(3332)
பரந்த தெய்வமும் பல்லுல கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி டந்தது கண்டும் தெளியகில்லீர்,
சிரங்க ளால்அ மரர்வ ணங்கும் திருக்குரு கூரதனுள்,
பரன்திற மன்றிப் பல்லுலகீர் தெய்வம் மற்றில்லை பேசுமினே.
பதவுரை
|
பரந்த |
– |
விஸ்தீர்ணமான |
|
தெய்வமும் |
– |
தேவதாவர்க்கங்களையும் |
|
பல் உலகம் |
– |
(அவர்களுக்குப்) பல உலகங்களையும் |
|
படைத்து |
– |
ஸ்ருஷ்டித்தும் |
|
அன்று |
– |
பிரளயம் வந்த காலத்திலே எல்லாவற்றையும் ஒரு சேர விழுங்கி |
|
கரந்து |
– |
உள்ளே யொளித்து வைத்தும் |
|
உமிழ்ந்து |
– |
பிறகு வெளிப்படுத்தியும் |
|
கடந்து |
– |
(மஹாபலிடத்தில் தானம் பெற்று) அளந்து கொண்டும் |
|
இடந்தது |
– |
(மஹாவராஹமாய்) இடந்தெடுத்தும் ஆக இப்படிச்செய்த காரியங்களை |
|
கண்டும் |
– |
பிரமாணங்களாலே கண்டறிந்து வைத்தும் |
|
தெளிய கில்லீர் |
– |
தெளியமாட்டாத |
|
பல் உரலகீர் |
– |
பலவகைபட்ட உலகத்தவர்களே! |
|
அமரர் |
– |
தேவர்கள் |
|
சிரங்களால் வணங்கும் |
– |
தலையால் வணங்கப் பெற்ற |
|
திருகுருகூர் அதனுள் |
– |
திருநகரியில் எழுந்தருளியிருக்கிற |
|
பரன் |
– |
பரம புருஷனுக்கு |
|
திறம் அன்றி |
– |
பிரகாரமாயல்லது |
|
மற்று |
– |
வேறு ஸ்வதந்திரமாயிருப்பதொரு |
|
தெய்வம் இல்லை |
– |
தேவதை கிடையாது |
|
பேசுமின் |
– |
அப்படிப்பட்ட தேவதையொன்று உண்டாகில் சொல்லுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகங்களை ரகூஷித்தருள்வதற்காக எம்பெருமான் செய்து போரும் செயல்களை ஆராய்ந்து பார்த்தாலும் இவனே பரம புருஷனென்று அறியப்போது மென்கிறார்.
தேவ வர்க்கம் முதற்கொண்டு பூவுலகங்களையும் படைத்ததும் மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம் உண்ணா பெருவெள்ள முண்ணுமல் தான்விழுங்கி உய்யக் கொண்டதும், பிறகு வெளிநாடுகாணப்புறப்படவிட்டதும், வாமனுவதாரம் பண்ணி மூவடி நீரேற்றுப்பெற்று அளந்து கொண்டதும், மஹாவராஹமாய் அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொண்டதுமாகிய இத்தகைய செயல்களைக் கொண்டே இவனே பர தேவதை என்று திண்ணமாக எண்ணலாயிருக்க, அந்தோ! தெளிவுபெற மாட்டிற்றிலீரே என்கிறர்முன்னடிகளில்.
எந்த தெய்வங்களை நீங்கள் சென்று பணிகின்றீர்களோ அந்த தெய்வங்களும் வந்து தலையாலே வணங்கும் திருக்குருகூரில் பரத்வம் பொலிய நிற்கும் பெருமானுக்குச் சரீரமல்லாத தெய்வம் ஒன்றுண்டோ? *** என்னும்படியாக வன்றே ஸகல தெய்வங்களுமிருக்கின்றன. ஸ்ரீமந் நாராயணனைப்போலே ஸ்வதந்த்ரமான தெய்வம் ஒன்றுண்டாகில் எடுத்துப் பேசுங்களென்களென்கிறார்.
English Translation
He made all the gods and all the worlds, then in a trice swallowed all; then hid, issued, traversed, and shifted all. O Meni of the world! Now speak! Knowing this, do you still not understand? Other than his form in kurugur, worshipped by the gods, there is no Lord.
