(3657)
திறத்துக்கே துப்புர வாம்திரு மாலின்சீர்,
இறப்பெதிர் காலம் பருகிலும் ஆர்வனோ,
மறப்பிலா வென் னைத்தன் னாக்கியென் னால்தன்னை,
உறப்பல இன்கவி சொன்ன வுதவிக்கே?
பதவுரை
|
மறப்பு இலா என்னை |
– |
மறப்புக்கு விஷயமில்லாதபடி ஸ்மரணமேயில்லாதிருந்த வென்னை |
|
தன் ஆக்கி |
– |
தன்னோடொக்க வீஷயீகரித்து |
|
என்னால் தன்னை உறபல இன்க சொன்ன உதவிக்கு |
– |
என்னைக்கொண்டு தனக்குப் பொருத்தமாகப் பல இனிய பாசுரங்களைப் பாடுவித்த மஹோபகாரத்திற்கு, |
|
திறத்துக்கு ஏய் துப்பரவு ஆம் திருமாலின் சீர் |
– |
எந்த விஷயத்திலும் பொருத்தமான ஸாமர்த்தியத்தையுடைய திருமாலின் குணங்களை |
|
இறப்பு எதிர் காலம் |
– |
இறந்த காலத்தையும் எதிர் காலத்தையும் கூட்டிக்கொண்டு |
|
பருகிலும் |
– |
அநுபவித்தாலும் |
|
ஆர்வனோ |
– |
பர்யாப்தி பெறுவேனோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டிற் சொன்னதுதன்னையே இன்னமும் சிறிது சித்திரித்துப் பேசுகிறார்.
நிகழ்காலத்தில் மாத்திரமன்று; இறந்தகாலத்தில் எத்தனை சேதநர்கள் கழிந்தார்களோ. இனி, எதிர்காலத்தில் எத்தனை சேதநர்கள் தோன்றுவர்களோ அவர்களெல்லாருடையவும் சக்தியையும் உபகாணங்களையுங் கொண்டு அநுவித்தாலும ஆரமாட்டேன்; அவர்களோடு கூடியநுபவித்தாலும் ஆரமாட்டேன் என்றாராயிற்று.
English Translation
Even if I drink through past and future, will that quench my thirst for singing his glory? He favoured me by making this mindless me his, and with my tongue he song his moving songs
