(3667)

(3667)

அன்றிமற் றொன்றிலம் நின்சர ணே!என் றகலிரும் பொய்கை யின்வாய்,

நின்றுதன் நீள்கழ லேத்திய ஆனையின் நெஞ்சிடர் தீர்த்த பிரான்,

சென்றங் கினிதுறை கின்ற செழும்பொழில் சூழ்திரு வாறன்விளை,

ஒன்றி வலஞ்செய்ய ஒன்றுமோ? தீவினையுள்ளத்தின் சார்வல்லவே.

 

பதவுரை

அகல் இரு பொங்கையின் வாய் நின்று

மிகப் பெரிய பொய்கையிடத்திலே (முதலையின் வாயிலாகப்பட்டது) நின்று

நின் சரண் அன்றி மற்று ஒன்று இலன் என்று தன்; நீள் கழல் எத்திய ஆனையின்

‘உன் திருவடிகளை யொழிய மற்றொரு புகலுடையே னல்லேன்’ என்று தன்னுடைய திருவடிகளைத் துதித்த கஜேந்திராழ்வானுடைய

நெஞ்சு இடர் தீர்த்த பிரான் சென்று

செழும் நெஞ்சிலிருந்த இடரைப் போக்கின பெருமான் சென்று அங்கு இனிது உறைகின்ற பொழில் சூழ் திருவாறன் விளை (யை)

ஒன்றி ஸலம் செய்ய ஒன்றுமோ

கிட்டி வலஞ் செய்யக் கூடுமோ?

(அப்படி கூடுமாலீகில்)

தீ வினை உள்ளத்தின் சார்வு அல்லவே

பாவங்கள் நெஞ்சில் பொருத்த முடையன வல்லவாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாறன்விளையிலே புகவே நம்முடைய ஸகல துக்கங்களும் தொலையுமென்கிறார். கஜேந்திராழ்வானுடைய துயரைக் தர்ந்தவன் அங்ஙனமே நம்போல் வாருடைய துயரையும் தீர்க்கத் திருவாறன்விளையிலே வந்து நிதான நிதி பண்ணயிராநின்றான்; அங்குச் சென்று கிட்டி நாம் வலஞ்செய்ய்க்கூடுமோ’ கூடுமாகி கொடிய பாவங்களெல்லாம் நம்முள்ளத்தில் பொருத்த மற்றவையாகிப் பாறிப்பறத்தொழியும் என்றாராயிற்று.

பொய்கையில் முதலையிலகப்பட்டு கஜ ஆகர்ஷதே தீரே க்ராஹே ஆகர்ஷதே ஜலே என்னும்படி முதலே நீருகிழுக்க, தான் தரைக்கிழுக்க, இப்பயாகப் பல வருஷங்கள் ஸ்வப்ரவ்ருத்தியாலே உய்யப் பார்த்த கஜேந்திராழ்வான் ‘இந்த ஸ்வப்ரவ்ருத்தியானது பகவத்ப்ரவ்ருத்திக்க விரோதியாய் நின்றது; இதற்கு நிவ்ருத்தியுண்டானால்லது அவனருள் பெருகாது’ என்று துணிந்து “நின்சரணேயன்றி மற்றொன்றிலம்” என்று அத்யவஸாயங்கொண்டு எம்பெருமானது திருவடிகளை யேத்தினமை முன்னடிகளிற் கூறப்பட்டது.

ஆனையின் நெஞ்சிடர்தீர்த்த பிரான் – ஆனைக்கு இடராவது, உயிர் தொலைகிறதே யென்கிற இடரன்று; வெகு சிரமப்பட்டுப் பறித்த செவ்விப்பூவைத் சிறுகளிலே ஸமர்ப்பித்தப்பெற தொழிகிறோமோ! என்று உண்டான எம்பெருமானுக்கு என்ன அவத்யம் விளைகிறதோ! என்று தோன்றும் வுமாம்; அதாவது, பரமபக்தனான கஜேந்திராழ்வானைக் காத்தருளாவுமானம் ரக்ஷ்கனென்னத் தகுதியுடையனல்லன் என்று உலகத்தார் ஸத்தாந்கம் செய்து விடப் போகிறார்களே யென்று யானை இடர்ப்பட்டதென்கை.

 

English Translation

The tusker standing in deep waters lifted his trunk and walled, “O Krishna, I have no refuge, other than you!” The Lord ended his misery then; he lives in Tiruvaranvilai, If we go around him in worship, our karmas will all vanish

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top