(3640)
சித்திரத் தேர்வலவா! திருச் சக்கரத் தாய்!அருளாய்,
எத்தனை யோருக முமவை யாயவற் றுள்ளியுலும்,
ஒத்தவொண் பல்பொருள் களுலப் பில்லன வாய்வியவாய்,
வித்தகத் தாய்நிற்றி நீயவை யென்ன விடமங்களே.
பதவுரை
|
சித்திரம் |
– |
விசித்திரமாகத் தேரை நடத்த வல்லவனே! |
|
தேர் வலவா திரு சக்கரத் தாய் |
– |
திருவாழிப்படையை யடையவனே! |
|
அருளாய் |
– |
நீயருளிச் செய்ய வேணும்; |
|
எத்தனை ஓர் உகமும் அவை ஆய் |
– |
க்ருதம் முதலான யுகங்களுக் கெல்லாம் நிர்வாஹனாகய் |
|
அவற்றுள் இயலும் |
– |
அந்த காலங்களுக்குள்ளே நடப்பதாய் |
|
ஒத்த விய ஒண்பல் உலப்பு இல்லன பொருள் ஆய் |
– |
ஒருபடியாலே ஒத்தும் மற்றொருபடியாலே வேறுபட்டுமிருக்கிற அழகிய பல எண்ணிறந்த பதார்த்தங்களுமாய் |
|
வித்தகத்தால் நீ நிற்றி |
– |
ஆச்சரியப்படத்தக்க தன்மையோடே நீ நிற்கின்றாய்; |
|
இவை என்ன விடமங்கள் |
– |
இவை யென்ன சேராச்சேர்த்திகளோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் வெங்கண் வெங்கூற்றமுமாய் என்றாரே; மண்ணின் பாரம் நீக்குதற்கு வடமதுரையிற் பிறந்த பிறவியிலேயே, மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தன் சிலைவளையத் திண்தேர்மேல் முன்னின்று அதனை நடத்தின விசித்திரம் நினைவுக்குவர. சித்திரத் தேர்வலவா திருச்சக்கரத்தாய்! என்று விளிக்கிறார். தேரை நடத்தும் போது விசிக்திரமான பலபல காரியங்கள் செய்தமையுண்டு. பெரியயாழ்வார் தமது திருமொழியில் (4 – 2 – 7.) மன்னர்மறுக மைத்துனன்மார்க்கொருதேரின்மேல். முன்னங்குநின்று மோழையெழுவித்தவன் என்கிற பாசுரத்தனைலீல் ஒரு விசித்திரமான இதிஹாஸமருளிச் செய்கிறார்: அதாவது-அர்ஜூநனுடைய தேர்க்குதிரைகள் தண்ணீர்க்கு விடாய்த்து இளைத்தவளவில், அவன்பக்கல் பக்ஷ்பாதியான கண்ணபிரான், கடினமான ஸ்தலத்திலும் நீர்நிரம்பு அறியவல்லவனாதலால், அங்கு வாருபிரான், கடினமான ஸ்தலத்திலும் கீழுள்ள நீரை வெளிக் கிளப்பிக் குதிரைகளைவிட்டு நீரூட்டிப் புரட்டி யெழுப்பிக்கொண்டு போந்து பூட்டிக்கொண்டுவந்து முன்னே நிறுத்த, இதைக்கண்ட மாற்றரசரெல்லாம் ‘இக்கண்ணனுக்கு அர்ஜூனன்பக்கல் பக்ஷ்பாதமிருந்தபடியென்! இனி நாம் இவனை வெல்லுகையென்று ஒன்றுண்டோ? என்று குடல்மறுகினராம். இப்படியாகச் செய்த பல பல விசித்திரங்கள் காணத்தக்கன. பாரதப்போரில் பீஷ்மாசார்யர் ஒரு அரிய பெரிய வார்த்தை சொல்லுகிறார் = நான் ஓர் அம்பினால் லயே பாண்டவர்கள் ஐவரையும் அவர்களது சேனைத் தொகையையும் அவலீலையாகச் சாடிவிடுவேன்; ஆனால் மாயவனான கண்ணபிரான் அங்குத் தேர்ப்பாகனாய் அமைந்ததனால் என் வல்லமை சிறிதும் பயன்படாதொழிகின்றது; அவன் தேரை நடத்துகிற விதம் விசித்திரமாயன்றோ இராநின்றது என்று. அப்படி எதிரிகளும் வியக்கும்படியான திறமையைத் திருவுள்ளமபற்றிச் சித்திரத்தேர்வலவாவென்கிறார்.
‘சித்திரத்தேர்வலவா!’ என்றதற்கு அடுத்தபடியாகத் திருச்சக்கரத்தாய்! என்கையாலே சக்கரத்தாற்வானைக்கொண்டு செய்த விசித்திரமும் இங்கு அநுஸத்திக்கத்தக்கது. அர்ஜூநன் பதின்மூன்றாநாட் போரில் தன்மகனான் அபிமந்யுவைக்கொன்ற ஜயத்ரதனை (துரியோதனனது உடன்பிறந்தவள் கணவனை) ‘நாளை அஸ்தமிப்பதற்குமுன்னே கொல்லாவிடின் தீக்குதித்து உயிர்விடுவேன்’ என்ற ப்ரதிஜ்ஞை பண்ண, அதனையறிந்த பகைவர்கள் பதினென்கா நாளாகிற மறுநாட்பகல் முழுவதும் ஜயத்ரனை வெளிப்படுததாமல் ஸேனையின்நடுவே நிலவறையில் மறைத்து வைத்திருக்க, அர்ஜூனனது சபதம் பொய்த்துவிடுமேயென்று சிந்தித்த கண்ண பிரான்! ஸூர்யனை அஸ்தமிப்பதற்குச் சில நாழிகைக்கு முன்னமே தன் சக்கரப்படையினால் மறைத்துவிட, அப்பொழுது எங்கும் இருளடைந்த்தனால் அர்ஜூநன் அக்நிப்ரவேசஞ் செய்யத்தொடங்க, அதனைக்களிப்போடு காணுதற்குத் துரியோதனாதிளருடனே ஜயத்ரதன் வந்து எதிர்நிற்க, அச்சமயத்திற் கண்ணன் திருவாழியை வாங்கி விடவே பகலாயிருந்ததனால் உடனே அர்ஜூநன் ஜயத்ரதனைத் தலைதுணித்தனன் என்ற விசித்திர சரித்திரம் இங்கு நினைக்கத்தக்கது இக்கதையில் ஒரு சங்கை தோன்றும். ஸூதர்நம் பாஸ்கரகாடிதுல்யம் என்கிறபடியே கோடிஸூப்யப்ரகாசமுடையவனன்றோ திருவாழியாழ்வான்; அன்னவனைக்கொண்டு ஸூப்யப்ரகாசத்தை மறைத்து இருளையுமுண்டாக்கினதும் ஒரு விசித்திரமென்று கொள்வது. மற்றும் பரிஹாரவகை வல்லார் வாய்க்கேட்டுணர்க.
எத்தனையோருகமுமவையாய்-க்ருதம் முதலிய யுகங்களுக்கெல்லாம் நிர்வாஹகனே! த்யாயந் த்ருதே யஜந் யஜ்ஞைஸ் த்ரேதாயாம் திவாபரோ;ச்சயந், யதாப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம். என்கிறபடியே நான்கு யுகங்களுக்கும் தருமங்களான த்யானம், யஜநம், அர்ச்சனம், நாமஸங்கீர்த்தனம் ஆகிய இவற்றில் ஆராதிக்கப்படுபவன் சதுர்யுகங்கள் அனேகமாயிரம் சென்றமை பெறப்படும்.
(அவற்றுள்ளியலும் இத்யாதி.) இப்படி நடக்கின்ற காலகலேகளுக்குள்ளேயுள்ள பொருள்களுக்கு அவதியில்லையே; அவை ஓரொரு படியாலே யொத்தும் வேறொரு படியாலே வேறுபட்டுமிருக்கும். தேவர்கள் மநுஷ்யர்கள் விலங்குகள் என்கிற வகைகளினாலே யொத்திருக்கையும் வயக்திபேத்தாலே வேறுபட்டிருக்கையும் உணரத்தக்கன. இப்படி பலவகைப்பட்ட பதார்த்தங்கள் எண்ணிறந்தவற்றை விபூதியாக வுடையையாய்.
“வித்தகத்தால் வித்தகத்தாய்” என்று பாடபேதங்களுள்ளனவாகக் காட்டுகி;ன்றார் சிலர். ஏதேனுமொரு பாடமே பூருவர்களனைவாக்ககுமுடன்பாடென்று கொள்ளலாம்.
இவையென்னவிடமங்களே!-இவை யென்ன சேராச்சேர்த்தியான செயல்கள்!. விஷமமென்ற வடசொல் விடமமெனத் திரிந்தது. ஸமமல்லாதது விஷமம்.
English Translation
Beautiful discus Lord Deft Charioteer! Pray speak; the many countless eyes, -and moving within them, the countless myriad objects, transient or not, -wondrously you stand as these, what mischief’s are these?
