(3444)

(3444)

உள்ளம் வானவர் கோனுக் காயர் ஒருப்ப டுத்த அடிசி லுண்டதும்,

வண்ணமால் வரையை யெடுத்து மழைகாத்ததும்,

மண்ணை முன்படைத் துண்டு மிழ்ந்துக டந்தி டந்து மணந்த மாயங்கள்,

எண்ணுந் தோறுமென் னெஞ்செரி வாய்மெழு கொக்குநின்றே.

 

பதவுரை

வானவர் கோனுக்கு உண்ண

தேவேந்திரனுடைய ஆராதனைக்காக

ஆயர் ஒருப்படுத்த

இடையர்கள் ஸந்நாஹஞ் செய்த

அடிசில் உண்டதும்

ப்ரஸாதங்களையெல்லாம் தானே அமுதுசெய்தலும்

வண்ணம் மால்வரையை எடுத்து மழை காத்தலும்

அழகிய பெருமலையைக் குடையாக வெடுத்து மழையைத் தடுத்தும்

மண்ணை முன் படைத்து

பூமியை ஆதிகாலத்திலே ஸ்ருஷ்டித்து

உண்டு உமிழ்ந்து கடந்து இடத்து மணந்த மாயங்கள்

(ஸமய விசேஷங்களிலே) உண்டது உமிழ்ந்தது அளந்தது கிடந்தது மணந்தது ஆக இப்படியான மாயங்களுமாகிறவிவற்றை

எண்ணுந்தோறும்

சிந்திக்கிறபோதெல்லாம்

என் நெஞ்சு

எம் மனமானது

நின்று

எப்போதும்

எரி வாய் மெழுது ஓங்கும்

நெருப்பருகிலுள்ள மெழுகையொத்திரா நின்றது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உண்ணாவானவர்.) திருவாய்ப்பாடியில் இடையர்கள் வழக்கப்படி தேவேந்திர ஸமாராதனைக்கென்று* அட்டுக்குருவி சோற்றுப்பருப்பதமும் தயிர்லாயும் நெய்யளறுமாகச் சேமித்து வைக்க ‘அஹம் கோவர்த்தகோஸ்மி” என்று சொல்லி அவற்றையடங்கலும் அமுது செய்ததும், உடனே பசிக் கோபத்தாலே இந்திரன் விடாமழைபெய்விக்க, கோவர்த்தனமலையை குடையாக வெடுத்து ஒருவர்மேல் ஒரு மழைத்துளி விழாதபடி காத்ததும், உலகங்களைப் படைப்பது, பிரளயகாலத்திலே உண்பது, பிரளயம்  உண்பது, பிரளயம் நீங்கினவாறே உமிழ்வத மாவலியின் கொழுப்டக்கி அளப்பது வராஹாவதாரமெடுத்து இடந்து மணப்பது ஆகிய இவையும் ஒவ்வொன்றும் சிந்திக்கும் போதெல்லாம் என்மணம் நெருப்பிலேபுக்க மெழுகுபோலே முடியாதே நின்று உருவாகின்றதே!

 

English Translation

Your wonderful acts, of gulping the food-offerings kept for Indra, then holding aloft the mountain to stop the angry rains, your creating the worlds, then swallowing and bringing them out, your measuring the Earth, your marrying Dame-Earth, -all these melt my heart like wax in fire.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top