(3289)

(3289)

மருந்தாகும் என்றங்கோர் மாய வலவைசொற் கொண்டு,நீர்

கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?

ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட,

பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே.

 

பதவுரை

(அன்னை மீர்)

தாய்மார்களே!

மருந்து ஆகும் என்று

நோய்க்குப் பரிஹாரமாகுமென்றெண்ணி

ஓர் மாயம் அலவை சொல் கொண்டு

வஞ்சகச் செய்கைகளையுடையளாயும் தோன்றினபடியே சொல்லுபவளாயமிருக்கின்ற ஒருத்தியின் பேச்சைக்கொண்டு

நீர்

நீங்கள்

கரு சோறும்

கருஞ்சோற்றையும்

மற்றை செம்சோறும்

மற்றுள்ள செஞ்சோற்றையும்

களன்

நாற்சந்தியிலே

இழைத்து

இடுவதனால்

என் பயன்

என்ன பலனுண்டாம்? (இது வீணான காரியம்;)

உலகு ஏழும்

ஸப்தலோகங்களையும்

ஒருங்கு ஆக எ

ஒருகாலே

விழுங்கி

(பிரளம் கொள்ளாதபடி.)உட்கொண்டு

உமிழ்ந்திட்ட

பிறகு வெளிப்படுத்தின

பெரு தேவன்

பரதேவதையான ஸ்ரீமந்நாராயணனுடைய

பேர்

திருநாமங்களை

சொல்ல கிற்கில்

(இவளது காதிலே படும்படி.)சொல்லவல்லீர்களானால்

இவளை பெறுதிர்

இவளை இழவாமே பெறுவீர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருநாமங்களை இப்பெண்பிள்ளை செவிப்படச் சொல்லுவதே; இந்நோய்க்குப் பரிஹாரமென்கிறாள்.  யுக்தாயுக்த நிரூபணம் பண்ணாமல் கண்டபடியே சொல்லுகிறவளுக்கு அலவையென்று பெயர்; இங்கே கட்டுவிச்சியைக் குறிக்கின்ற சொல் இது.  பரிஹாரமுறைமை சொல்லவந்து தோன்றினபடியே பிதற்றாநின்ற இக்கட்டுவிச்சியின் சொல்லைநம்பி நீங்கள் க்ஷுத்ரதெய்வங்கள் வந்து ஸந்நிதிபண்ணுமிடமான நாற்சந்தி முதலானவற்றிலே செஞ்சோறு கருஞ்சோறுகளை யிடுவதனால் என்ன பயனுண்டு?

பின்னை என்செய்யவேணுமென்னில்: ஆச்ரிதர் அநாச்ரிதர் என்கிற வாசிபாராமல் ஸகலலோகங்களையும் பிரளயம் விழுங்காதபடி தான் விழுங்கி ரக்ஷித்துஇ ப்ரளயம் கழிந்தவாறே வெளிப்படுத்தின பரதேவதையின் திருநாமம் சொல்லவல்லீர்களாகில்; இவள் உய்யப்

பெறலாம்:  வேறுவகையான காரியங்கள் செய்வது இவளை இழப்பதற்கே  உறுப்பாமென்றவாறு.

 

English Translation

Listening to some wierd hag’s worlds, you throw black and red cooked-rice balls on the after, what use?  Recite the names of the Lord who in a trice swallowed and made the worlds.  You will surely get your daughter back

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top