(3590)

(3590)

கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக் கார்க்கடல் வண்ணனோ டெந்தி றத்துக்

கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக் கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,

மண்டிணி ஞால முமேழ் கடலும் நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,

தெண்திரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த தெந்திருப் பேரையில் சேர்வன் சென்றே.

 

பதவுரை

கண்டதுவே கொண்டு

வெளியில் காணக்கூடிய எனது மேனி நிறமாறுதல் முதலிய வற்றையே கொண்டு

எல்லாரும்

தாய்மார் ஊரர் ஆகிய எல்லாரும்

கூடி

ஒன்றுசேர்ந்து

கார் கடல் வண்ணனோடு என் திறத்து கொண்டு

கருங்கடல் வண்ணனான எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்க்கை யுண்டாதாகக் கொண்டு

அலர் தூற்றிற்றது முதல் ஆ கொண்ட

பழி தூற்றினதுவே முதலாக இடங்கொண்ட

என் காதல் உரைக்கில்

எனது காதலைப பாசுரமிட்டுச் சொல்லிப் பார்க்கில்

தோழீ

தோழீயே!,

(என்காதல் எப்படிப் பட்டதென்னில்)

மண் திணி ஞாலமும்

மண் செறிந்த பூமியும்

ஏழ் கடலும்

(அதைச் சூழ்ந்த) ஸப்த ஸகாரங்களும்

நீள் விசும்பும்

இதெல்லாவற்றுக்கும் இடங்கொடுக்கும் மஹாவகாசமான ஆகாதமும் ஆகிய இத்தனைக்கும்

கழிய

அவ்வருகுபட்டதாய்

பெரியது ஆல்

பெருந்திராநின்றது;

(ஆனபின்பு)

தெண் திரை சூழ்ந்து

தெளிந்த அலைகளாலே சூழப்பட்டு

அவன்வீற்றிருந்த

அப்பெருமான்வீற்றி ருக்குமிடமான

தென் திருபேர் எயில்

தென் திருப்பேரைப் பதியை

சென்று சேர்வன்

எனது தாபம் தீரும்படி சென்று சேரக்கடவேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கண்டதுவே கொண்டு) ஊரார் பழி சொல்வதே பெருவாக எனக்கு வளர்ந்து செல்லுகின்ற காதாலனது ஸகலலோகங்களையும் கபளீகரித்துச் செல்லா நின்றது; ஆனபின்பு அவனிருந்த திருப்பேரையிலே சென்றல்லது நிற்க மாட்டேனென்கிறாள்.

கண்டதுவே கொண்டு என்பதற்கு ‘அப்பெருமானை நான் கண்ணாலே கண்ட மாத்திரத்தையே கொண்டு’ என்று பொருள் தோன்றக்கூடுமானாலும் அதுவன்று பொருள்; வெளியில் காணும் என் செயல்களையே கொண்டு என்று பொருள். அதாவது என்னெஞ்சினுள்ளே ஓடுகின்ற ஆசைப்பெருக்கை ஒருவனங் காணமுடியாதே; நான் வாயாற் சொல்லுகிற சில வார்த்தைகளையும் தொழுவது அழுவதான் சிவபடிகளையுமன்றோ இவ்வுலகர் காண்பது; என்மேனி மேலிந்திருப்பதையும் இவர்கள் காணக்கூடும். ஆக இவர்கள் காணுமிவ்வளவையே கொண்டு என்றவாறு. இந்த ப்ரத்யக்ஷ் பரிகவித நிமித்தங்களாலே எம்பெருமானுக்கும் எனக்கும் சேர்த்தியுண்டானதாகக்  கூறி உலகர் பழிதூற்றுகின்றார்களே, இப்பழி தூற்றதலே வினைநீராக என் காதல் வளரத் தொடங்கிற்று; அங்ஙனம் வளாந்த காதலானது ஞானமும் கடலும் விசும்பும்  ஆகிய இவையெல்லாம் ஏகதேசயென்னும்படி வளர்ந்திட்டது; இப்படிப்பட்ட பசியைக் கொண்டு நான எங்ஙனே  ஆறியிருக்கும்படி; தென்திருப்பேரையில் சென்று சேர்ந்தே காதல் தீர அநுபவித்துக் களிப்பேனென்றதாயிற்று.

கீழே (5-3-4) ஊரவர்கவ்வை யெருவிட்டு என்ற பாசுரத்தின் உரையையும் இங்கே நோக்கிக் கொள்வது.

 

English Translation

O Sakhis! For the very reason that you all gather and join hands with my Lord in heaping blame over me, my love grows.  If I were to tell you how, if would exceed the Earth and sky, I must go then to my Lord and join him in Tiruppereyil, lapped by waters

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top