(3659)

(3659)

இங்குமங் கும்திரு மாலன்றி இன்மைகண்டு,

அங்ஙனே வண்குரு கூர்ச்சட கோபன் சொல்,

இங்ஙனே சொன்னவோ ராயிரத் திப்பத்தும்,

எங்ஙனே சொல்லினும் இன்பம் பயக்குமே.

 

பதவுரை

இங்கும் அங்கும்

இவ்விபூதியிலுண்டான ஆச்ரயண வேளையிலும் அவ்விபூதியிலுண்டான கைங்கர்ய தசையிலும்

திருமால் அன்றி இன்மை கண்டு

லக்ஷ்மீபதியல்லது வேறெருவர் உர்தேச்யால்லாமையை யறுதியிட்டு

அங்ஙனெ வண் குரு கூர் சட கோபன்

அவ்வண்ணமாகவே யிருப்பவரான ஆழ்வார்

இங்ஙனே சொன்ன

இப்படியருளிச் செய்த

ஒர் ஆயிரத்து இப்பத்தும்

ஆயிரத்துள் இப்பதிகம்

எங்ஙனே சொல்லிலும்

எப்படிச்  சொன்னாலும்

இன்பம் பயக்கும்

ஆனந்தாவஹமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இஹலோக பரலோகங்களிரண்டிலும் திருமாலல்லது தஞ்சமில்லை யென்னுமிடத்தை யநுஸந்தித்து. (அதாவது) ஸாதநாநுஷ்டாநவேளையோடு பலாநுபவழிவுளையோடு வாசியற இவ்வாத்மதாவுக்கு திவ்யதம்பிகளே தஞ்சமென்று அத்யவஸாயங்கொண்டு வாசியற இவ்வாத்மாவுக்கு திவ்யதம்பதிகளே தஞ்சமென்று அத்யவாஸாயங்கொண்டு அந்த ப்ரதிபத்தியே வடிவெடுத்திருப்பவரான ஆழ்வார் தம்மைத் திருவாய்மொழி பாடுவித்தருளின அம்மஹோபகாரத்தைப் பற்றிப் பேசின இத்திருவாய்மொழி அஹ்ருதயமாகவோ ஸஹ்ருதயமாகலோ எப்படி யநுஸத்தித்தாலும் இன்பம் பயக்ரூமென்று இதனையே பலனகச் சொல்லித் தலைக்கட்டினாராயிற்று.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top