(3541)
ஞாலத் தூடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்,
சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே,
கோலத் திருமா மகளோ டுன்னைக் கூடாதே,
சாலப் பலநாள் அடியேன் இன்னம் தளர்வேனோ?
பதவுரை
|
உகம் தோறு |
– |
ஒவ்வொரு யுகத்திலும் |
|
ஞாலத்தூடே |
– |
பூமியிலே அவதரித்து |
|
நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும் |
– |
நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து |
|
சால பல நாள் |
– |
பல்லாயிரமாண்டளவும் |
|
உயிர்கள் காப்பானே |
– |
பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே! |
|
கோலம் திரு மா மகளோடு |
– |
உன்னழகுக்கு ஏற்ற அழகுடையளான திருமாமகளுடனே (கூடியிருக்கிற) |
|
உன்னை கூடாதே |
– |
உன்னைக்கிட்டி யநுபவிக்கப்பெறாமல் |
|
சால பல நாள் |
– |
(மேலுள்ள) மிகப்பலகாலமெல்லாம் |
|
இன்னும் அடியேன் தளர்வேனோ |
– |
உன்னுறவு பெற்று வைத்தும் அடியேன் இழந்து துடிப்பது தானே? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஞாலத்தூடே) கீதையில் * பரித்ராணாய ஸாதூநாம் … ஸம்பவாமி யுகேயுகே * என்றதை நினைப்பூட்டி “ஸமயவிசேஷங்களலே எத்தனையோ விதமாக அவதாரங்கள் செய்வென்கிறார். ஞாலத்தூடே நடந்தும் – ஸ்ரீராமாவதாரத்திலே * ஸிம்ஹவிக்ராந்த காமிநம் * என்னும்படியாகக் காட்டிலே நடையழகு காட்டினாய், குருடர் முன்னே நடக்குமாபோலேயன்றோ ஆயிற்றது, நடையழகு காண விரும்பியிருக்குமென் முன்னே ஒருகால் நடந்தாலோகாதோ? என்பது உட்கருத்து.
இங்கே ஈட்டில் ஒரு ஐதீஹ்யம் காண்மீன் – “வடதேசத்தில் நின்றும் போரப்பாடவல்லராயிருப்பாரொருத்தர் பெருமாளைத் திருவடிதொழ வேணுமென்று வர, ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரயரோடு தீர்த்தத்தினன்று இராத் திருமாலையைப் பாடிச்சமைத்து பெருமாளை ஒரு மத்தகஜத்தைக் கைவசப்படுத்துமாபோலே ஏத்தி வசமாக்கிக் கணிசங்கொண்டு“ “நாயன்தே! தேவரீர் திருவடிகளுக்குப் போல நல்லானொருவன் தேவரைத் திருவடித்தொழ நெடுந்தூரமுண்டு வந்திருக்கிறது, இவனையழைத்துக்கொண்டு ஸம்பாவநை பண்ணியருளவேணும்“ என்ன, அவரைப் பெருமாள் அருளப்பாடிட்டுத் திருப்புன்னைக் கீழில் நின்றுமு அவர் நின்றவிடத்தேறத் திருக்கைத்தலத்தே யெழுந்தருளி விண்ணப்பஞ் செய்வார்களை யருளப்பாடிட்டு “வாரிகோள்! நாம் இவன் வந்த தூரத்துக்கெல்லாம் போருமோ செய்ததாம்‘ என்று திருவுள்ளமானார்.“
நின்றும் – நின்றருளுமிடங்கள் பல இருந்தாலும் வாலிவதமான பிறகு * அவஷ்டப்ய சதிஷ்டந்தம் * என்னும் படியாக நின்ற நிலை மிகவும் ஆகர்ஷகமாயிருக்கும், தாரையானவள் அப்போது நின்ற நிலையிலே மிகவும் நெஞ்சு பறிகொடுத்தாள், தன் பர்த்தாவைக்கொன்ற பெருமானை வாயார வையவேண்டியிருக்க, “இவர்பால் குற்றமுண்டோ? தம்மை அடிப் பணிந்தாருடைய விரோதியைப் போக்கக் கடமைப்பட்டவர்களன்றோ பெரியார், என் பர்த்தாவும் அநுகூலித்திருந்தானாகில் ரக்ஷித்திருக்கமாட்டாரோ? தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழாக விழுந்து சாவாலைப்போலே தன் குற்றத்தாலே கெட்டானத்தனையன்றோ என்றாள், இங்ஙனே அவள் சொல்லிற்று நிலையா நின்றவழகிலே யீடுபட்டன்றோ.
கிடந்து – கிடந்த கிடைகள் பலவுமுண்டாகிலும். ***************** **************** *********** ************ ***************** பாஹும் புஜகபோகாபம் உபதாயாரிஸூதந, அஞ்ஜலிம் ப்ராங்முக க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோத்தே * என்னும் படியாகக் கடற்கரையிலே கிடந்த கிடையிலே மிகவும் ஈடுபடுவர்களாயிற்று. ஒரு கடல் ஒரு கடலோடே ஸ்பர்த்தை பண்ணிக்கொண்டு கிடக்குமாபோலே கடல்வண்ணனானதான் கடலை நோக்கிக் கிடந்த கிடைக்கு வயிறு பிடிக்கவேண்டியன்றோ விருப்பது. ப்ரதிசயந பூமிகா பூஷித் பயோதி புளிந!“ என்ற ரகுவீரகத்ய ஸ்ரீஸூக்தியும் இங்கே நினைப்பது.
இருந்தும் – பர்ணசாலைகளிலே வீற்றிருந்த இருப்பு. ஆகவிப்படி நடத்தல் நிற்றல் கிடத்தல் இருத்தல்களாலே அநாதிகாலமாக உயிர்களைக் காத்தள்பவனல்லையோ நீ, இப்படிப்பட்ட வுன்னைக் கோலத்திருமாமகளோடு நான் கூடியநுபவிக்க வேணுமென்று ஆசைப்பட்டால் இது எனக்கு அருமைப்படவேணுமோ? இதுவரை நான் தட்டித்தளர்ந்தது போதாதோ? இன்னமும் எத்தனை நாளைக்குத் தளர்வேனாம்படி திருவுள்ளமோ? சொல்லியருள வேணுமென்றாராயிற்று.
English Translation
O Lord who protects all through every age, we see you walking, standing, sitting and lying. O Lord with beautiful lotus-dame Lakshmi, how many days must I live in seperation?
