(3564)

(3564)

சூது நானறி யாவகை சுழற்றியோர் ஐவரைக் காட்டி,உன்அடிப்

போது நானணு காவகை செய்து போதி கண்டாய்,

யாதும் யாவரு மின்றிநின் னகம்பால் ஒடுக்கியோ ராலி னீளிலை,

மீது சேர்குழவி! வினையேன் வினைதீர் மருந்தே!

 

பதவுரை

யாதும் யாவரும் இன்றி

சேதநாசேதநப் பொருள்களொன்றொழியாமல்

நின் அகம் பால் ஒடுக்கி

உன் திருவயிற்றின் ஏக தேசத்திலே ஒதுங்கும் படி பண்ணி

ஓர் ஆலின் நீள் இலை மீது

ஓர் ஆலமரத்தினுடைய சிறிய இலையின் மீது

சேர்குழவி

குழந்தையாய்க் கண்வளர்ந்தருளினவனே!

வினையேன் வினை தீர் மருந்தே

பாவியேனான வென்னுடைய பாவங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!

ஒர் ஐவரை காட்டி

பஞ்சேந்திலீயங்களைக் காட்டி

நான் சூது அறியாவகை

தான் உறுவது அறியாதபடி

சுழற்றி

என்னை மருளப்பண்ணி

உன் அடி போது நான் அணுகா வகை செய்து

உன் திருவடி மலர்களை நான் கிட்டாதபடி பண்ணி

போதி கண்டாய்

கண்காணாதபடி கடக்க நிற்கின்றாயே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சூது நானறியாவகை) பீரானே! உன் திருவடிகளைப் பெறுவதற்கு உபாயம் உன் திருவடிகளே யென்றிருக்கிற இந்த என்னுடைய அறிவுங்கூட அழியும் படி இந்திரியங்களைக்கொண்டு என்னைக் கலக்கி உன் திருவடிகளைச் சேராதபடி பண்ணவா நினைத்திருக்கிறாய் என்கிறார்.

சூது என்பதற்கு க்ருத்ரிமம் என்கிற பொருள் உலகில் ப்ரஸித்தமானலும் அந்தப்பொருள் இங்கு விவக்ஷிதமன்று: தொழக் கருது வகே துணிவது சூதே சூதாவதென்னெஞ்ச்த் தெண்ணினேன் என்ற விடங்களில் போல இங்குப் பொருள் கொள்க. சூது-உறுவது. இவ்வாத்மாவுக்கு விஷயப்ராவண்யம் விநாச ஹேது, எம்பெருமானை யநுபவத்தாலே உஜ்ஜீவநம் என்றபிவதன்றோ உறுவது; திருவடிமலர்களை நான் கிட்டாதபடி பண்ணிக் கண்ணுக்குத் தோற்றமே கடக்க நிற்கிறயே! இது தகுதியோ வென்கிறார்.

போதிகண்டாய் என்ற விடத்திறகு நம்பிள்ளை யருளிச்செய்வது-“கூடகடக்கப் போவாரைப் போலே” (இதன் கருத்தாவது) கொலைப் பாதகர்களான இந்திரியங்களோடே என்னைவைத்து எவ்வளவு வதை செய்தாலும், நீ அகன்று தடையிராற்று. கூடவேயிருந்தால் தயை பண்ண வேண்டிவருமே’ என்று நினைத்து அகன்று போவரைப்போலே நீயும் அகன்று போவதனால் வருத்தம் பொறுக்கக் கூடியதாக இல்லையே! என்றவாறு.

(யாதும் யாவருனின்றி இத்யாதி.) பிரானே! ஆபத்துக்களைப் போக்கிக் காத்தருவாது உன்பணியே யன்றி ஆபத்தைக் விளைப்பது உன் பணியன்றே; பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கி ஒர் ஆலந்தளிரிலே சிறு குழவியாய்க் கணவளர்ந்தருளுவைனான நீ உன்னுடைய ஆபத்ஸகத்வத்தை ப்ரஸித்தப்படுத்திக் கொண்டவனா யிருந்துவைத்து இப்போது எனக்கு ஆபத்தை விளைக்கப் பார்ப்பது தகுதியோ? என்றவாறு.

வினையேன் வினைதீர்மருந்தே!-பாபமே நிரூபகமான என்னுடைய பாபங்களைப் போக்கும் மருந்தாகவல்லவனே! என்றபடி. ஏற்கனவே எனக்கிருத்த பாவங்களைப் போக்கி விஷய ப்ராவண்யத்தில் நின்றும் மீட்டு உன்னளவிலே யீடுபடத்திக் கொண்டு இவ்வளவு செய்த நீ மறுபடியும் நான் விஷயப்ரவணானாம்படி வழிதேடுவது தகுதியோ? இந்நிலத்திலே வைப்பது விஷயங்ப்ரவணானாகைக்கு இட்ட வழியன்றோ.

 

English Translation

You planted these five senses like snares around me leaving no room for escape, you placed all things and beings without exception in your person, then slept as a child floating on a fig leaf.  O The medicine for my karmas! See, you have made me incapable of joining your lotus feet

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top