(3644)

(3644)

துயரங்கள் செய்யுங்கண்ணா! சுடர் நீண்முடி யாயருளாய்,

துயரம்செய் மானங்க ளாய்மத னாகி உகவைகளாய்,

துயரம்செய் காமங்க ளாய்த்துலையாய்நிலை யாய்நடையாய்,

துயரங்கள் செய்துவைத் தியிவை யென்னசுண் டாயங்களே.

 

பதவுரை

துயரங்கள் செய்யும் கண்ணு

துக்கங்களையுண்டாக்குகிற கண்ணனே!

சுடர் நீள் முடியாய்

ஒளிமிக்கு ஓங்கின திருவபிஷேகத்தை யுடையவனே!

துயரம் செய்

துக்கத்தை விளைக்கிற

மானங்கள் ஆய்

பலவகைப்பட்ட துரபிமானங்களாய்

மதன் ஆகி

செருக்குமாய்

உகவைகள் ஆய்

ப்ரீதிகளுமாய்

துயரம் செய் காமங்கள் ஆய்

துக்கங்களை விளைக்கிற காமங்களாய்

துலை ஆய் நிலை ஆய் நடை ஆய்

பரிமாணங்களாய் ஸ்தாவர ஜங்கமங்களாய்

துயரங்கள் செய்து வைத்தி

(இப்படி சேதநர்களுக்கு) துக்கங்களைப் பண்ணிவைக்கிறாய்;

இவை என்ன சுண்டாயங்கள்

இவை என்ன விளையாட்டுக்களோ!

அருளாய்

அருளிச்செய்யவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இங்கு துயரங்கள் செய்யுங்கண்ணு! என்று எம்பெருமானை விளிக்கின்றார்; ஏஷஹயே வாநந்தயாதி என்று உபநிஷத்து ஓதுகின்றது; ஆனந்தப்படுத்துகிறவனாகலேநப்பட்ட எம்பெருமானை நோக்கி ‘துயரங்கள் செய்யுங்கண்ணு’ என்னலாமோவென்னில், ஆழ்வார்க்குக் கண்ணன் செய்யும் துயரம் இன்னதென்பது “சுடர்நீண்முடியாய்” என்ற அடுத்த வார்த்தையினால் விளக்கப்பட்டது, ஈடு—“முடிச்சோதியிற்படியே திருவபிஷேகத்திலழகைக் காட்டியாயிற்று துக்கங்களைப் பண்ணுவது.” ஆறாயிரப்படி—“உன்னுடைய திருவபிஷேகத்திலழகாலே நலியும் க்ருஷ்ணனே!”. திருக்குரவையிலே ஆய்ச்சியரோடு குழைந்து கலந்து பிரிந்தபோது அவர்கள் ஏற்கெனவே பேசுகிற பேச்சாயிருக்குமிது லென்றுணர்க.

மதனாகி உதவைகளாய்-‘மதம்’ என்கிற வடசொல் மதன் என்று கிடக்கிறது; மகரகரப்போலி. மதமாவது பொருள் முதலியவை கிடைப்பதால் வரும் களிப்பு. உகவை—ப்ரீதி. துரயம் செய் காமம்-காமமானது ஹேயமாகவும் உத்சேயமாகவுமுண்டு. விஷயாந்தரங்களைப் பற்றின காமம் ஹேயம்; பகவத் விஷயத்தைப் பற்றின காமம் உத்தேச்யம். இராமாநுச நூற்றந்தாதியில் சேமநல்வீடும் பொருளுந் தருமமும் சீரிய நற்காமமும் என்றிவை நான்கென்பர், நான்கிநுஷனுங் கண்ணனுக்கேயாமது காமம் என்றதுங் காண்க.

துலை—பதார்த்தங்களின் தாரதம்யத்தை நிரூபிக்குமதான எடை. நிலை—நிலைத்து நிற்கும் ஸ்தாவர பதார்த்தங்கள். நடை—நடந்து செல்லும் ஜங்கமபதார்த்தங்கள். அல்லது, ஸ்தாவர ஜங்கம பதார்த்தங்களிலுள்ள ஸ்திதி கமனங்களாகிற தருமங்களைச் சொன்னதாகவுமாம்.

துயரங்கள் செய்துவைத்தி-இப்படிப்பட்ட விருத்தவிபூதிகளைச் சிந்திக்கும் போது நெருககுப்படவேண்டியிருந்தலால் ‘துயரங்கள் செய்து வைத்தி’ என்கிறார்

 

English Translation

O Hardships! My Krishna, Lord with a tall crown! Tell me, The afflicting pride, insolence and love, the afflicting desires, the heavy, the still, the moving, -you made these and caused me grief, -what games are these?

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top