தேறுவது, மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம்புக்குக்கச் சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவை கீறி நிச்சலும் தீமைகள் உரலோடாய்ச்சி யொண்கயிற்றால் விளியாவார்க்க வாப்புண்டு விம்மியழுவது, பஞ்சனுங்காளிதோள் விரும்பியது, குன்றெடுத்தாநிரை காத்துக் கோவலனாய்க் குழலூதியூதிக் கன்றுகள் சாமாறவளையெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டது, நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்னத் துறியவளும் திருவுடம்பிற்பூச ஊறியகூனினையுள்ளே யொடுங்க ஏறவுருவியது.

வார்கடா வருவியானை மாமலையின் மருப்பிணைக் குவடிறுத்துருட்டி ஊர்கொள்திண்பாகனுயிர்செகுத்து பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்ப் பாரதம் கைசெய்த்து, பற்றலர்வீயக் கோல்கையில் கொண்டு மலைபுரைதோள் மன்னவரும் மாதரும் மற்றும் பலர் குலைய நூற்று வரும் பட்டழியப் பாரத்தன் நிலைவளையத் திண்டேர் மேல் முன்னின்றது, பாழியால் மிக்க பார்த்தனுக்கருளிப் பகலவனொளிகெடப் பகலே ஆழியாலன்றஙகாழியை மறைத்தது, கொல்லாமாக்கோல்கொலை செய்து பாரதப்போரெல்லாச் செனையுமிருநிலத்தவித்தது, மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய்மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தது, படர்புகழ்ப் பார்த்தனும் வைதிகலுமுடனேறத் திண்டோகடவிச் சுடரொளியாய் நின்ற தன்னுடைச் சோதியில் வைதிகன் பிள்ளைகளையுடலொடுஙகொண்டு கொடுத்தது முதலான மாயக்கூத்துக்கள் பலவும் இங்கு அது ஸந்திக்கவுரியவை.

(ஆடல்பறவையுயர்ந்த) எம்பெருமான் தன் மீதேறிச் சாரிகை யெழுந்தருளப்போவதை நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியின் கனத்தாலே சிறகை விரித்தடித்துக்கொண்டு கூத்தாடிநிற்பது கருடப்பறவையின் இயல்வு, அதுபற்றி “ஆடல் பறவை“ என்கிறது. (வெல்போராழி) விடுத்த திசைக்கருமம் திருத்துமவனான திருவாழியாழ்வான் எந்தப்போர்க்களத்துச் சென்றாலும் வெற்றியோடே மீள்வளென்க. வலவன் என்றது – திருவாழியாழ்வானை வலத்திலேயுடையவன் என்று பொருள்படுவதுதவிர “வல்லவன்“ என்பதன் தொகுத்தலாகி, திருவாழியைச் செலுத்தவல்லவனென்றும் பொருள்படும் ஆக இப்படிப்பட்ட எம்பெருமான் ஆதரித்துப் பரிசழிந்தேன் என்றாராயிற்று.

 

English Translation

O Sakhis! the wonder-dancer Mayakkuttan lives westwards in Southern Kulandai amid groves and mansions.  The deft spinner of the war discus rode away on his dancing Garuda-mount, Filled with desire, I followed; my bangles fell, my heart and all left me.  I stand shamed before bangled friends, now hat can I lose?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top