(3596)

(3596)

நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்

நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்

நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்

ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.

 

பதவுரை

அப்பன்

ஸர்வேச்வரன்

ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாள்

(பிராளயங்கதையான பூமியைக்) குத்தியிடந்தெடுத்து எயிற்றின் மேலே கொண்ட காலத்தில்

ஏழ் மண்ணும்

ஏழு தீவுகளான பூமி பேதங்களானவை

நான்றில

நழுவாதவையாய்

தானத்த

தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;

பின்னும்

மேலும்

ஏழ் மலை

ஸப்த குலாசங்களும்)

நான்றில

சலியாதவையாகி

தானத்த

தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன;

பின்னும்

மேலும்

ஏழ் கடல்

ஸப்த ஸாகரங்களும்

நானறில

உடைந்தொழுகாதவையாய்

தானத்த

தங்கள் ஸ்தானத்திலேயே யிருந்தன.

ஆச்சரியம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நான்றிலவேழ்.) மஹாவராஹ மூர்த்தியாகி நிலத்தை யிடந்தெடுத்த வரலாற்றை யநுஸந்திக்கிறாரிப்பாட்டில். ரஸாதலத்தில் கிடந்த பூமியை என்னப்பன் திருவெயிற்றாலே இடந்தெடுத்தருளின போது ஸப்தத்வீபங்களும் ஸப்தகுல பர்வதங்களும் ஸப்த ஸாகரங்களும் தம்தம் ஸ்தானங்களிலே நிச்சலமாயிருக்கும்படி யெடுத்தருளினான், இதென்ன ஆச்சரியம்! என்கிறார். ஒரு வ்யாபாரத்தாலே செய்த தாயிராமல் ஸ்வஸங்கல்பத்தாலே ஆச்சரியமாகச் செய்த வித்தனையென்று ஈடுபடுகிறபடி. இங்கே ஈட்டு -ஸீக்தி காண்மின்;- “இவன் பெரிய வானைத்தொழிலைச் செய்யா நிற்கச் செய்தேயும் முன்பு போலே ஒரு குறையற உண்டாருடுப்பாராய்ச் செல்லுகிபடி. ஆதாரமானவன்கூட நிற்கையாலே இவற்றுக்கு ஒரு குறைவாராதே.”

முன் ஒரு காலத்தில் பூமியைப் பாயாகச் சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்யாக்ஷ்னென்னுமசுரனைத் திருமால் மஹாவராஹமாகத்திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின் என்பது வராஹாவதார வரலாறு. அந்தக் கோலாஹலத்தில், ஸப்த த்வீபரூமான பூமிபேதங்களும் குலாசலங்களும் ஏழ்கடல்களும் ஒரு மாறுபாட்டையாதே நிச்சலமாகி ஸ்வஸ்வ ஸ்தானங்களிலே யிருந்தன வென்பது இங்கு ஆச்சரியம்.

 

English Translation

The seven plains stood firmly in place, the seven mountains stood firmly in place, the seven oceans stood firmly in place, when my Father lifted the Earth with his tusk teeth!

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top