(3658)
உதவிக்கைம் மாறென் னுயிரென்ன வுற்றெண்ணில்,
அதுவும்மற் றாங்கவன் றன்னதென் னால்தன்னை,
பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு,
எதுவுமொன் றுமில்லை செய்வதிங் குமங்கே.
பதவுரை
|
உதவி கைம்மாறு |
– |
திருவாய்மொழி பாடுவித்துக் கொண்டவுதவிக்குப் பிரதியுபகாரம் |
|
என்உயிர் என்னவுற்று எண்ணில் |
– |
என்னுடைய ஆத்மா என்று சொல்ல நினைத்தால் |
|
அதுவும் அவன் தன்னது |
– |
அவ்வாக்மவஸ்துவும் அவனுடைய பொருளாகவே யிரா நின்றது; |
|
(ஆனபின்பு) |
||
|
என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு |
– |
என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு |
|
இங்கும் அங்கும் |
– |
உபயவிபூதியிலும் |
|
செய்வது |
– |
செய்யக்கூடிய கைம்மாறு |
|
எதுவும் ஒன்றும் இல்லை |
– |
மிக அற்பமானதுமில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அவனுடைய பேருதவிக்கு ஒருபடியாலும் கைம்மாறு இல்லையென்கிறார். ஆழ்வீர்! உபகாரஸ்ம்ருதிக்குக் காலம் போருகிறதில்லை யென்று நீர் புண்பட்டு இதை மீண்டுமீண்டும் பேசுவானேன்? உம்மதாயிருப்பதொரு பொருளை அவனுக்குக்கைம்மாறக கொடுப்பது? என் ஆத்மாவை அவனுக்குக் கொடுக்கலாமெனறு பார்த்தாலோ, அதுவும் பண்டே அவனுக்கு அடிமையாதலால் இங்குமங்கும் இதுக்கொரு கைம்மாறு செய்யலாவாதில்லையே, என்று தடுமாறுகின்றார்.
English Translation
What can I give in return for his favour of singing with my tongue? I wonder! The songs in his praise are so moving, there is nothing of equal merit in this or another word.
