(3335)
போற்றி மற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டு உம்மையின்னே
தேற்றி வைத்ததெல் லீரும் வீடு பெற்றாலுல கில்லையென்றே,
சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குரு கூரதனுள்,
ஆற்ற வல்லவன் மாயம் கண்டீரது அறிந் தறிந் தோடுமினே.
பதவுரை
|
மற்று ஓர் தெய்வம் |
– |
வேறோரு தேவதையை |
|
போற்றி பேண |
– |
துதிக்கு ஆதரிக்கும்படியாக |
|
புறத்து இட்டு |
– |
வேறுபடுத்தி |
|
உம்மை |
– |
உங்களை |
|
இன்னே |
– |
இப்போதுநீங்களிருக்கிற விதமாக |
|
தேற்றி வைத்தது |
– |
தேவதாந்தரங்களை நம்பும்படியாக (எம்பெருமான்) செய்து வைத்ததானது |
|
எல்லீரும் |
– |
எல்லாரும் (எதற்காகவென்றால்) |
|
வீடு பெற்றால் |
– |
முக்தியுடைந்தால் |
|
உலகு இல்லை என்றே |
– |
புண்யபாண விஷயமான சாஸ்த்ர மரியாதை குலைந்துபோகுமென்கிற காரணத்தாலேயாகும்; |
|
சேற்றில் |
– |
சேற்றுநிலத்தில் |
|
செந்நெல் |
– |
செந்நெற்பயிர்களும் |
|
கமலம் |
– |
தாமரையும் |
|
ஓங்கி |
– |
ஓங்கி வளரப்பெற்ற |
|
திரு குருகூர் அதனுள் |
– |
திருநகரியிலே எழுந்தருளியிருக்கின்ற |
|
ஆற்றல் வல்லவன் |
– |
பரமசக்தியுக்தனான பெருமானுடைய |
|
மாயம் கண்டீர் |
– |
மாயையேயாமத்தனை; |
|
அது |
– |
மாயையென்பதை |
|
அறிந்து |
– |
தெரிந்துகொண்டு |
|
அறிந்து |
– |
அது தப்பும் வழி அவன் திருவடிகளைப்பற்றுவதே’ என்றும் தெரிந்துகொண்டு |
|
ஓடுமின |
– |
திருவடியே சென்று சேரப் பாருங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸ்ரீமந்நாராயணனே ஸர்வேச்வரனாகில் அவன் தன்னையே ஆச்ரயிக்கும்படி எங்களைப் பண்ணாமல் இதர தெய்வங்களைத் தொழுமாறு எங்களைச் செய்துவைத்தது ஏன்? என்று சிலர்கேட்பதாகக் கொண்டு அவர்களுக்கு உத்தரமளிக்கும் பாசுரம் இது. உங்கள் பாபந்தான் அதற்குக் காரணம் என்று விடை கூறிற்றாகிறது.
இப்பாசுரத்தில் எல்லீரும் வீடுபெற்றால் உலகில்லையென்றே என்பது தான் மருமமாகவுள்ளது. ஆபாதப்ரதீதியில் இதற்கு என்னபொருள் தோன்று மென்றால், எல்லாரும் ஸ்ரீமந்நாராயணனையே தொழப்பெற்றால், எல்லாருமே வீடுபெற்றுவிட்டால் லீலா விபூதி அடியற்றுப்போய்விடும்; அங்ஙனம் போகாமைக்காகவே எம்பெருமான் உங்களை இதர தேவதாபஜநம் பண்ணி ஸம்ஸாரிகளாய்த் தொலைந்துபோம்படி செய்துவைத்தான்-என்பதாகப் பொருள்தோன்றும். இப்படிப்பட்ட பொருள் எம்பெருமானுக்கு மிக்க அவத்யத்தை விளைக்குமதாகையாலே ஆழ்வார் இப்பொருள்பட அருளிச்செய்ய பரஸக்தியில்லை; ஆறாயிரப்படி முதலிய வியாக்கியானங்களில் இங்ஙனே பொருள் நெஞ்சாலும் நினைக்கப்படவில்லை. ஆனால், திருவாயமொழிக்கு ஸம்ஸ்க்ருதப்பதவுரையிட்டு (ஒன்பதாயிரப்படி இயற்றிய) தசோபநிஷத்பாஷ்யகாரரான ஸ்ரீரங்கராமாநுஜஸ்வாமி இப்பொருளையே பணித்து வைத்தார்; அவருடைய வாக்கியம் வருமாறு;-…..” என்பதாம்.
பிள்ளான் முதலிய ஸகலபூருவாசாரியார்களும் திருவுள்ளம்பற்றின பொருள் யாதெனில்; உலகில்லையென்ற என்ற விடத்தில் உலகு என்பதற்கு சாஸ்த்ரமர்யாதை என்று பொருள். அவரவர்கள் பண்ணின புண்யபாபரூப கருமங்களுக்குத் தக்கபடியு பலன் கொடுப்பதென்ற ஒரு சாஸ்த்மரியாதை ஏற்பட்டிருக்கின்றது; நீங்கள் முற்பிறவிகளில் பிரபலமான தீவினைகளைச் செய்திருந்தபடியால் அவற்றின் பலனாக இப்பிறவியில் உங்களை கூஷூத்ரதேவதாபஜனம் பண்ணும்படியாக உபேகூஷித்திடலாயிற்று கொடிய பாவங்கள் செய்த உங்களை புண்யாத்மாக்களைப்போலே ஸ்ரீமந்நாராயண ஸமாச்ரயணமே செய்யும்படி பண்ணிவிடுவதானால் அப்போது முன்சொன்ன சாஸ்த்மரியாதை அழிந்துவிடுமன்றோ. அங்ஙனம் அழியாமைக்காகவே உங்களை இங்ஙனே நிறுத்திவைத்தது-என்கை. வேதாந்ததேசிகனும் தார்பர்ய ரத்நாவளியில்; ….: என்று இவ்வர்த்தத்தையே வெளியிட்டருளினார்.
*மம மாயா துரத்யயா* என்று அவன்தானே கீதையில் சொல்லிவைத்தபடி தப்பவொண்ணாத இந்த மாயையை அவன் திருவடிகளைக் கட்டியே தப்பப்பாருங்களென்கிறார் பின்னடிகளில்.
English Translation
You who desolately worship lowly gods have been relegated to this, because if liberation is given to all, there will be no world then. This is the sport of the clever Lord of Kurugur city where golden paddy and lotus flowers abound; figure this out and run
