(3663)

(3663)

வாய்க்குங்கொல் நிச்சலும் எப்பொழு தும்மனத்து ஈங்கு நினைக்கப்பெற

வாய்க்கும் கரும்பும் பெருஞ்செந் நெலும்வயல் சூழ்திரு வாறன்விளை,

வாய்க்கும் பெரும்புகழ் மூவுல கீசன் வடமது ரைப்பிறந்த,

வாய்க்கும் மணிநிறக் கண்ணபி ரான்றன் மலரடிப் போதுகளே.

 

பதவுரை

வாய்க்கும் கரும்பும் பெரு செந்நெலும் வயல் சூழ்

செழித்த கரும்புகளும் ஓங்கிய செந்நெற்களுமான கழனிகள் சூழப்பெற்ற

திருவாறன் விளை

திருவாறன் விளைப்பதியிலே,

வாய்க்கும் பெரு புகழ்

வாய்ந்த மிக்க கீர்த்தியையுடையவனும்

மூ உலகு ஈசன்

மூவுலங்களுக்கும் ஸ்வாமியும்

வட மதுரை பிறந்த

வடமதுரையில் அவதரித்தவனும்

வாய்க்கும் மணி நிறம்

அநுபவிக்க வாய்த்த நீலரத்னம் போன்ற நிறத்தையுடையனுமான

கண்ண பிரான் தன்

ஸ்ரீ க்ருஷ்ணபகவானுடைய

மலர் அடி போதுகள்

விதஸிதமான திருவடித்தாமரைகளை

எப்பொழுதும்

இடை வீடின்றி

ஈங்கு மனத்து நினைக்க பெற

இங்கேயிருந்து மனத்திலே நினைக்கும்படியான பேறு பெறுதற்கு

நிச்சலும் வாய்க்கும் கொல்

எப்போதும் பாக்கியம் வாய்க்குமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாறன்விளையிலே சென்று அநுபவிக்க ப்ராப்தியில்லையாகிலுமாகுக; அங்கு நின்றருளின் எம்பெருமான் திருவடிகளை இங்கேயிருந்தாகிலும நிரந்தரமாகச் சிந்தனை செய்யும் பாக்கியம் வாய்க்குமோ வென்கிறார். நிச்சலும் என்று சொல்லி, பின்னை எப்பொழுதும் என்கைக்குக் கருத்து என்னென்னில்; இங்கு ஈடு காண்மின்;- “நித்யாக்நிஹோத்ரம் போலே ஒரு கால விசேஷத்திலேயாய்ப் போக வொண்ணுது; எல்லாவஸ்தைகளிலுமுண்டாகவேணும்” என்று. ஒருவர் நித்யம் அக்நிஹோத்ரம் பண்ணுகிறாரென்றால் இரவும் பகலும் அதுவே தொழிலாக இருக்கிறாரென்பதில்லையே; ஒரு நாளைக்கு ஒரு சிறுபோது அக்நிஹோத்ரம் பண்ணினாலும் நித்யாக்நிஹோத்ரியென்று பெயர் வந்துவிடுமன்றோ. அப்படியாகாமே அநவரகமும் நினைக்கப் பெறவேணுமென்கிறது. மனத்தீங்கு-ஈங்கு என்று பிரிக்க. உத்தேச்யமான தொன்றை அநுபவிப்பதிற்காட்டிலும் அநுபவிக்க மநோரத;, யதி நாசம்நவிந்தேத தாவதாணஸ்மிக்ருதீ ஸதா

என்கிற ஜிதந்தாச்லோகம் இங்கு ரஸமயமாக வியாக்கியானிக்கப் பெற்றுள்ளது. “நாட்டார் மநோரத மென்றும் அநுபவமென்றும் இரண்டாகவிறே சொல்லிப்போருவது; எனக்கு இதெல்லாம் வேண்டாம்; இம்மநோரத மாத்ரத்தாலே க்ருதக்ருத்யன் நான். சரீரஸம்பந்தமற்றுப் பரமபதத்திலேபோய் ஏற்றமாக அநுபவிக்கு. மதிற்காட்டில் நான் பேறாக நினைத்திருப்பது இத்தையே” என்கிற ஈட்டு ஸ்ரீஸூக்திகள் ரஸிக்கத்தக்கன இங்கு, இளையாற்றுக்குடி நம்பி யென்பாரொரு பரமபக்தருடைய இதிஹாஸமொன்றும் அருளிச்செய்யப்பட்டுள்ளது. அவர் திருநாட்கள்தோறும் கோயிலுக்கு வந்து பெருமாளை ஸேவித்துப்போவராம் போனால், மீண்டும் திருநாள் வருமளவும் அதனையே போது போக்காக ஸ்மரித்துக்கொண்டிருப்பராம். அவர் நூறு வயஸ்ஸூம் புகுகையாலே பலஹாநி பிறந்த திருமுளைத் திருநாளில் பெருமாள் புறப்பட்ட ஷருளுகைக்கு உதவவந்து புகுரப்பெற்றிலர். பெருமாளும் தேடியருளிக்காணாமை ‘நம் இளையாற்றுக்குடியான் வந்திலன், நம் கண்ணுலமல்லவோ’ என்று திருவுள்ளமானாராம். அவர் தாம் ஆறாந்திருநாளிலே; ஸேவித்திருக்கச்செய்தே ‘நாம் உனக்குச் செய்யவேண்டுவதென்?’ என்று கேட்;டருள், ‘தேவரீர் தந்தருளின சரீரத்தைக்கொண்டு போர ஜாஜீத்தது’ என்ன, ‘வாராய்! மெய்யே யிளைத்தாயாகில் இங்ஙனேயிரு’ என்றருளிச் செய்தார். பெருமாள் நடுவில்திருவாசலுக்கவ்வருகே யெழுந்தருளுஙகாட்டில் திருநாட்டுக்கெழுந்தருளினார்”

 

English Translation

Will I ever contemplate without end from here the lotus-feet of the beautiful Krishna?  The glorious Lord of the worlds was born in Mathura.  He resides in Tiruvaranvilai amid sugarcane and paddy

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top