(3454)
இடரில் போகம் மூழ்கி யிணைந்தாடும் மடவன்னங்காள்,
விடலில் வேத வொலிமுழங்கும்தண் திருவண்வண்டூர்,
கடலில் மேனிப் பிரான்கண் ணணைநெடு மாலைக்கண்டு,
உடலம் நைந்தொருத் தியுரு கும் என் றுணர்த்துமினே.
பதவுரை
| இடல் இல் |
– |
பிரிந்துபடும் துக்கமில்லாத |
| போகம் மூழ்கி |
– |
இன்பத்தில் அவகாஹித்து |
| இணைந்து ஆடும் |
– |
கலந்து வாழ்கின்ற |
| மடம் அன்னங்காள் |
– |
மடமைதங்கிய அன்னங்களே! |
| விடல் இல் |
– |
இடைவீடில்லாத |
| வேதம் ஒலி முழங்கும் |
– |
வேதகோஷம் நிரம்பிய |
| தண் திருவண்வண்டூர் |
– |
வேதகோஷம் நிரம்பிய குளிர்ந்த திருவண்வண்டூரிலே |
| கடல் மேனி |
– |
கடல்போன்ற திருமேனியையுடையவனும் |
| பிரான் |
– |
மஹோபகாரகனும் |
| கண்ணனை |
– |
ஆச்ரித ஸுலபனுமான |
| நெடு மாலை கண்டு |
– |
ஸர்வேச்வரனைக் கண்டு |
| ஒருத்தி |
– |
ஒரு பெண்பிள்ளை |
| உடலம் நைந்து |
– |
சரீரம் தளர்ந்து |
| உருகும் என்று |
– |
உருகாநின்றாள் என்று |
| உணர்த்துமின் |
– |
அறிவியுங்கள்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (இடலில்போகம்) ஒரு நொடிப்பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப்பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சார்த்திக்கொண்டு அங்கே கால்தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக்கொண்டு என்பேரைச்சொல்லாதே ஒருத் உடல்நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள்.
••• என்னும் வடசொல் போகமெனத்திரிந்த்து. போகத்திற்கு இடராவது இடையிடையில் விச்சேதப்ரஸக்தியாம். அஃதில்லாத போகத்தில் மூழ்கியென்றது. ஸ்வாபதேசத்தில் இடைவிடாத பகவதனுபவத்திலே அவகாஹித்திருக்கிறபடியைச் சொன்னவாறு. போகத்தில் வழுவாத புதுவையர்கோன் என்றாற்போல்.
இணைந்து ஆடும் –“குரு சிஷ்யக்ரந்த விரோதங்களைப் பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செந்தமிழ் இன்கவி பரவியழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசும் ஏக்கண்டர்“ எறு ஆசாரிய ஹ்ருதயத்திலருளிச்செய்தபடியே ஆசாரியர்களுக்குண்டான வேதகோஷமே உங்களுக்கு வழிகாட்டுமென்றவாறு.
‘திருவண்வண்டூர் இருக்குமிடம் நாங்கள் அறியோமே அவ்வூர்க்கு வழிதெரியாதே’ என்று பறவைகட்கு நினைவாக்க்கொண்டு * விடலில் வேத வொலிமுழங்கும் * என்கிறாள் நீங்கள் புறப்பட்டவாறே வேதகோஷமே உங்களுக்கு வழிகாட்டுமென்றவாறு.
மூன்றாமடியில் “கடல்மேனிப்பிரான்“ என்றே பாடம் வழங்கிவந்தாலும் இசையின்பம் நோக்கிக் “கடலின் மேனிப்பிரான்“ என்று பாடமிருந்திருக்குமென்று கருதிச் சிலர் திருத்திப்பதிப்பித்துள்ளார்கள், “கடல மேனிப்பிரான்“ என்றிருக்கலாம். கடல் –கடல் போன்ற என்றபடி. ஒருத்தியுகுமென்று உணர்த்துமின் – “ஒருத்தி மதியெல்லாமுள்கலங்கி மயங்குமாலென்னீரே“ என்றதுபோல.
English Translation
O Swan-pair, forever enjoying a dip together! The ancient Lord of celestials, my ocean-hued Krishna resides inTiruvan-Vandur amid echoes of Vedic chants, Pray tell him that a maiden pines for him.
