(3496)
குமிறு மோசை விழவொ லித்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
அமுத மென்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,
திமிர்க்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவ தேவபி ரானென்றே,
நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொ சிந்து கரையுமே.
பதவுரை
| (அன்னைமீர்) |
– |
தாய்மார்களே! |
| குமிறும் ஓசை விழவு ஒலி |
– |
ஆராவாரிக்கின்ற ஓசையையுடைய உத்ஸவ கோலாஹலங்களையுடைத்தான |
| துலைவில்லிமங்கலம் |
– |
இரட்டைத்திருப்பதியிலே |
| அமுதம் மெல்மொழியவளை |
– |
அமுதம்போன்று மதுரமானமெல்லிய வாய்மொழிகளை யுடையவளான இப்பெண் பிள்ளையை |
| நீர் கொண்டு புக்கு |
– |
நீங்கள் அழைத்துக்கொண்டுபோய் |
| உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் |
– |
மறுபடியும் நீங்கள் இவளோடு உறவுபண்ணுகைக்கு ஆசையில்லாதபடி உறவறுத்துக்கொண்டீர்கள். |
| (அது எங்ஙனே தெரிகிறதென்றால்) | ||
| இவள் |
– |
இப்பெண்பிள்ளையானவள் |
| திமிர் கொண்டால் ஒத்து நிற்கும் |
– |
திமில் கொண்டாற்போலே பேசாதே நிற்கின்றாள், |
| மற்று |
– |
அதுவுமல்லாமல் |
| தேவதேவபிரான் என்றே |
– |
எம்பெருமானது திருநாமத்தைச் சொன்னமாத்திரத்திலே |
| நிமியும் வாயொடு |
– |
நெறிந்தவாயோடுகூடி |
| கண்கள் நீர் மல்க |
– |
கண்கள் நீர்பெருகப் பெற்று |
| நெக்கு ஒசித்து கரையும் |
– |
கட்டுக்குலைந்து தளர்ந்து உருகுநினறாள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (குமிறுமேசை) ஸாதாரணமாகத் துலைவில்லித் திருப்பதியின் ஸந்நிவேசந்தானே ஆகர்ஷகமாயிருகும், அதுதன்னிலும் உத்ஸவகாகலங்களில் சென்றாலோ “வேதவொலியும் விழாவொலியும்“ என்றாற்போலே பலவகையான த்வனிகள் செவியமுதமாகக் கேட்டகப்பெற்று அங்கு நின்றும் கால்பேரவொண்ணாதபடி யிருக்கும். அப்படிப்பட்ட உத்ஸவகாலகங்களிலும் தாய்மார் இப்பெண்பிள்ளையை அங்கு அழைத்துக்கொண்டு செல்லுகையாலே ஈடுபாடு அதிகமாயிற்றென்கிறான் தோழி.
குமிறுமோசைவிழவொலி என்ற விடத்துப் பரமபோக்யமான ஈட்டு ஸ்ரீஸூக்தி-•••••தேஷாம் புண்யாஹகோஷோத கம்பீரமதுரஸ்வந, அயோத்யாம் பூரயாமாஸ தூர்யநாதாநுநாதிக, * என்று, ஒத்துச் சொல்லுவார் ஸங்கீர்த்தாம் பண்ணுவார் பாடுவார் இயல்விண்ணப்பஞ் செய்வாராய் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகிற த்வநியையுடைய திருநாளிலாரவாரம். பாவியேன்! இத் த்வநி செவிப்பட்டால் கொண்டு மீளவன்றோவெடுப்பது, இவ்விடம் பிள்ளைகொல்லி‘ என்று கூப்பிடுமாபோலே காணும் த்வநியிருப்பது. அவ்வூரும் திருநாளும் அங்குள்ளார் படுகிறதும் கண்டுவைத்து இவளைக் கொண்டு புகுவாருண்டோ?
கொண்டுபுக்கு என்கையாலே, இவள் அறியாதிருக்க நீங்களே இவளை பகவத்விஷய ப்ரவணையாம்படி செய்தீர்கள், அங்ஙனே முதலில் செய்துவைத்து இப்போது மீட்கப்பார்த்தால் பணனுண்டோ வென்று காட்டப்படுகிறது. இத்தால் பகவத்விஷயத்தில் தானே அவகாஹிப்பதிலுங்காட்டில் பெரியார் அவகாஹிப்பிக்க அவகாஹித்தல் முறைமை என்கிற சாஸ்த்ரார்த்தமும் காட்டப்பட்டதாயிற்று.
அமுதமென்மொழியாளை – * தொண்டர்க்கு அமுதுண்ணச் சொன் மாலைகள் சொன்னேன் * என்று மேலே ஆழ்வார் தாமே அருளிச்செய்கிறார். அமுதமொழியென்றால் ஆழ்வாருடைய திருவாக்குத்தவிர வேறொன்றுண்டோ? * அமுதிலுமாற்றவினியன் * என்று ஆராவமுதான எம்பெருமானைக் கவிபாடின மொழிகளுள தலையான மொழியாகையாலே இதுவெ அமுதமென்மொழி.
இவள் நிமிர்கொண்டாலொந்துநிற்கும் – சித்திரத்தில் எழுதின பதுமைபோலே ஒன்றும் செய்யமாட்டாதாளாய் ஸகம்பித்திரா நின்றான் என்றபடி. “விரஹவ்யஸநத்தாலே சித்ரார்ப்பிதைபோலே ஒரு சேஷ்டித க்ஷமைன்றியே நின்று“ என்பது ஆறாயிரப்படி. சாந்தோக்யமென்னும் உபநிஷத்தில் ஆறாவது ப்ரபாடகத்தில் ஒரு கதை. ச்வேதகேது என்பவன் பன்னிரண்டு வயதுவரையில் ப்ரஹ்மஜ்ஞானம் ஸம்பாதியாமலே யிருந்தான், அவனைத் தகப்பானர் பார்த்து, ‘பிள்ளாய்! நமது குலத்தில் ப்ரஹ்மஜ்ஞானம் ஸம்பாதியாமல் ஒருவருமிருந்தத்தில்லை, நீ சென்று ப்ரஹ்மஜ்ஞானம் ஸம்பாதித்து வருவாயாக‘ என்றார். அப்படியே அவன் சென்று பன்னிரண்டாண்டு குருகுலவாஸம்பண்ணி ஸகல வேதங்களையும் அதிகரித்து ப்ரஹமஜ்ஞானியாய்த் தகப்பனாரிடம் திரும்பிவந்து சேர்ந்தான், அப்போது அவன் ஸ்தப்தனார் பார்த்து அவனைக் கேட்கிறார்.(••••) பயலே! ஸ்தப்தனாயிருக்கின்றாயே, ப்ரஹமஜ்ஞானம் ஸம்பாதித்துவிட்டாயா என்ன? என்கிறார். ப்ரஹ்மஜ்ஞானம் பரிபூர்ணமாக வுண்டானால் கைகாலாடாதே ஸ்தம்பித்து நிற்கும்படியாக நேரும் என்பத இதனால் பெறப்படும்.
“•••• பரிபூர்ண ஜ்ஞாநரைப்போலே யிராநின்றாள்“ என்பது ஈடு.
எப்போதும் ஸ்தம்பித்தே யிருக்கலாகுமோ? •••• ப்ரஹர்ஷேணாவருத்தர் ஸா வ்யாஜஹார ந கிஞ்சந * (ஸீதாபிராட்டியானவள் ஸந்தோஷத்தின் மிகுதியினால் வாய்திறந்து ஒன்றுஞ்சொல்லவில்லை) என்னும்படியிருந்தும் பிறகு பலவும் பேசிற்றுமுண்டே, அப்படியே இவளும் வாய்திறக்குமிடத்துத் தேவதேவபிரான் இத்யாதி நாமங்களைச்சொல்லி ஸர்வப்ரகாரத்தாம் சிதிலையாகாநின்றாளென்கிறது. ஆகவே இப்படிப்பட்டவிவள். இனி உங்களால் ஆசைப்படத்தக்கவளல்லள் என்றதாயிற்று.
English Translation
You took this sweet and soft-spoken girl to Tulaivilli-Mangalam,-gay with festival sounds, -then abandoned her without a heart, she lies like one possessed, her lips form “Devadevapiran’, her eyes well with tears, she falls and then melts, alas!
