(3469)
பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல் பேதித்தும் பேதி யாதது,ஓர்
கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,
இணக்கி யெம்மையெந் தோழிமார் விளையாடப் போதுமின் என போந்தோமை,
உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வாதவரே?
பதவுரை
| யாவையும் யாவரும் |
– |
அசேதனப்பொருள்களும் சேதனைப்பொருள்களுமான ஸகலத்தையும் |
| பிணக்கி |
– |
ஸம்ஹாரதசையிலே ராம்ரூப லிபாகமில்லாதபடி ஒன்றாகப் பிசிறிவைத்து (பிறகு ஸ்ருஷ்டிகாலத்திலே) |
| பிழையாமல் |
– |
ஒருவருடைய கரும்மும் மாறிப் போகாதபடி |
| பேதித்தும் |
– |
தேவயானி மநுஷ்ய யோனி திர்யக்யோனி முதலியபோதங்களைப் பண்ணினவிடத்தும் |
| பேதியாத்து |
– |
அவற்றின்கணுள்ள தோஷங்களால் ஸ்வரூபத்துக்குச் சேதம் வராதபடியான |
| ஓர் கணக்கு இல்கீர்த்தி வெள்ளம் |
– |
அத்விதீய நிர்வதிக கீர்த்தி ப்ரவாஹத்தையும் |
| கதிர்ஞானம் |
– |
ஸங்கல்பருபஜ்ஞானத்தையும் |
| மூர்த்தியையும் |
– |
வடிவாகைவுடையவனே |
| எம் தோழிமார் |
– |
எமது தோழிமார்கள் |
| எம்மை இணக்கி |
– |
எங்களை இசைவித்து |
| விளையாட போதுமின் என்ன |
– |
விளையாட வாருங்கோள் என்றழைக்க |
| போந்தோமை |
– |
(நீ இங்கிருப்பது அறியாமே வந்த எங்களை) |
| நீ உணக்கி வளைத்தால் |
– |
நீ நெருக்கித் தகைந்தால் |
| உகவாதவர் என் சொல்லார் |
– |
வேண்டாதார் என்னதான் சொல்லமாட்டார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பிணக்கியாவையும்) கீழ் ‘ஒருநான்று தடிபிணக்கே‘ என்றதைக் கேட்ட கண்ணபிரான் ‘நங்கைமீர்களா! என்னைத் தடிகொண்டா அடிக்கப்போகிறீர்கள்? பரமஸந்தோஷம்! அப்படிப்பட்ட ஆண்புலிகளைத்தான் நானும் தேடிக்கொண்டு கிடக்கிறேன், தடிபிணக்குக்காரர்கள் எத்தனைவர் வருகிறார்களோ வரட்டும், எனக்கோ தடியும் வேண்டாம் தாம்பும் வேண்டாம், ‘மல்லரைமாட்டிய தேவாதிதேவன்நான்‘ என்பதை இன்று காட்டிவிடுகிறேனா இல்லையா பாருங்கள், அப்படியா ஸமாசாரம்! என்னை யாரென்று நினைத்தீர்கள்? இடையர்கையில் உதைபட்டுப்போகிறவன் நானென்று பார்த்தீர்களோ? அதையுந்தான் ஒருகை பார்த்துவிடுவோமே, என் சரக்கறியாதாரக்கு என் சரக்கை இன்று காட்டியே தீருகிறேன் பாருங்கள்‘ என்று, பெரிய ஆவேசங்கொண்டவன்போலப் படபடத்துப் பேசிநின்றான், அது கண்ட ஆய்ச்சிகள், பிரானே! உன் சரக்கை நாங்கள் அறியாதவர்களாகிலன்றோ இத்தனை ஆரவாரம் நீ செய்யவேண்டும், நீ அறிவிப்பதற்கு முன்னமே எல்லாம் நாங்களே அறிவோங்காண், என்றார்கள், அதுகேட்ட கண்ணபிரான் ‘நீங்களறிந்தவாற்றைச் சொல்லிக்காட்டுங்கள் பார்ப்போம்‘ என்றான், உன்னுடைய மூலகந்தமே பிடித்து நாங்கள் அறிவோங்காண் என்று பீடிகையிட்டுக் கொண்டு அதைச் சொல்லிக்காட்டுகிறார்கள் – “பிணலே ப்ரஸித்தமான பகவத்சக்தி விசேஷித்தை வெளியிடுவன. ஸம்ஹார மையத்திலே ஸகல சேதநாசேதநங்களையும் நரமரூப விபாக ரஹிதமாம்படி கலசி, ஸ்ருஷ்டி ஸமயத்திலே ஒருவர் கருமம் ஒருவர்க்குத் தட்டாதபடி. பிரித்து ஸ்ருஷ்டித்தும் தனக்கொரு தோஷமின்றிக்கே யிராநின்ற ஸர்வஜ்ஞமூர்த்தி நீ என்று நாங்கள் அறிவோம் என்று காட்டினபடி. “***“ என்று உபநிஷத்து ஓதினபடி ஸங்கல்பமாத்ரத்தாலே ஸ்ருஷ்டிஸம்ஹாராதிகளை நிர்வஹிக்கவல்ல பரமசக்தன் என்றவாறு.
பிரளயத்திற்குப் பிறகு மீண்டும் ஸ்ருஷ்டிக்கிற காலத்தில் ஸகல ப்ராணிகளுடையவும் கருமங்களை அப்படியப்படியே நினைப்பில் கொண்டிருந்து இறைம் மாறுபாடின்றிக்கே அவரவர்களுடைய கருமங்களின்படியே கரணகளேபர ப்ரதானம்பண்ணி ஸ்ருஷ்டிக்கிறபடியை * பிழையாமல் * என்பது காட்டுகிறது. அந்த ஸ்ருஷ்டியானது பலவகைப்பட்டது என்பதைக் காட்டுகிறது * பேதித்தும் * என்பது. அவற்றின் தோஷங்கள் ஒன்றும் தன்னிடத்தில் தட்டாதபடியைக் காட்டுகிறது * பேதியாத்தோர் * என்பது.
“கணக்கில் கீர்த்தி வெள்ளக்கதிர்ஞானமூர்த்தியினாய்“ என்ற விளியைக் காதாரக்கேட்ட கண்ணப்பிரான் கோவியர்காள்! என் பெருமையை நீங்கள் இங்ஙனம் உள்ளபடி தெரிந்து கொண்டிருந்தும் * ஒருநான்று தடிபிணக்கே * என்று கூசாமல் எங்ஙனம் கூறினீர்கள்? உங்களுடைய அறிவுக்கும் சொல்லுக்கும் ஒரு சேர்த்தியில்லையே! ஏன் இப்படிச் சொன்னீர்கள்? என்றான். அதற்கு உத்தரமாம் பின்னடிகள்.
(இணக்கி யித்யாதி) உன்னுடைய ஸர்வஜ்ஞத்வம் ஸர்வசக்தித்வம் முதலிய குணங்கள் எங்களுக்குத் தெரிந்திருந்தபோதிலும், நாங்கள் விளையாட்டுச் சிறுமிகளன்றோ? எங்கள் பக்கலிலே நீ முறைதவறிப் பரிமாறினால் நாங்கள் ‘ஒருநாளன்று தடியிணக்கே“ என்றால் இதில் என்ன குற்றம்? நீ பராத்பரனாயிருந்துவைத்து உன்னுடைய பரத்வத்திற்குத் தகுதியற்ற காரியங்களைச் செய்தால் விளையாட்டாக நாங்கள் சொன்னவார்த்தை பிசகோ? என்றார்கள்.
அதற்குக் கண்ணன் நீங்கள் உங்களுக்கு அஸாதாரணமான விடங்களில்லே யிருந்து விளையாடலாகாதோ? எனக்கும் உரித்தான இடத்திலே நீங்கள் வந்தது ஏன்? என்றான்.
பிரானே! நாங்களாக வரவில்லை, இங்கே வரமாட்டோமென்றே நாங்கள் சொல்லிக் கிடந்தோம். ஆனாலும், எம் தோழிமார் சிலர் பலவாறு நிர்ப்பந்தப்படுத்தவே நாங்கள் இணங்கிவரவேண்டியதாயிற்று, அவர்களும் விளையாட வாருங்கோள் என்றழைக்கவே நாங்கள் விளையாட வந்தோமத்தனை, உன்னுடைய விளையாட்டுவேறு, எங்களுடைய விளையாட்டு. உன் விளையாட்டு வைதிகம், எம் விளையாட்டு லௌகிகம், உனக்கும் எமக்கும் என்னசேர்த்தியுண்டு? என் காரியத்தை நீ பாராய், எம் காரியத்தை நாங்கள் பார்க்கிறோம் – என்று சொல்லிப் பராமுகங்காட்ட ஆரம்பித்தார்கள் கோபிமார்கள்.
அதற்குமேல் கண்ணபிரான் வளைக்கத் தொடங்கினான், வழிமடக்குவதும், குறுக்கே படுத்துக்கொள்வதுமான செயல்களைச் செய்தான், அதுநோக்கி ‘உணக்கீநீ வளைத்தால் என்சொல்லாருகவாதவே‘ என்கிறார்கள். இதுதான் ரஸமே வடிவெடுத்த பேச்சு. உன்னை உகங்திருக்குமெங்களுக்கு இவ்வளைப்பு பரமபோக்யமே, இதற்கு எங்கள் உள்ளம் மெய்யே குழைகின்றதுகாண். உகவாத பாவிகள் இதைக்கண்டால் * அதுகண்டிவ்வூர் ஒன்று புணர்கின்றதே * என்னுமாபோலே எதையேனும் தொடுப்பார்கள் என்றுதான் அஞ்சுகிறோம் என்றவாறு.
English Translation
O Lord of radiant knowledge and countless glories, making all things so different, yet like one! when friends call and I go, you stop and dry us. Alas, what will the unfriendly ones not say?
