(3443)

(3443)

கள்ள வேடத்தைக் கொண்டுபோய்ப் புறம்புக்க வாறும்,

கலந்தசுரரை உள்ளம் பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும்,

வெள்ள நீர்ச்சடை யானும் நின்னிடை வேறலாமை

விளங்க நின்றதும், உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுமே.

 

பதவுரை

கள்ளம் வேடத்தை கொண்டுபோய்

வேதபாஹ்ய புத்தரூபவேஷத்தைப் பரிந்ரஹித்து

புரம் புக்க ஆறும்

திரிபுரத்திலே ப்ரவேசித்தபடியும்

அசுரரை கலந்து

அசுரரோடே செறிந்து

உள்ளம் பேதம் செய்திட்டு

மன வேறுபாட்டையுண்டாக்கி

உயிர் உண்ட உபாயங்களும்

அவர்களுடைய உயிரைக் கவர்ந்த விரகுகளும்

வெள்ளம் நீர் சடையானும் நின்னிடை வேறு அலாமை விளங்க நின்றதும்

ங்கா ப்ரவாஹத்தைத்ச் சடையிலே தாங்கியுள்ள சிவனும் உன்பக்கல் வேறுபாடின்றி ஒற்றுமை பெற்று விளங்க நின்றதும் (ஆகிய இவை)

உள்ளும் உள் குடைந்து

என்னெஞ்சுக்குள்ளே அவகாஹித்து

என் உயிரை உருக்கி உண்ணும்

என் ஆத்மாவை நீராகவுருக்கியுண்கின்றன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (கள்ளவேடத்தை.) பௌத்தாவாதார கதையைப் பேசி இப்படியும் ஒரு கள்ளவேடம் கொள்வதுண்டோ வென்று உருகுகிறார். அக்கதை வருமாறு:- சில அசுரர்கள் சிவபெருமானை நோக்கித் தவம்புரிந்தார்கள். அப்போது சிவன் ப்ரத்யக்ஷமாகி உவந்து’ உங்களுக்கு என்ன வேணும்?’ என்று கேட்க, அவர்களும் ‘ஒருவராலும் வெல்லமுடியாத மூன்று பட்டணங்கள் எங்களுக்கு வேணும்’ என்ன, அதற்குச் சிவபிரான் “அப்படியே யுண்டாகுக, அந்தப் பட்டணங்கள் மூன்றும் ஒன்றொடொன்று கூடாமல் திரியக் கடவன; மூன்றும் ஓரிடத்திலே கூடுகிறபோது உங்களுக்கு மஹத்தான ஆபத்து விளையும், பேணிக்கொள்ளுங்கோள்” என்று சொல்லி மறைந்து போயினன். பின்பு இரும்புக் கோட்டையாயும் வெள்ளிக்கோட்டையாயும் பொற்கோட்டையாயுமிருந்த மூன்று பட்டணங்கள் உண்டான. அசுரர்கள் அவற்றிலே யிருந்துகொண்டு தேவர்களையும், அவர்களை நோக்கி வேள்யி புரிகின்ற அந்தணர்களையும் பலவாறு நலிந்து கொண்டிருந்தனர். யாகம் முதலிய நடைபெறாமையினாலே ஹவிஸ்ஸுகிடைக்காமற்போகவே தேவர்களுக்கு வலியொடுங்கிற்; மிகவும் கஷ்டமாயிற்று. பிறகு பிரமன் முதலியோர் அனைவருங்கூடி சிவனருகிற்சென்று ‘பெருமானே! எங்களுக்கு ஹவிர்ப்பாகம் இல்லாமற்போயிற்று; யாகம் நடத்துகிற வூர்களிலே அசுரர்கள் அந்தப் பட்டணங்களோடே சென்றிருந்து நலிகின்றார்கள்; இத்துன்பம் பொறுக்க முடியாதிருத்தலால் அவர்களை உடனே ஸம்ஹரிக்கவேணும்’ என வேண்டிக் கொண்டார்கள். அதற்குச் சிவபிரான் “நச்சுமரமாகிலும் ஈட்ட மரங்களை வெட்டுவாருண்டோ? அவர்களை ஸம்ஹரிக்க என்னாலாகாது” என்ன, பிறகு அனைவரும் திருப்பாற்கடலிற்சென்று பரமபுருஷனைத் துதிக்க, திருமால் கருடன்மீது காட்சிதந்து, வந்த செய்தி என்னவென்று விசாரிக்க, இவர்களும் செய்தியைச்சொல்ல, “நீங்களெல்லாருங்கூடி அவர்களை ஸம்ஹரிக்கலாகாதோ?” என்று திருமால் கேட்க, “அந்த அவரவர்கள் தாங்கள் சில தருமங்களை யனுஷ்டிப்பது, சில யாகங்கள் பண்ணுவதாய் இப்படிச் சில தர்மச்ரத்தையைக் காட்டுகிறார்களாகையால் அவர்களை எங்களால் வெல்லப்போகாது” என்று  தேவர்கள் சொல்ல. அதற்கு திருமால் ‘ஆனால் அவர்களை நான் சிரஸிக்கிறேன். நீங்கள் உந்தம் இருப்பிடம் சென்று சேருங்கள்” என்று விடைகொடுத்தனுப்பிவிட்டு ஒரு பௌத்தக் கிழவனாக வேஷம்பூண்டு புறப்பட்டு ஓர் ஏட்டுச் சுவடியையும் இடுக்கிக்கொண்டு பவித்திரமும் அணிந்து கெண்டு அவ்வசுரர்களின் பட்டணங்களிலே சென்று பரமதார்மிகௌன்று அனைவரும் கருதும்படியாக நடந்துவந்தான். அப்போது அவர்கள் ஒரு யாகம் பண்ணத் தொடங்கினார்கள். காஷ்டம், நாவின் முதலியன சேமித்து வைத்திருந்தார்கள். கள்ள வேடத்திருமால் அங்கேசென்று ‘இந்த ஸமித்துக்கள் எதுக்கு?’ என்ன, ஹோமம் பண்ணுவதற்கென்று அவர்கள் சொல்ல, ‘ஐயோ! காஷ்டம் தின்னப் பிறப்பதிலுங்காட்டில் புலைத்தின்கிற பசுவாய்பிறப்பது நலமே’ என்றான். பிறகு  இந்த ஹவிஸ்ஸு எதற்கு என்று கேட்க, ‘தேவர்களுக்குக் கொடுக்க’ என்று அசுரர்கள் சொல்ல, அதற்குக் கள்ள வேடத்திருமால் “அயலூருக்குப் போகிற வொருத்தன் கட்டிப்போகிற சோற்றை வேறொருத்தன் கையிலே விட்டு வைத்துத் தான் போனால் அவனுண்டசோறு இவனுக்கு வ்து உதவினாவன்றோ தேவர்களுக்குக் கொடுக்கின்ற தரவிஸ்ஸும் உங்களுக்கு உதவும்” என்றான். பிறகு இந்த ஆடுகள் எதற்கென்று கேட்க; வ்பையை யெடுத்து ஹோமம் பண்ணவென்று அசுரர்கள் சொல்ல, “ஆனால் ஆட்டுவாணியனைப் பரம தார்மிகனாகச் கொள்ளலாம்போலும்” என்றான். இப்படியே பலபல க்ருத்ரிமோக்திகளாலே அவர்களை ப்ரமிப்பிக்க, அவர்களும் அவன் வார்த்தையிலே மிகவும் விச்வாஸங்கொண்டு யாகம் பண்ணுவதை விட்டு தர்மச்சர்த்தையும் குலைந்து ருத்ரனையும் தூஷிக்கத் தொடங்கினார்கள். அவ்வளவில் (அவன் (கள்ளவேடத்திருமான்) ருத்ரனருகே சென்று ‘அவர்கள் உன்னை தூஷிக்கிறார்கள். நாண் ‘என்ன, அதைக்கேட்டு அவன் சீறிச்சிவந்து அவர்களை ஸம்ஹரிக்க எண்ணங்கொண்டான். பூமியைத் தேராகவும் சந்திரஸூரியர்களைத் தேர்ச் சக்கரங்களாகவும் நான்கு வேதங்களை நான்கு குதிரைகளாகவும் பிரமனைச் சாரதியாகவும் முகாமேருவை வில்லாகவும் ஆதிசேஷனை வில் நாணியாகவுங்கொண்டு போர் நடத்தினான். (இவ்வரலாறு ஸ்ரீவிஷ்ணு புராணத்தில் மூன்றாவது அம்சத்திலுள்ளது.)

ஸ்ரீராமாயணத்தில் (அயோத்யா காண்டத்தில்) சிந்தரகூடபரிஸரத்தில் பரதாழ்வானுக்குப் பரிந்து நாஸ்திகவாதம் பண்ணின ஜாபாவியை நோக்கி ஸ்ரீராமன் யதா ஹி சோரள்ள ததா ஹி பந்த்; என்றான்; அதையுட்கொண்டு இங்கு ஆழ்வார் கள்ளவேடமென்கிறார். எம்பெருமான் புத்தமுகிவேஷங்கொண்டு அசுரர்களின் பட்டணங்களிலே புகுந்தபடியை புரம்புக்கவாறும் என்கிறது. ஆஸுரப்க்ருதிகளான அவர்களுக்கு அவைதிகமத்தை உபந்தயளித்து வைதிக சிரத்தையைப்போக்கி அவ்வழியாலே அவர்களைக் கொன்றொழித்தபடியை கலந்தசுரரை இவ்வாதியாலே சொன்னாரென்க.

விஷ்ணுராத்மா பதகதோ பவஸ்யாமித தேஜஸ; என்கிற ப்ரமாண ப்ரஸித்தியின்படி எம்பெருமான் சிவனுக்கு அந்தராத்மாவாக இருந்த த்ரிபுராஸம் ஹாரத்தை நிறைவேற்றியதுபற்றி வெள்ளநீர்ச்சடையாலும் நின்னடை வேறலாமை விளங்க நின்றதும் என்றார். இவ்வாழ்வார் தாமே முகந்திருவாய் மொழியில் புரமொரு மூன்றெரித்து உளன்று த்ரிபுரஸம்ஹாரத்தைத் திருமாலின் காரியமாகவே அருளிச் செய்தமையுங்காண்க.

 

English Translation

The mat-haired Siva entering stealthily into the cities of Asuras disguised, striking terror in their hearts, destroying them by the score, then entering into your person indistinguishably, -these enter my heart, melt and drink soul!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top