(3331)

(3331)

நாடி நீர்வ ணங்கும் தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,

வீடில் சீர்ப்புக ழாதிப்பி ரானவன் மேவி யுறைகோயில்,

மாட மாளிகை சூழ்ந்தழ காய திருக்குரு கூரதனைப்,

பாடி யாடிப் பரவிச் செல்மின்கள் பல்லுல கீர்பரந்தே.

 

பதவுரை

பல் உலகீர்

பலவகைப்பட்ட உலகர்களே!

நீர்

நீங்கள்

நாடி

தேடி

வணங்கும்

வணங்கும்படியாகவுள்ள

உம்மையும்

உங்களையும்

முன் படைத்தான்

முன்னம் படைத்தவனும்

வீடு இல் சீர்

நித்யஸித்தங்களான திருக்குணங்களிலுண்டான

புகழ்

புகழையுடையனுமான

ஆதி பிரான் அவன் மேவி உறைகோயில்

ஆதிநாதன் விரும்பி யெழுந்தருளியிருக்குமிடமான

மாடம் மாளிகை சூழ்ந்து அழகு ஆய திரு குருகூர் அதனை

மாடமாளிகைகளால் சூழப்பட்டு அழகு வாய்ந்த திருநகரியை

பாடி ஆடி

பாடுதலும் ஆடுதலும் செய்து கொண்டு

பரவி

துதித்து

பரந்து செல்மின்கள்

எல்லாவிடத்திலும் பரவி நடவுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகர்களே! நீங்கள் எந்த தெய்வங்களைப் பணிகின்றீர்களோ, அந்த தெய்வங்களோடு உங்களோடு ஒரு வாசியில்லை; நீங்கள் எப்படி கார்யபூதர்களோ அப்படியே அவர்களும் கார்யபூதர்களேயல்லது காரணபூதர்களல்லர்; ஆகையாலே, அவர்களை நீங்கள் ஆச்ரயிப்பது போல உங்களையும் அவர்கள் ஆச்ரயிக்கலாம்.  உங்களைக்காட்டிலும் அவர்களுக்குச் சிறிது ஞானமும் சக்தியும் ஏறியிருக்கிறது என்கிற இவ்வளவேயல்லது வேறொரு வாசியில்லைகிடீர்; உங்களோடு அவர்களோடு வாசியற அனைவர்க்கும் காரணபூதனான ஸ்ரீமந்நாராயணன் காட்சி தந்தருளுமிடமாகிய திருநகரியைப் பணியுங்கோளென்கிறார்.

நீர்நாடிவணங்கும் தெய்வமும்-நாடுதலாவது தேடுதல்; உங்களால் தேடிவணங்கப்படுகிற தெய்வங்களையும் என்றபடி. “***“சாஸ்த்ரங்களானவை என்று பரமபுருஷனைத் தேடவேண்டு மென்று சொல்லாநிற்கஇ அந்தோ! நீங்கள் காபுருஷா;களைத் தேடி யோடுவதே! என்று கர்ஹிக்கிறபடி. எம்பெருமான் உங்களைத் தேடாநிற்கஇ நீங்கள் நீசர்ர்களைத்தேடியோடாநின்றீர்களே! என்றுமாம்.

இங்கே நம்பிள்ளையீடு;-“கள்ளரைத் தேடிப்பிடிக்குமாபோலே தேடிப் பிடிக்க வேண்டி  யிருக்கிறபடி; ஆடு திருடினகள்ளாரிறே இவர்கள்தாம்;. -ஜீவஹிம்ஸையையே ஆராதனமாகக்கொண்டிருக்கிற கூஷூத்ர தெயவங்களென்று காட்டினபடி.

வீடு இல் சீர்புகழ்=சீர் என்பதற்குச் செல்வம் என்கிற பொருளும் குணம் என்கிற பொருளும் உண்டு.  ஒருநாளுங் குறையாத செல்வங்களையுடையவன் என்றும், நித்யஸித்தங்களான திருக்குணங்களையுடையவன் என்றும் கொள்க.

அவன்மேவியுறை கோயில் என்றவிடத்து நம்பிள்ளையீடு;-“அவன் பரமபதத்தில் உள்வெதுப்போடே போலே காணுமிருப்பது; ஸம்ஸாரிகள் படுகிற க்லேசத்தை அநுஸந்தித்து ‘இவை என்படுகிறனவோ’ என்று திருவள்ளத்தில் வெறுப்போடேயாயிற்று அங்கிருப்பது…….  கன‘பரமபத்திலும் படுகிற க்லேசத்தை யநுஸந்தித்துத் திருவுள்ளத்தில் வெதுப்போடேயாயிற்று எழுந்தருளியிப்பது என்று பட்டர் அருளிச்செய்ய •••  ஆச்சானும் பிள்ளை யாழிவானும் இத்தைக்கேட்டு பரமபதத்திலே ஆஙந்த நிர்ப்பானாயிருக்கிற விருப்பிலே திருவுள்ளத்திலே ஒரு வ்யஸகத்தோடே யிருந்கானென்கை ஒசிதமோ?” என்றார்கள் -என்று பண்டிதரென்கிறவர் வந்து விண்ணப்பஞ்செய்ய என்றது குணப்ரகரணத்திலேயோ தோஷப்ரகரணத்திலேயோ வென்று கேட்கமாட்டிறடறிலீரோ? இது குணமாகில் குணமென்று பேர் பெற்றவற்றில் அங்கில்லாததொன்றுண்டோ என்றருளிச்செய்தார்.”

இந்த ஐதிஹ்யம் இங்கு அருளிச்செய்ய ப்ரஸக்தி ஏதென்னில் மூலத்தில் “அவன் மேவியுறைகோயில்” என்றுள்ளது மேவியுறைதலாவது ஆசையோடு வாழ்தல் பரமபதத்தில்பட்ட துக்கம் இங்குத் தீரப்பெறுவோமென்று ஆசைப்பட்ட வாழ்தலென்றே பொருள் சொல்லவேண்டியிருத்தலால்; பரமபதத்திலும் பெருமானுக்கு துக்கப்ரஸக்தியுண்டோ வென்று சங்கையுண்டாகுமாதலால் அதைப்பரிஹரிக்க ஐதிஹ்யமருளிச் செய்தபடி.

எம்பெருமானை ஸமஸ்தகல்யாண குணாத்மகன் என்றும் உயர்வறவுயர் நலமுடையவன் என்றும் கூறுகின்றவர்கள் ஒன்றெழியாமே ஸகலகுணங்களும் அப்பெருமானிடத்தே ஸமஸ்த கல்யாண குணாம்ருதோதி என்று சொல்வதற்குக் குறை நேர்ந்ததாகும்.  துக்கப்படுவதென்பது கல்யாணகுணமன்றே  அது ஹேய குணமாயிற்றே என்று சிலர்கலங்குவர்கள் ஸ்வார்த்தமான சோகம் ஹேயமேயன்று அதுதான் சிறந்த குணமெனப்படும்.  ஆனதுபற்றியே இராமபிரானுடைய சுப ப்ருசம் பவதி துஃக்கித என்கிறார்கள் .  எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யத்தில் •••   என்றருளிச் செய்தார். ஸஹஸ்ரநாமத்திலே விகர்த்தா என்னும் திருநாமத்தின் பாஷ்யத்திலே இதன் கருத்து ) தமக்காக இன்பதுன்பங்கள் இல்லாமலிருந்தும் பிறர் இன்பதுன்பங்களை அநுபவிப்பதனால் தாம் இன்பதுன்பங்களையடைந்து விகாரப்படுகிறவர் இந்த விகாரம் பிறாரிடத்திலுள்ள அன்புபற்றியதாதலால் ஈச்வரனுக்குக் குற்றமாகாது என்று ஸ்பஷ்டமாகவே அருளிச்செய்தார்.

எம்பெருமான் அனுபவிக்கிறதாகச் சொல்லப்படுகின்ற துக்கம் மெய்யானதா பொய்யானதா என்கிற விசாரமே அவசியமற்றது. எம்பெருமானென்று ஒருவனுளனென்றும் அவன்றன் சமஸ்த கல்யாணகுணநிதியென்றும் இசைகின்றவர்கள் அப்பெருமானைப் பாதுக்க துக்கியாக இசைந்தேதீரவேணும். இக்குணம் அவனுக்குப்பொருந்தாது என்பவர்கள் நிர்க்குணப்ரஹ்மவாதிகளேயாவர்.

முதற்பாட்டில் “திருக்குலுகூரதனுள்; நின்றவாதிப்பிரான்” என்று எம்பெருமானளவுஞ்சென்று பேசின ஆழ்வார் இப்பாட்டில் “திருக்குருகூரதனைப் பாடியாடிப் பரவிச்சென்மின்கள்” என்கிறார் எம்பெருமானிற்காட்டிலும் அவன் உகந்தருளினவிடமே பரமப்ராயம் என்று காட்டினபடி. திவ்யதேசத்திலே சென்று சேர்ந்து சேவிப்பதிலுங்காட்டில் வழிப்போக்குத்தானே மிக இனிதாகையாலே பாடியாடிப் பரவிச்சென்மின்கள் என்கிறார்.

பரந்தே என்றவிடத்து ஈடு “பெரிய திருநாளுக்கு —(ஸர்வதோதிக்க) மாக வந்தேறுமாபோலே நாகாஷிக்கமாகப் பாடியாடிப் பரவிச்சென்மின்கள்”.

 

English Translation

O Men of the world!  Then He created you and the gods you worship.  With unending goodness and frame, he resides willingly in kurugur, temple town with balconied mansions all around, sing and dance and praise him, roaming everywhere

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top