(3504)

(3504)

பின்னைகொல் நிலமாமகள்கொல்? திருமகள்கொல்? பிறந்திட்டாள்,

என்ன மாயங்கொ லோ?இ வள்நெடு மாலென் றேநின்று கூவுமால்,

முன்னி வந்தவன் நின்றி ருந்துறை யும்தொ லைவில்லி மங்கலம்

சென்னி யால்வணங் கும்அவ்வூர்த்திரு நாமம் கேட்பது சிந்தையே.

பதவுரை

அன்னைமீர்

தாய்மார்களே!
இவள்

இப்பெண்பிள்ளையானவள்
பின்னைகொல்

நப்பின்னைப் பிராட்டியோ!
மா நிலம் மகள் கொல்

பெருமைதங்கிய பூமிப்பிராட்டியோ!
திருமகள் கொலபிறந்திட்டாள்

(அல்லது) ஸாக்ஷாத் ஸ்ரீமஹாலக்ஷமியே வந்து பிறந்தபடியோ!
என்ன மாயம் கொலோ

இது என்ன அதிசயமோ!
நெடுமால் என்றே நின்று கூவும்

ஸர்வேச்வரா! என்று நிலை நின்று ழைக்கின்றாள்,
அவன் முன்னிவந்து நின்று இருந்து உறையும்

அப்பெருமான் முற்பட்டு வந்து நிற்பது இருபதாய் நித்யவாஸம் பண்ணுமிடமான
துலைவில்லிமங்கலம

துலைவில்லி திருப்பதியை
சென்னியால் வணங்கும்

தலையாலே வணங்குகின்றாள்
அவ் ஊர் திரு நாமம் கேட்பதே சிந்தை

அத்திருப்பதியின் திரு காமத்தை (தன்வாயால் தான் சொல்வதிற் காட்டிலும்) பிறர் சொல்லக் கேட்க வேணுமென்பதே இவளது சிந்தனை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பின்னைகொல்) பராங்குசநாயகியின் ப்ராவண்யமிகுதியைக் கண்டு ‘இவள் பிராட்டிமாரிலே ஒருத்தியர்!‘ என்று சங்கீக்கின்றமை கூறுகிறது இப்பாட்டில், ஆழ்வார் க்ருஷ்ணாவதாரத்திலே யீடுபட்டிருக்குந் தன்மையை நோக்குங்கால்,ஸாக்ஷாத் நம்பின்னைப்பிராட்டிதானோ! என்னவேணும். வராஹப்பெருமான் திறத்தில் ஈடுபட்டிற்குந் தன்மையை நோக்கக்கக்கு மளவில் ஸாக்ஷாத் பூமிப்பிராட்டிதானோ! என்னாலாகும். ஸ்ரீராமவதாரத வீடுபட்டை  நோக்கினால் ஸாக்ஷாத் ஸீதாபிராட்டிதானோ! ப்ராப்தம்.

பின்னைகொல் * எருதேழ்தழீஇக் கோளியார் கோவலனார் குடக்கூத்தனால் தாளிணை மேலணி தண்ணந்துழாயென்றே நாளுநாள் நைகின்றது * என்று, ஏறுதழுவுகை முதலான செயல்களையுடைய கண்ணபிரான் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்பட்டு நாள்தோறும் சைதில்யத்தை யடைவது, * கறையினார் துவருடுக்கை கடையாவின்கழிகோல்கைச் சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே * என்று கண்ணபிரான் விரும்பாத நிறம் எனக்கு வேண்டாவென்பதாய்ப் பேசின பாசுரங்களில் நப்பின்னைப் பிராட்டியின் ஸாம்யம்தோன்றும்.

நிலமாமகள் கொல் – * ஆதியங்காலத்து அகலிடங் கீண்டவர் பாதங்கள் மேலணிபைம் பொன் துழாயென்றே ஓதுமாலெய்தின்ள் * என்று, வராஹ கல்பாதியிலே மஹர ப்ருதிவியை அண்டபித்தியில் நின்றும் ஒட்டுவிடுவித்து எடுத்தவனுடைய திருவடிகளில் திருத்துழாயென்றே பலகாலும் சொல்லும்படி பிச்சேறுவது, * மண்புரைவையமிடந்த வராகற்கு என்கண்புனை சேரதையிழந்த்து கற்பே * என்று, அவனையாசைப்பட்டு அறிவிழப்பது, * ஞாலப்பொன்மாதின்மணாளன் துழாய்நங்கள் சூழ்குழற்கே ஏலப்புனைந்தென்னைமார் எம்மை நோக்குவது என்றுகொல என்று, வராஹப்பெருமாள் சூடின திருத்துழாயை பந்துக்களானவர்கள் ஏற்கவே கொண்டுவந்து நம் குழலிலே சூட்டி நம்மை ரக்ஷிப்பது என்றைக்கோ வென்பது * எனமொன்றாய மண்துகளாடி வைகுந்தமன்னான் குழல்வாய் விரைபோல் விண்டு கள்வாரும்மலருளவோ நும்வியலிடத்தே * என்று, வராஹப்பெருமாளுடைய சரிதையை அநுபவித் திருக்கிறவிவள்போக்யதை உபயவிபூதியிலுமுண்டோ வென்று விசேஷஜ்ஞர் ச்லாகிக்கும் படியை ப்ரகாசிப்பிப்பதாய்க் கொண்டு பேசின பாசுரங்களில் நிலமாமகளின் ஸாம்யம் தோன்றும்.

திருமகள்கொல் – தென்பாலிலங்கை வெங்களஞ்செய்த நம் விண்ணோர்பிரானார் துழாய் துணையா நங்களைமாமைகொள்வான் வந்து தோன்றி நலிகின்றதே *வழாநெடுந்துன்பத்தளென்றிரங்காரம்மனோ இலங்கைக்குழாநெடுமாட மிடத்தபிரானார் கொடுமைகளே * காயுங்கடுஞ்சிலையென் காகுத்தன்வாரானால் * இலங்கைநகர் அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி வம்ப விழ்தண்ணந்துழாய் மலர்க்கேயிவள்நம்பும் * தீமுற்றத் தென்னிலங்கையூட்டினான் தாள்நயந்த யாமுற்றதுற்றாயோ * மாறில்போரரக்கன் மதிள்நீறெழச் செற்றுகந்த ஏறு சேவகனார்க்கு என்னையுமுளளென்மின்கள் * கிளரரக்கன்நகரெரித்த களிமலர்த்துழாயல்ங்கல் கமழ்முடியன்… கவராத அறிவினால்குறைவிலம் * காண்பெருந்தோற்றத்தென் காகுத்தநம்பிக்கு என்பூண் புனைமென்முலைதோற்றதுபொற்பே * என்னாருயிர்காகுத்தன் நின்செய்யவாயொக்கும்வாயன் கண்ணன் கைகாலினன் நின்பசுஞ்சாமநிறத்தன் கூட்டுண்டு நீங்கினான் – சிறுகிளிப்பைதனே! இன்குரல்நீமிழற்றேல் * என்னு மிப்பாசுரங்களில் திருமகளான ஸீதாபிராட்டியின் ஸாம்யம் தோன்றும். இத்தால், நப்பின்னைப்பிராட்டிக்கு அஸாதாரணமான க்ருஷ்ணாவதார விஷயமாகவும், ஸ்ரீபூமிப்பிராட்டிக்கு அஸாதாரணமான வராஹாவதார விஷயமாகவும், ஜநக்குல ஸுந்தரியான பிராட்டிக்கு அஸாதாரணமான ராமாவதார விஷயமாகவும் அந்தப்பிராட்டிமார் தங்களைப்போலே மிகவும் ப்ரவணராய் அருளிச்செய்த அந்தந்த திவ்யஸூக்திகளிலே மேற்குறித்த திவ்யமஹிஷிகள் மூவரோடும் இவர்க்குண்டான ஸாம்யம் விளங்காநின்றதென்றதாயிற்று.

‘பிறந்திட்டாள்‘ என்பதை, பின்னைபிறந்திட்டாள்கொள்? நிலமாமகள் பிறந்திட்டால் கொல்? திருமகள் பிறந்திட்டாள்கொல்? என்று யோஜித்துப் பொரள்கொள்வதன்றிக்கே தனிப்படவும் யோஜிக்கலாம். அதாவது, இவள் பின்னைகொல்? இவள் நிலமாமகள்கொல, இவள் திருமகள்கொல்? (அன்றியே) பிறந்திட்டாள்கொல்? என்பதாக. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின் – “அவர்களுக்கு இவள்படியில்லாமையாலே அவர்களொப்பன்று லோகமெல்லாம் வாழுகைக்கு இவளொருத்தி பிறந்தாளோ! என்றுமாம்.”

என்னமாயங்கொலோ – பகவத்விபூதியில் கூடாத்தொன்றில்லையே, இதென்ன ஆச்சரியந்தான்! என்கிறாள். இவள் நெடுமாலென்றே நின்று கூவுமால் – “என் பக்கலிலே எம்பினுக்கு என்ன வியாமோஹம்! என்ன வியாமோஹம்!“ என்று அவனுடைய வியாமோஹத்தின் நெடுமையைச் சொல்லிக் கூப்பிடுகின்றாள். * கொண்டவென்காதலுரைக்கில் தோழீமண்டிணிஞாலமு மேழ்கடலும் நீள்விசும்புங் கழியப்பெரிதால் * என்று தானே பேசலாம்படி அபரிமிதமான தன் வியாமோஹத்தை மறந்து அவன் வியாமோஹத்தையே கனக்கப்பேசுகின்றாள்.

துலைவில்லித் திருப்பதியிலுண்டான ஈடுபாட்டைச் சொல்லுகிறது பின்னடிகளில் முன்னிவந்து என்றது – தன்னுடைய வியாமோஹத்துக்கும் க்ருஷிபண்ணுகைக்காக முற்பட்டு வந்து என்றபடி.

English Translation

What a miraculous birth she has taken! She calls “O Lord! you came to live permanently, standing and sitting inTulaivilli-Mangalam”. She bows her head and only yearns to hear the name of that town. Is she Nappinnai, or Bhu-devi or Lakshmi? I wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top