(3286)

(3286)

தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்,

ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன் னோயிது தேறினோம்,

போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த, மாயப்போர்த்

தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே.

 

 

அன்னை மீர்

தாய்மார்களே!

இனி

இப்படிப்பட்ட நிலைமையான பின்பு

தீர்ப்பாரை

இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை

யாம் எங்ஙனம் நாடுதலும்

நாம் எவ்விதமாகத் தேடிப்பிடிக்க முடியும்? (முடியாது)

ஓர்ப்பால்

நன்கு நிரூபிக்குமளவில்

இ ஓள் நுதல்

அழகிய நெற்றியையுடைய இப்பெண்பிள்ளை

உற்ற இது

அடைந்திருக்கின்ற இந்த நோயானது

நல் நோய்

விலக்ஷ்ணமான நோயாகும் ;

தேறினோம்

திண்ணமாக அறிந்தோம் ;

அன்று

முன்பொருகாலத்திலே

போர்

பாரதப்போரிலே

பாகு

பாகனாயிருந்து செய்யவேண்டிய காரியங்களை

தான் செய்து

தானே முன்னின்று நடத்தி

ஐவரை

பஞ்சபாண்டவர்களை

வெல்வித்த

ஐயம் பெற்றவர்களாகச் செய்வித்த

மாயம்

ஆச்சரிய சத்தியுக்தரும்

 

 

போர் தேர் பாகனார்க்கு

யுத்தபூமியில் தேர்செலுத்தவல்லவருமான பெருமாள் விஷயத்திலே

இவள்

இப்பராங்குச நாயகியினுடைய

சிந்தை

மனமானது

துழாய்

துழாவப்பெற்று

திசைக்கின்றதுஎ

அறிவழயா நின்றதே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பராங்குசநாயகியன் தோழியானவள், ‘இந்நோய் பாண்டவபக்ஷ்பாதியான கண்ணபிரானடியாக வந்ததாகையாலே இதற்கு நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமல்ல’ என்று க்ஷேபிக்கிறாள்.  அன்னைமீர்! யாம் இனித்தீர்ப்பாரை எங்ஙனம் நாடுதும்? = இச்சொல்தொடர் பலவகைக் கருத்துக்களைக் கொண்டது; இவ்வாழ்வாருடைய அருகிலே வருமவர்களெல்லாம் இவரோடொப்ப மோஹிப்பவர்களேயன்றி, உணர்ந்திருந்து பரிஹாரமுறைமைகளை ஆராயவல்லார் ஒருவருமில்லையே! என்கை.  நோய்க்குப் பரிஹாரம் பண்ணிக்கொண்டிருக்குமவர்களை நோக்கித் “தீர்ப்பாரையாமிளி யெங்ஙனம் நாடுதும்” என் கையாலே நீங்கள் செய்கிறவை பரிஹாரமல்ல என்றவாறுமாம். “கடல்வண்ணாரிது செய்து காப்பாராரே?” என்கிறபடியே * நோய்களறுக்கும் மருந்தான எம்பெருமாள் தானே இங்ஙனே நோய்செய்தானான பின்பு இனி இந்நோயைத் தீர்க்க வழியுண்டோ? என்றபடியுமாம்.

ஓர்ப்பால்-இப்போது ஆராய்;ந்து பார்த்தவிடத்தில் என்றபடி.  ஓர்ப்பு-ஆராய்ச்சி. அகத்தினழகு முகத்திலே தெரியும்” என்பர்களே “உலகர்கள்: இவளுடைய திருமுகமண்டலத்தில் தெளிவை நோக்கும்போதே இவளுடைய நோய்க்கு நிதாநம் தெரியவில்லையோ என்கை.  இங்கே ஈடு:-“அம்புபட்ட வாட்டத்தோடே முடிந்தா

ரையும் நீரிலேபுக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ? குணாதிக விஷயத்தையாசைப்பட்டுப் பெறாமையாலுண்டான மோஹமாகையாலே முகத்தில் செல்விக்கு ஆலத்தி

வழிக்க வேண்டும்படியாயிற்றிருக்கிறது.”

நோய் என்னாதே ‘நன்னோய்’ என்கையாலே, ஒவ்வொருவரும் நோன்பு நோற்றுப்பெறவேண்டிய நோயன்றோ இது: இது வளர்வதற்கு வழிதேடவேண்டுமேயல்லது இதைப்பரிஹரிக்க முயல்வது முறையோ? என்ற கருத்து வெளியாம்.

தேறினோம்-தெளிவுபெற்றோ மென்றபடி.  இது தோழி சொல்லும் வார்த்தையாகையாலே, தான் தெளிவு பெற்றதாகச் சொல்லுகிறவிதனால் அங்குள்ளாரெல்லாரும் கலக்

கமுற்றிருப்பதாக ஏற்படுகின்றது:  இந்தக் கலக்கமே இவர்களுக்கு நிதியாம்:  “மஹர்ஷிகளின் கோஷ்டியில் கலக்கம் காணக்கிடைக்காது: ஆழ்வார்களின் கோஷ்டியில் தெளிவு  காணக்கிடைக்காது” என்பர் நம் முதலிகள்.  தெளிந்திருக்க வேண்டுவதன்றோ ப்ராப்தம்:

கலங்கியிருத்தல் ஹேயமன்றோவென்று ஸாமாந்யர் நினைப்பர்கள்: “தர்மவீர்யஜ்ஞானத்தாலே தெளிந்து ஹ்ருஷ்டராய் மேலே மேலே தொடுப்பாரைப் போலன்றே அருளின பக்தியாலே

உள்கலங்கிச் சோதித்து மூவாறு மாஸம் மோஹித்து வருந்தி யேங்கித் தாழ்ந்த சொற்களாலே நூற்கிறவிவர்” என்ற ஆசார்யஹ்ருதய திவ்யஸூக்தி நோக்குக.

இத்தலைவிக்கு உண்டான நோய் இன்னவகைத்து என்பதைப் பின்னடிகள் நிரூபிப்பன.  கண்ணபிரான், பாண்டவர் துர்யோதநாதிகள் என்ற இருவகுப்பினரையும் ஸந்தி செய்விக்கைக்காகத் துரியோதநாதியரிடம் துர்தாகச்சென்று பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ளவேண்டா: ராஜ்யத்தில் இருவர்க்கும் பாகமுண்டு: ஆகையால் ஸமமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதானமாக அரசாட்சி செய்து வாழுங்கள்; அதற்கு ஸம்மதியில்லாவிடில்,

தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர் ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்;  அதுவும் அநிஷ்டமாகில் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஒரூரையாவது  கொடுங்கள்’ என்று

பலபடி அருளிச் செய்ய, அந்தச் சொல்லுக்குச் சிறிதும் இசையாமல் ‘பராக்ரமமிருந்தால் போர் செய்து ஜயித்துக்கொள்ளட்டும்; இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்றிப்படி திக்காரமாக மறுத்துச் சொல்லவே, தான் பாண்டவ பக்ஷ்பாதியாய்ப் பார்த்தஸாரதியாயிருந்து

பாரதயுத்தத்தை நடத்திவைத்து எதிரிகளைத் தோற்பித்து அடியவர்களை வெற்றி பெறுவித்தருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது.

இவள் சிந்தை துழாய் திசைக்கின்றது மாயப்போர்த் தேர்ப்பாகனார்க்கு =கண்ணபிரானுடைய ஆச்ரிதபக்ஷ்பாதம், ஆச்ரிதஸௌலப்யம் முதலிய திருக்குணங்களில் ஈடுபட்ட

தனாலுண்டான நோய்காண்மின் இது என்று தெரிவித்தாளாயிற்று.  துழாய்-துழாவி: ப்ரமித்து என்றபடி.

 

English Translation

Ladies! We have examined well this bright-forehead girl, and diagnosed her good malaise; her heart yearns for the charioteer, who commanded the army in fierce battle, and secured victory for the five pandavas.  How now can we seek a healer?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top