(3639)

(3639)

அங்கண் மலர்த்தண் டுழாய்முடி அச்சுதனே! அருளாய்,

திங்களும் ஞாயிறு மாய்ச்செழும் பல்சுட ராயிருளாய்,

பொங்கு பொழிமழை யாய்ப்புக ழாய்பழி யாய்ப்பின்னும்நீ,

வெங்கண்வெங் கூற்றமு மாவிவை யென்ன விசித்திரமே.

 

பதவுரை

அம் கள் மலர் தண்துழாய் முடி

அழகிய மதுவைக் கொண்ட பூக்களை யுடைத்தான் குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த மயிர்முடியையுடைய

அச்சுதனே

எம்பெருமானே!

அருளாய் நீ

அருளிச்செய்யவேணும்;

திங்களும் ஞாயிறும ஆய்

சந்திரனும் ஸூர்யனுமாயும்

செழு பல் சுடர் ஆய்

லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும்

இருள் ஆய்

இருளாயும்

பொங்கு  பொழி மழை ஆய்

பொங்கிப் பொழியும் மழையாயும்

புகழ் ஆய் பழி ஆய்

கீர்த்தியாயும் அபகீர்த்தியாயும்

பின்னும்

இன்னமும்

வெம் கண் வெம் கூற்றமும் ஆய் இவை

க்ரூரமான கண்களையும் க்ரூரஸ்வபாவத்தையு முடைய ம்ருத்யுவாயும் நிற்கிற இந்த ப்ரகாரங்கள்

என்ன விசித்திரம்

என்ன வேடிக்கை களோ!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் ‘நீ நீயாய் நின்றவாறு’ என்று அஸாதாரணமான ஆகாரத்தை அநுஸந்தித்தாரே; அதனை வாய்விட்டுப் பேசி யநுபவிக்கிறார் – அங்கண்மலர்த்தண்டுழாய் முடியச்சுதனே! என்று திங்களும் ஞாயிறுமாய் – “யதா ப்ரஹ்லாதநாச்சந்த்ர: ப்ரதாபாத் தபநோ யதா” என்றபடியே இருவர்க்கும் இரண்டு காரியங்கள் நியதங்களாயிருக்குமே; தாபத்தையாற்றுவதும் தாபத்தை விளைப்பதும். இவையிரண்டுமவனிட்ட வழக்கு. செழும்பல்சுடராய்-அவரவர்களுக்கு  வரக்கூடிய நன்மை தீமைகளுக்கு ஸூசகங்களாய்க் கொண்டு ஸூசகங்களாய்க் கொண்டு நக்ஷ்த்திரங்கள் க்ரஹங்கள் முதலியவற்றுக்கும் நிர்வாஹகனென்றபடி. இருளாய்-சுடராயிருப்பவனும் தானே, சுடர்க்கு எதிரான இருளாயிருப்பனும் தானே. உலகில் ஒளியைத் தேடுவார் சில ரேயாவர்; இருளைத் தேடுமவர்களே பலராவர்; மாமுகர்க்கும் கள்ளர்க்கும் இருள் தேட்டமாயிருக்குமே; அன்னவர்கட்கும் உதவியாம்படி இருளாயிருப்பன்.

பொங்குபொழிமழையாய் – ஸகல ப்ராணிகளுக்கும் ஜீவிக்கலாம்படி பயிர்களை யுண்டாக்கி வளர்க்கும் மழையும் தானாயிருக்கும். புகழாய்ப்பழியாய் = தோன்றில் புகழொடு தோன்றுக, அஃதிலார் தோன்றிலில் தோன்றாமை நன்று  (திருக்குறள்) என்றபடி எல்லாரும் விரும்பக் கூடிய புகழும் தானாய், வேண்டாத பழியும் தானாய். வெங்கண் வெங்கூற்றமுமாய் – இவ்வுலகங்கள் அதிப்ரவ்ருத்தியில் கைவளர்ந்த போது குளிர நோக்குமது தவிர்த்து வெவ்விய நோக்கையுடைய யமன்போன்று. ஸம்ஹாரகனாய் யமனுக்கும் யமனாயிருக்கிறபடியைச் சொல்லுகிறது. உபநிஷத்தில் ம்ருத்யுர் யஸ்யோபஸேசநம் என்று ஓதிற்று. பகவானுக்கு யமன் ஊறுகாய் என்றது உலகி;ல் ஊறுகாயின் தன்மை எப்படிப்பட்டகென்று பார்க்கவேணும். ப்ரஸாதம் முதலியவற்றை உட்கொள்ளுவதற்கு பிறகு அது மிச்சப்பட்டிருந்தால் அதையுமெடுத்து உட்கொள்ளுகிறோம். இதுபோல ம்ருத்யுவைக் தருவயாகக்கொண்டு எல்லாவற்றையும் அந்தமடைவித்து, பிறகு ம்ருதபுதன்னையும் லய்மடைவிக்குந்தன்மை இதனால் தெரியவரும்.

இவையென்ன விசித்திரமே அருளாய் =  இப்படி சேராச்சேர்ததியான பதார்த்தங்களெல்லாமுமாயிருக்கிற தன்மை மிக விசித்திரமாயிராநின்றது. இதனைத் தெரியவருளிச் செய்யவேணும்.

 

English Translation

Beautiful Tulasi-wreathed Lord, Achyuta! Pray tell me! You are the Moon, The sun, the stars, darkness and thundering rain. Great fame, blame, and the sinister-eyed god of death are also. you: what wonders are these?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top