(3523)
மல்குநீர் கண்ணோடு மையலுற்ற மனத்தனளாய்,
அல்லுநன் பகலும் நெடுமாலென்றழைத் தினிப்போய்,
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோ ளூர்க்கே,
ஒல்கி யொல்கி நடந்தெங்ஙனே புகுங்கொ லோசிந்தே?
பதவுரை
| மல்கு நீர் கண்ணொடு |
– |
(என் மகளானவள்) நீர் நிரம்பிய கண்களையுடையவளாயும் |
| மையல் உற்ற மனத்தனள் ஆய் |
– |
வியாமோஹம் கொண்ட நெஞ்சையுடையளாயும் |
| நல் அல்லும் பகலும் |
– |
நல்ல இரவிலும் பகலிலும் (தவறாது) |
| நெடு மால் என்று அழைத்து |
– |
ஸர்வேச்வரனே! என்று கூப்பிட்டுக்கொண்டிருந்து, |
| இனி |
– |
இப்போது |
| ஒல்கி ஒல்கி நடந்து |
– |
ஒடுங்கியொடுங்கி அசைந்து நடந்து |
| ஒசிந்து போய் |
– |
தளர்ந்து சென்று செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே |
| எங்ஙனே புகும்கொல் |
– |
எப்படி போய்ச் சேர்ந்திருப்பளோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மல்கு நீர்க்கண்ணொடு) தன்மகள் திருக்கோளூரெம்பெருமானுடைய திருக்கண்ணும் செவ்வாயுங்கண்டு கண்ணீர் பெருகநிற்பவள் என்று கீழ்ப்பாட்டில் ஊஹித்துப்பேசின திருத்தாயார், அவள் திருக்கோளூரளவும் சென்று சேர்ந்தாளாகிலன்றோ அங்ஙனே யிருப்பது, இவள்தான் அத்தனை தூரம் வழிநடந்து முடிந்து சென்று சேர்ந்த பிறகு நடக்கக்கூடியதை இப்போது சிந்திக்க இடமேது? என்கிறாள்.
மல்கு நீர்க்கண்ணொடு மையலுற்ற மனத்தனளாய் – வழிநடந்து போகைக்கு இரண்டு ஸாதனங்கள் வேண்டும், கண் நன்றாகத் தெரியவேணும், மனம் தெளிவுற்றிருக்கவேணும், இவ்விரண்டும் ஒழுங்காக இல்லையே என்மகளுக்கு, கண்களோ நீர்மல்கிக் கிடக்கின்றன, மனமோ மையலுற்றுக் கிடக்கிறது. ஆகவே இவள் வழிநடந்து உத்தேச்யமான இடத்திலே சென்று சேருகைக்கு ப்ரஸக்திதானே யில்லையேயென்று காட்டினபடி.
அல்லும் நண்பகலும் நெடுமாலேன்றழைத்து – “என்னையிப்படி பிச்சேறப்பண்ணின ஸர்வேச்வரனே! என்று இரவும் பகலும் கூப்பிடுகைக்கு ஸ்வ்ஸ்தானத்தில் ஏதேனும் விரோதமுண்டோ? இங்கிருந்தே கூப்பிடலாமே, எதற்காகப்புறப்பட்டுப்போனாளோ“ என்கிறாள்.
(செல்வம்மல்கி யித்யாதி) தானிருந்த விடத்திலே * பொலிந்து நின்ற பிரானாகையாலே நின்ற வழகு காணலாமத்தனை போக்கி, கிடந்த்தோர் கிடக்கை காண விரகில்லை, அக்கிடையழகைத் திருக்கோளூரிலே சென்று காணலாமென்று ஆசைப்பட்டுப் போனாள் போலும், நன்றே, ஒல்கி யொல்கி ஒசிந்து நடந்து எங்ஙனெ புகுங்கொல்? –ஒடுங்கி யொடுங்கித் துவண்டு நடந்து போமிவள் அவ்வூர் சென்று சேர ஸம்பாவனையில்லையே! என்னாய் முடிந்திருக்குமோ வென்கிறாள்.
English Translation
With overflowing teas and longing heart, night and day she would call, “Ancient Lord!” Now she has gone to Tirukkolur where her Lord lives amid riches. Alas, I wonder how she would have reached, with trailing steps and a shrivelled frame!
