(3579)
கொழுந்துவா னவர்கட்கு என்னும் குன்றேந்திக் கோநிரை காத்தவன்! என்னும்,
அழுந்தொழும் ஆவி அனலவெவ் வுயிர்க்கும் அஞ்சன வண்ணனே! என்னும்,
எழுந்துமேல் நோக்கி யிமைப்பிலள் இருக்கும் எங்ஙனே நோக்குகேன்? என்னும்,
செழுந்தடம் புனல்சூழ் திருவரங் கத்தாய். என்செய்கேன் என்திரு மகட்கே?
பதவுரை
|
(இப்பெண் பிள்ளையானவள்) |
||
|
வானவர்கட்கு கொழுந்து என்னும் |
– |
நித்ய ஸூரிகளுக்குத் தலையானவனே! என்கிறாள்; |
|
குன்று ஏந்தி |
– |
கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து நின்று |
|
கோ நிரை காத்தவன் என்னும் |
– |
பசுக்களின் கூட்டத்தைக் காத்திருளினவனே! என்கிறாள்; |
|
ஆழும் |
– |
கண்ணுங் கண்ணீருமாயிருக்கின்றான்; |
|
தொழும் |
– |
அஞ்ஜலி பண்ணா நின்றான்; |
|
ஆவி அனல் வெவ்வுயிர்க்கும் |
– |
ஆத்மாவஸ்து கொளுந்தும்படி வெப்பமாகப் பெருமூச்சுவிடாநின்றாள்; |
|
அஞ்சனம் வண்ணனே என்னும் |
– |
அஞ்சனனேமனியனே! என்கிறாள்! |
|
(இக் கூக்குரலைக்கேட்டு நினைத்து) |
||
|
மேல் எழுந்து நோக்கி |
– |
மேலே தலையெடுத்துப் பார்த்து |
|
இமைப்பு இலள் இருக்கும் |
– |
இமையாத கண்ணினளாய் இருக்கின்றாள்; |
|
எங்ஙனே நோக்கு கேன் என்னும் |
– |
எந்த பிரகாரத்தாலே உன்னைக் காண்பேன்? என்கின்றாள்; |
|
செழு தடம் புனல் சூழ்திரு அரங்கத் தாய் |
– |
மிகச் சிறந்த தீர்த்தம் கண் வளாந்தருளுமவனே! |
|
என் திருமகட்கு |
– |
– பிராட்டியோ டொத்து என் பெண்மகள் விஷயத்திலே |
|
என் செய்கேன் எதைச் செய்வனே? |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
(கொழுந்து) பிரானே! உன்னுடைய பரத்வ்தையும ஸௌலப்யத்தையும் மாறிமாறி யநுஸந்தியா நின்றாளென்மகள்; வானவர்கட்குக் கொழுந்தே! என்று பரத்வத்தைப் பேசினவாறே கோநிரை காத்தவனே என்று ஸௌலப்யத்தைப பேசுகின்றாள்; குன்றேந்தினவனே! என்ற பின்னையும் ஒரு பரத்வத்தைப் பேசுகின்றாள். பரத்வத்தைக்கண்டு இகழாமைக்காகப் பரத்வத்தைப் பேசுவதும் மாறிமாறிச் செல்லுமே மெய்யன்பர்களுக்கு.
அழும் தொழும்-பக்தி பரவசரைப்போலே கண்ணுங் கண்ணீருமாயிருக்கிற படியும். ப்ரபந்நரைப்போலே அஞஜலிபந்தம் பண்ணாநிற்கிறபடியும் சொல்லிற்றாயிற்று. ஆவியானல் வெவ்வுயிர்க்கும்-கீதையிலே ஆத்மஸ்வரூபத்தைப் பேசும் போது அச்சேத்யோயம் என்று சொல்லிற்று. ஆவியானது தஹிக்கவொண்ணாதது என்றபடி. அப்படிப்பட்ட ஆவியும் தஹித்தகாம்படி வெப்பமாகப் பெருமூச்சு விடுகின்றாள். தன்னை இப்படியாக்கின்றது அஞ்சனமேனி யாகையாலே அதைச் சொல்லிக் கூப்பிடுகின்றார்-அஞ்சனவண்ணனே! என்கின்றாள்.
அங்ஙனம் கூப்பிட்டவாறே நீ வரக்கூடுமென்று எண்ணி எழுந்து மேல் நோக்குகின்றாள்; ஒரு க்ஷ்ணம் தோற்றி மறைந்து விடுவாயோவென்று இமையாதே யிருக்கின்றாள். (எங்ஙனே நோக்ககேனென்னும்) ஈடு;- “தான் பார்த்த திக்கில் வரக்காணாமையாலே பின்னோக்கி வந்து கட்டிக் கொள்ளுமென்று புரிந்து பாராநிற்கும்.”th
என் திருமகட்கு என் செய்கேன் -இவளுக்காக நான் ஏதேனும் உபாயக் அனுட்டிக்கலாகுமோ? என்னவுபாயத்தை யனுட்டிப்பேன். பிராட்டி உம்முடைய திருமார்பிலே நித்யவாஸம் பண்ணுகிறாப்போலே இவளும் உம்மை அகலகில்லாதே உம்மோடே பொருந்தியிருக்க வேண்டியவளன்றோ?
English Translation
O Ranga, what can I do for my precious daughter? She says; “O Lord of gods, you lifted a mount to protect the cows!”, she weeps and folds her hands, and sighs hotly as would dry her soul, she says, “O Lord, how can I see you?”, then looks up and stares
