(3424)
அரியே றே!என் அம்பொற் சுடரே! செங்கட் கருமுகிலே,
எரியேபவளக் குன்றே! நாற்றோள் எந்தாய்! உனதருளே,
பிரியா அடிமை யென்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே,
தரியே னினியுன் சரணந் தந்தென் சன்மம் களையாயே.
பதவுரை
|
அரி ஏறே |
– |
சிறந்த சிங்கமே! |
|
ஏன் |
– |
நான் அனுபவித்தற்குரிய |
|
அம் பொன் சுடரே |
– |
அழகிய பொன்போன்ற ஒளியுருவனே! |
|
செம் கண் கரு முகிலே |
– |
சிவந்த கண்களையுடைய காளமேகம் போன்றவனே! |
|
எரி ஏய் பவளம் குன்றே |
– |
நக்ஷத்திர மண்டலத்தளவும் ஓங்கின பவளமலைபோன்றவனே! |
|
நால் தோள் எந்தாய் |
– |
சதுர்ப்புஜ ஸ்வாமியே! |
|
உனது அருகே |
– |
உனது கிருபையினாலர் |
|
என்னை பீரியா அடிமை கொண்டாய் |
– |
என்னை அத்தாணிச் சேவகங் கொண்டவனே! |
|
குடந்தை திருமாலே |
– |
திருக்குடந்தையில் வாழும் திருமாலே! |
|
இனி தரியேன் |
– |
இனிமேல் தரித்திருக்ககில்லேன்! |
|
உன் சரணம் தந்து |
– |
உனது திருவடிகளைக் கொடுத்தருளி |
|
என் ஈன்மம்களையாய் |
– |
எனது சரீரத்தொடர்பைத் தவிர்த்தருளவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (அரியேறே.) பிரானே! உன்னுடைய வைலக்ஷண்யத்தை நீயே காட்டித்தந்து அடிமையிலே என்னை ஊன்றவைத்தாயானபின்பு உன் திருவடிகளைத்தந்து தீரவேணுமன்றோ; தந்து பின்னை ஸம்ஸாரத்தைக் களைந்தொழியாய் என்கிறார். மேனாணிப்புத்தோற்ற விருக்குமிருப்பை அரியேறே! என்ற விளி காட்டும். அந்த மேனாணிப்புக்குத் தகுதியான வடிவுபடைத்தவ னென்கிறது அம்பொற்சுடரே! என்பது. விலக்ஷயமான பொன்போலே ஸ்ப்ருக்ஷணீணமான ஒளியையுடையவனே! என்றபடி. வடிவின் புகரைக்காட்டி என்னை யீடுபடுத்திக்கொண்டவனே! என்றவாறு. செங்கட்கருமுகிலே! – வாத்ஸல்யமாகிற அம்ருதத்தை வர்க்ஷிக்கிற திருக்கண்களையுடையவனே! என்றபடி.
எரியேபவளக்குன்றே! = எரியென்று கேட்டை நக்ஷத்திரத்திற்கு வாசகமாய் நக்ஷத்ரஸாமாந்யத்தைச் சொல்லி நிற்கும். நக்ஷத்ரமண்டலத்ளைவும் ஓங்கியிருக்கிற பவளக்குன்றபோலே (பவழமயமான மலைபோலே) விலக்ஷணமான வடிவு படைத்தவனே! உகவாதார்க்கு அபிபவிக்க வொண்ணாமையும் உகந்தார்க்குப் பரமபோய்னாயிருக்கையும் இத்தாவல் நினைக்கிறது. நால்தோளெந்தாய்! = கல்பகதரு பணைத்தாற்போலேயிருக்கிற திருத்தோள்களைக்காட்டி என்னை அநந்யார்ஹ சேஷப்படுத்திக் கொண்டவனே! என்கை. எம்பெருமானுடைய திருத்தோள்கள் நம்மாழ்வாருடைய திருவாக்கில் நுழைந்து புறப்பட்டவாறே விலக்ஷணமான வொருபெருமைபெறும். ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில்.
“அருமறைதுணிந்த பொருள் முடிவையின் சொலமுதொழுகுகின்ற தமிழினில் விளம்பியருளிய சடகோபர் சொற்பெற்றுயர்ந்தன – அழகிய மணவாளர் கொற்றப்புயங்களே” என்று பணித்ததுகாண்க. உனதருகே பிரியாவடிமை யென்னைக் கொண்டாய் = உன்னுடைய க்ருபையாலே மாத்திரம் என்னை அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக்கொண்டவனே! குடந்தைத்திருமாலே! – என்னை மாத்திர மன்றிக்கே பிராட்டியாரோடுகூட வாழ்பவனே! இனித்தரியேன் = இந்தச் செர்த்தியழகை நான் காணப்பெற்ற பின்பு இனி ஆறியிருக்க விரகுண்டோ? மாதா பிராக்காதள் அருகேயிருக்க, அவர்கள் ஸ்ரீமான்களுமாய் உதாரமாணிருக்க, ப்ரஜை பசித்துக் தரித்திருக்க முடியுமோ? உன்சரணம்தந்து என்சன்மம் களையாய் – ப்ரஜைகளின் வாயிலே முøலையைக் கொடுத்து சிகிச்ஸை பண்ணுமாபோலே முன்னம் திருவடிகளைத் தந்து பின்னை ஜன்மஸம்பந்தத்தை யறுன்னசேணும் என்கிறார் போலும்.
English Translation
O King-of-lions, golden radiance, red-eyed cloud-hued Lord! O Dazzling coral-mountain, my Lord of four arms, Lord in Kudandai! Through your grace, you made me your bonded sert. Now give me your protection and rid me of my birth. No more I can bear this.
