(3664)

(3664)

மலரடிப் போதுகள் என்னெஞ்சத் தெப்ப்பொழு துமிருத் திவணங்க,

பலரடி யார்முன் பருளிய பாம்பணை யப்பன் அமர்ந்துறையும்,

மலரில் மணிநெடு மாடங்கள் நீடு மதில்திரு வாறன்விளை,

உலகம் மலிபுகழ் பாடநம் மேல்வினை ஒன்றும்நில் லாகெடுமே.

 

பதவுரை

மலர் அடி போதுகள்

பரமபோக்யமான திருவடித்தாமரைகளை

என் நெஞ்சத்து எப்பொழுதும் இருத்தி

எனது நெஞ்சிலே அநவரதமும் இருக்கும்படி பண்ணி

வணங்க

தன்னையே வணங்குமாறு;

பலர் அடியார் முன்பு அருளிய

மற்றும் பல பக்தர்கள் இருக்கச்செய்தேயும் அவர்களுக்கு முன்னே எனக்கு க்ருபை பண்ணின

பாம்பு அணை அப்பன்

அனந்தசாயியான எம்பெருமான்

அமர்ந்து உறையும்

உகந்து வர்த்திக்குமிடமாய்

மலாஜீல்

(தேவர்கள் வர்ஷித்த) புஷ்பங்களோடு கூடின

மணி நெடுமாடங்கள்

மணிமயமான ஓங்கின மாடங்களையும்

நீடு மதிள்

நெடிய திருமதிள்களையுமுடைத்தான

திருவாறன் விளை

திருவாறம்விளைப்ப தியினுடைய

உலகம் மலி புகழ்

உலகமெங்கும் நிறைந்த திவ்ய கீர்த்திகளை

பாட

பாடினவளவிலே

நம் மேல் வினை ஒன்றும் நில்லா கெடும்

நம்மிடத்துள்ள பாவங்கள் ஒன்றும் மிச்சப்படாதபடி எல்லாம் தொலைந்துபோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

அடியார்கள் அநுபவிக்கைக்காக அநந்தசாயியானவன் வர்த்திக்கிற திருவாறன்; விளையினுடைய பெரும்புகழைப்பாட, நம் பாபமொன்றும் நில்லாதே தெலைந்தொழியுமென்கிறார்.

(பலரடியார் முன்பருளிய) இவ்விடத்து ஈட்டு ஸ்ரீஸூக்திகள் பரமபோக்யமானவை;-“ஸ்ரீவேதவ்யாஸபகவான் ஸ்ரீ பராசரபகவான் இன்கவி பாடும் பரமகவிகளென்று சொல்லப்படுகிற முதலாழ்வார்களெல்லாரு முண்டாயிருக்க, என் பக்கலிலே விசேஷகடாக்ஷிம் பண்ணுவதே! முதலிகளெல்லாருமிருக்கச்செய்தே திருவடிபக்கிலிலே விசேஷகமபக்ஷம் பண்ணினாப்போலேயாயிற்று பலருமுண்டாயிருக்க இவரை விஷயீகரித்தபடி.”

இங்கு ஆழ்வானுடய அற்புதமான அதிஹாஸமொன்று (ஈட்டில்) காட்டப்பட்டுளது. கேண்மின்; அக்காலத்திலே அரசாண்டுவந்த சோழராஜன் வைஷ்ணவை த்ரோஹியாகையாலே ஆங்காங்குள்ள விஷ்ணுப்ரதிமைகளை யெடுத்து எறிந்து விடவேணுமென்று முயன்றபோது அவனுக்கு இஷ்டரானவர்கள் ‘மந்த்ரபூர்வகமாக ப்ரதிஷ்டை செய்யப்பட்ட விஷ்ணுபிம்பங்களை யழியச் செய்தால் ஊருக்குப்பெருத்த தீங்கு விளையும்’ என்று சொல்ல. அதுகேட்ட சோழன் ‘அந்த ப்ரதிமைகளில் தெய்வசக்தியை உத்வாஸநம்பண்ணி யழியச் செய்வோம் என்று நிச்சயித்து ஒரு ப்ராஹமணனுக்குப் பணங்கள் கொடுத்து நீ அத்ருச்யாஞ்ஜநமிட்டுக் கொண்டு உத்வாஸநம் பண்ணு என்று ஆஜ்ஞாபிக்க, அவனும் திவ்யதேசங்களிலே சென்று அப்படியே அத்ருச்யாஞ்ஜநமிட்டுக்கொண்டு உத்வாஸநம் பண்ணி பகவத் விக்ரஹங்களைக் கடலிலே யெடுத்தெறிகிற செய்தியை எம்பெருமானர் திருச்செவிசாத்தி ‘நாம் நெடுநாளாக இவ்விடத்துக்கும் அழிவுவரும்படி ஆஸீரவர்க்கம் மேலிடாநின்றது; இனிமேல் செய்யவேண்டுவதென்?’ என்று வியாகுலப்பட்டுப் பெரிய நம்பியோடே சிந்தித்திருக்க, நான் பெருமாளுடைய திருவெல்லையிலே ஒரு ப்ருதஷிலாம் வரும்படியாக உம்முடைய சிஷயர்களில் ஒருவரை என் பின்னே அனுப்ப வேணும்; என் பின்னே வார நின்றால் ‘ஒருவன் பின்னே போகிறோம்;’ என்று தன்னெஞ்சில் படாதே நிழல் போலே என்னைப் பின்செல்பவனாக இருக்கவேணும்; அப்படிப்பட்ட ஒரு சிஷ்யனைப் பார்த்தனுப்பும்’ என்று பெரியநம்பி திருவாய்மலர்ந்தருள, இப்படிப்பட்ட ஆத்மகுணபரிபூர்ணரான சிஷ்யர் ஆழ்வானொருவரேயென்பது உடையவர்க்கு நன்கு தெரிந்திருந்தும் இதனைப் பெரியநம்பி திருவாக்கனால் வெளியிடுவிக்க வேணுமென்றெண்ணிக்கொண்டு நம்பியை நோக்கி ‘இப்படிப்பட்ட சிஷ்யர் இவ்விடத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே’ என்று சொல்லி நிற்க, ‘நம் கூரத்தாழ்வானை அனுப்பலாகாதோ?’ என்று நம்பி நியமித்தருள, அருகிலிருந்த ஆழ்வான் இதைக் கேட்டு ‘நம்பிகள் நம் ஸ்வரூபத்தினுண்மையை இங்ஙனேயறிந்து பல சிஷ்யர்களின் முன்னே இப்படி யருளிச்செய்யும்படியான பாக்கியம் பெற்றோமே! என்று பெருமகிழ்ச்சியடைந்து, நம்பிகளின் திருவுள்ளப்படியே பிரதக்ஷிணத்திற்குப் பின் சென்றார். “பலரடியார் முன்பருளிய” என்றவிடத்திற்கு இது மிகவும் பொருத்தமான இதிஹாஸம்.

 

English Translation

Through contemplation and worship of his feet forever, if we sing his boundless praise, our karmas will all vanish.  He resides in Tiruvaranvilai amid mansions and fall walls, -the friend of many great devotees of yore

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top