(3287)

(3287)

திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்,

இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது,

திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்க,நீர்

இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே.

 

பதவுரை

(அன்னைமீர்)

தாய்மார்களே!,

திசைக்கின்றதே

நீங்கள் இப்படியும் அறிவு  கெடலாகுமோ?

இவள் நோய் இது

இப்பெண்பிள்ளைக்கு உண்டாகியிருக்கின்ற இந்நோயானது

மிக்க பெரு தெய்வம்

பராத்பரமான தெய்வமடியாக வந்தது;

இசைப்பு இன்றி

தகுதியில்லாதபடி

நீர்

நீங்கள்

அணங்கு ஆடும்

வெறியாடுவிக்கின்ற

இள தெய்வம் அன்று இது

க்ஷு த்ரதெய்வமடியாக வந்ததன்று இது; (ஆதலால்)

திசைப்பு இன்றியே

மனக்குழப்பம் தவிர்ந்து

நீர்

நீங்கள்

இவள்கேட்க

இப்பெண்பிள்ளையின் காதில் விழும்படியாக

சங்கு சக்கரம் என்று

சங்கென்றும் சக்கரமென்றும்

இசைக்கிற்றிர் ஆகில்

சொல்ல வல்லீர்களானால்

தன்றே

நலமாகவே

இல் பெறும்;

(இவள்) இல்லிருப்பப் பெறும்படியாகும்:

இது காண்மின்

இங்ஙனே நடத்திப் பாருங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- க்ஷுத்ரதெய்வங்களைக் குறித்துப்பண்ணும் சாந்திகளால் இவளுடைய நோய் போக்கவரிது; எம்பெருமானுடைய லக்ஷ்ணங்களைச் சொல்லில் இவளைப்பெறலாமென்கி

றாள்.  திசைக்கின்றதே என்பது மிக வருந்திச் சொல்வதாகும்.  இப்படியம் ப்ரமிக்கலாகுமோ ? என்று க்ஷேபிக்கிறபடி.

இவள் நோயிது மிக்க பெருந்தெய்வம் = திருவிருத்தத்தில் “வானோர் தலைமகனாம் சீராயின தெய்வநன்னோய் இது” என்றும் “தின்மொழிநோயோ கழிபெருந்தெய்வம்” என்றும் உள்ள பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கன.  “ …………..    என்கிறபடியே

பரதெய்வமான ஸ்ரீமந்நாராயணனாலே உண்டுபண்ணப்பட்ட நோய் இது என்றபடி.

நீர்இசைப்பின்றி அணங்காடும் இளந்தெய்வமன்று இது-இசைப்பு-பொருத்தம்: அஃதில்லாமல் நீங்கள் செய்வித்துப்போருகிற வெறியாடல் முதலான தீயசெயல்களுக்கு இலக்கான தெய்வமடியாக வந்த நோயல்ல இது என்றபடி. இசைப்பின்றி யென்பதற்கு ஈடு:-

“நீங்கள் பண்ணுகிற பரிஹாரத்துக்கும் உங்களுக்கும் ஒரு சேர்த்தியில்லை:  இந்நோய்க்கும் இவளுக்கும் ஒரு சேர்த்தியில்லை: முதல்தண்ணிலே பகவத்விஷயத்திலே கைவைத்தார் கொள்ளுகைக்கு ஸம்பாவனையுடைய நோயன்று இதுதான்.  ஒரு வழியாலும்

ஒரு சேர்த்தியில்லை.”

அணங்காடுதல்-தெய்வமாவேசித்து ஆடுதல். இனிச்செய்யவேண்டிய ஸமஞ்ஜஸமான பரிஹாரப்ரகாரமுணர்த்துவன பின்னடிகள்.  திசைப்பின்றியே-மருள்கொள்ளாமல்,

எம்பெருமானுடைய திவ்யாயுதங்களை இவள் செவிப்படுமாறு ப்ரஸ்தாவிப்பதே  நன்று என்கை.

இவ்விடத்திலே ஒரு ஐதிஹ்யம்: பட்டர்காலத்தில் ஆய்ச்சிமகன்  என்றொரு பாகவதர்; அவர் நோவுகண்டு ப்ரஜ்ஞையற்றுக் கிடக்குங்காலத்திலே பட்டர் அவரைப்பார்க்க எழுந்தருளினாராம்: அப்போது அந்த ஆய்ச்சிமகன் அடியோடு அறிவு நடையாடாதபடி

யிருப்பதைக் கண்டபட்டர் அவர் அழகிய மணவாளனிடத்தில் மிக்க பக்தியுடையவர் என்பது காரணமாக அவருடைய செவியிலே மெள்ள ஊதினாப்போலே ‘அழகியமணவாளப் பெருமானே சரணம்’ என்றாராம்:  அதனால் உணர்ச்சியுண்டாய் நெடும்போதெல்லாம் அவர்

அந்த வார்த்தையையே சொல்லிக்கொண்டிருந்து திருநாட்டுக்கு நடந்தாராம்.

நன்றே இல்பெறும், நன்று எயில்பெறும்-என்று இரண்டு வகையாகப் பிரிப்பார்கள்; இரண்டாவதில், நன்று-நன்றாக, எயில்பெறும்-வார்த்தை சொல்லப்பெறுவள் என்றவாறு மயக்கம் நீங்கி உணர்த்தியுண்டாகுமென்கை.

 

English Translation

Alas, You have not understood her sickness; a great divinity has possessed her, not some mean god for whom you dance incongruously.  Say clearly and sweetly into her ears, “Conch-and-discus”, She will immediately recover, just see!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top