(3468)
கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது கடல்ஞால முண்டிட்ட,
நின்மலா நெடியாய். உனக்கேலும் பிழைபிழையே,
வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி அதுகேட்கில்
என்னைமார், தன்ம பாவமென் னாரொரு நான்று தடிபிணக்கே.
பதவுரை
| கடல் ஞாலம் உண்டிட்ட |
– |
கடல் சூழ்ந்த வுலகங்களையெல்லாம் ஒருகால் திருவயிற்றினுட்கொண்ட |
| நின்மலா |
– |
விமலனே! |
| நெடியாய் |
– |
பெரியோனே! |
| எங்கள் கையில் பாவை பறிப்பது |
– |
எங்கள் கையிலுள்ள லீ லோபகரணங்களை லியப்பிடித்திழுப்பதானது |
| கன்மம் அன்று |
– |
செய்யத்தகுந்த காரியமன்று |
| உனக்கேலும் பிழை பிழையே |
– |
இது உனக்கு மிகப்பெரிய அவத்யமேயாகும் (இதுவன்றியும்) |
| எம்மை |
– |
எங்களை நோக்கி |
| வன்ம்மே சொல்லி |
– |
மருமமான வார்த்தைகளைச் சொல்லி |
| விளையாடுதி |
– |
விளையாடுகின்றாய் |
| என் ஐம்மார் |
– |
எங்களுடைய ஸஹோதரர்கள் |
| அது கேட்டில் |
– |
இப்படியெல்லாம் நீ செய்தும் சொல்லியும் போருகிறயென்பதைக் கேட்கப்பெற்றார்களாகில் |
| தன்மம் பாவம் என்னார் |
– |
நன்மை தீமை யென்று கூடப் பாரார்கள் |
| ஒரு நான்று தடி பிணக்கே |
– |
ஒரு கால் உன்னைத் தடியிட்டுத் தகர்க்கும்படியாகவும் நேர்ந்துவிடும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கன்மமன்று கீழே “உனக்குமிளைதே கன்மமே“ என்னக் கேட்ட கண்ணபிரான் “என்மேல் உங்களுக்கு இவ்வளவு வெறுப்பாகில் நீங்கள் சுகமாக இருங்கள், நான் போய்வருகிறேன், என்னுடைய வஸ்துக்களை நான் எடுத்துக்கொண்டுபோகிறேன்‘ என்று போயவருகிறேன், என்னுடைய வஸ்துக்களை நான் எடுத்துக்கொண்டுபோகிறேன்“ என்று சொல்லிக்கொண்டே கீழேகிடந்த லீலோபரணங்களை யெடுக்கப்பார்த்தான், உடனே ஆய்ச்சிகள் அவற்றைத் தங்கள் கையிலே யெடுத்துக்கொண்டார்கள், அவனை எளிதில் போகவொட்டுவார்களோ இவர்கள்தாம், மேன்மேலும் பிணக்குக்கு இடம் கொடுக்கவேணுமென்றே இவர்களும் நினைத்திருக்கையாலே இந்த அற்பவஸ்துக்களைக்கொண்டுபோனால் போகட்டும் என்றிராமே ‘எங்கள் வஸ்துவை நீ எப்படியெடுத்துக்கொண்டு போவாய்? என்று சிலுகிட்டு அவற்றைத் தாங்களே வாரியெடுத்துக்கொண்டார்கள், ‘இது நமக்குப் பெருநன்மையேயாயிற்று“ என்று கொண்ட கண்ணபிரான் கைதீண்டிச் சண்டையிட அனுகூலமாகச் செய்யாயிற்று‘ என்று கொண்ட கண்ணபிரான் கைதீண்டிச் சண்டையிட அனுகூலமாகச் செய்தார்களே! என்று உகந்து அவர்கள் கைமேலே கையைவிட்டு அவற்றைப் பறிக்கப் புகுந்தான், அப்போது “கன்மமன்று எங்கள் கையில் பாவைபறிப்பது“ என்கிறார்கள். ‘கன்மமன்று‘ என்றதற்கு இவர்கள் நினைத்தது ஒருபொருள், அவன் கொண்டது வேறொருபொருள் ‘எங்கள் கையிலுள்ள பாவையைப்பறிப்பது நீ செய்யத்தகுந்த காரியமன்று‘ என்கிற பொருளையிட்டு இவர்கள் கன்மமன்று என்கிறார்கள். இது உன்னால் செய்ய முடியும்படியான காரியமன்று என்று இவர்கள் சொல்லுவதாக அவன் கொண்டு, ‘எனக்கு அசக்யமானது மொன்றுண்டோ? என்னை ஆரென்று நினைத்திகோள்? * பாலகனென்று பரிபவஞ்செய்யேல், பண்டொருநாள் ஆலினிலைவளர்ந்த சிறுக்கனவனிவன் * என்று என்தாய் பலகாலும் சொல்லுமே, கேட்டறியீர்களோ? கடல்ஞாலமுண்டிட்ட எனக்கு அஸாத்யமானது மொன்றுண்டோ? என்றான்.
பிரானே! உனக்கு அஸாத்யமானதொன்று இருப்பதாக நாங்கள் நெஞ்சிலும் நினைத்திலோமே, அப்படி நாங்கள் சொல்லவுமில்லையே, கடல்ஞால முண்டிட்டவனும் நீயே, நின்மலனும் நீயே, நெடியானும் நீயே, இதில் எமக்கு ஸ்ந்தேஹம்‘ இல்லைகாண், இப்படிப்பட்ட தீமைகளைச்செய்வது உனக்குப் பிழை எனகிறோமத்தனை என்றார்கள். நின்மலனான எனக்குமா இது பிழையாகும்? என்றான், உனக்கேலும் பிழைவிழையே என்கிறார்கள்.
இவர்கள் இங்ஙனே சொன்னவாறே மேலே ஒன்றும் உத்தரமுரைக்கமாட்டாமல் காதோடே சில சொல்லுவதாகவந்து, சிறுபயல்கள் செவியிலே வந்து ‘காகா குர்!‘ என்னுமாபோலே ஏதோ மருமமான வார்த்தைகளை வலிதாகச் சொன்னான், அதனால், வன்மமே சொல்லி எம்மை நீ விளையாடுதி என்றார்கள்.
அதற்கு, ‘நான் தப்பாக என்ன சொல்லிவிட்டேன்‘ என்று, தான் அவர்களுடைய காதிலே சொன்ன குறும்புவார்த்தையை உரக்கச் சொல்லவேணுமென்று வாயெடுத்தான், உடனே அவனுடைய வாயைப் புதைத்து “அதுகேட்கில் என்னைமார் தன்மபாவ மென்னார்“ என்றார்கள். அந்தக் குறும்பு வார்த்தையைத் தங்கள் வாயாலே அநுவதிக்கக் கூசி ‘அது‘ என்கிறார்கள். தொண்டாடிப் பொடியாழ்வார் திருமாலையில்“பேதைபாலகன் அதாகும்“ என்றாற்போல. கண்ணா! அந்த அஸப்யமான வார்த்தையை எங்கள் செவியிலே சொன்னதுபோதும், அதை நீ உரக்கச்சொல்லி, அது எங்கள் உறவினருடைய காதிலே விழுமாகில், பிறகு அவர்கள் பாவமென்றும் புண்ணியமென்றும் பாரார்கள் – என்றார்கள் (தன்மம் –என்றார்கள்.
பாப புண்யங்களுக்கு அஞ்சாமல என்ன செய்துவிடுவார்கள்? என்றான் கண்ணன், ஒருநாளன்றுதடிபிணக்கே – அது நாங்களறிவோமோ? ஆளுக்கொரு தடி. யெடுத்துக்கொண்டு வந்து தகர்ப்பர்கள்கிடாய், குத்தும் பூசலுமாயன்றோ தலைக்கட்டும் என்றபடி.
English Translation
O perfect Lord who took the Earth and Ocean, pray do not snatchour dolls, you tell us lies and play with us. A fault is a fault even by you, if my brothers hear of this one day, they will take the rod and spare you not for justice or for mercy.
