(3285)

(3285)

மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை,

வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்,

காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால்,

வேரி மாறாத பூமே லிருப்பாள் வினைதீர்க்குமே.

 

பதவுரை

மாரி மாறாத

மழைதப்பாதபடியினாலே

தண்

குளிர்ந்து

அம்

அழகியதான

வேங்கடம் மலை

திருவேங்கடம்மலையிலேயுள்ள

அண்ணலை

ஸ்வாமி விஷயமாக

வாரி மாறாத

ஜலஸம்ருத்தி குறையாத

பை பூ பொழில் சூழ்

பரந்த பூஞ்சோலைகளாலே சூழப்பட்ட

குருகூர் நகர்

திருநகரியில் (அவதரித்த)

காரி மாறன் சடகோபன்

ஆழ்வார்

சொல்

அருளிச்செய்த

ஆயிரத்து

ஆயிரத்தில்

இப்பத்தால்

இப்பத்துப் பாசுரங்களினால்,

வேரி மாறாத

பரிமளம் அறாத

பூ மேல் இருப்பாள்

தாமரை மலரிலே நித்ய வாஸம் பண்ணுகிற பிராட்டி

வினை தீர்க்கும்

எல்லாப் பாபங்களையும் போக்கியருள்பவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி கற்பாருடைய தீ வினைகளையெல்லாம் பெரியபிராட்டியார் தீர்த்தருளக்கூடுமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார்.  மழை ஒருநாளும் மாறாதபடியாலே குளிர்ந்து அழகியதான திருவேங்கடமலையிலே, தாழ்ந்தார்க்கு முகங்கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலம்பொருந்திய எம்பெருமான் விஷயமாகப் பணித்ததாம் இப்பதிகம்;  ஒரு பாசுரத்திலும். திருவேங்கடமுடையானுடைய ப்ரஸ்தாவமே இல்லையாயிருக்க இங்ஙனே சொல்லுவானேன்? என்னில்; தர்மியின் ஐக்கியத்தைக் காட்டினபடி.  திருவாய்மொழிக்கு அர்ச்சாவதாரத்திலேயே முழுநோக்கு என்று காட்டினபடியுமாம்.  இப்பதிகத்தில் “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை” என்று பெரிய பிராட்டியார்க்கு முன்பே நித்யஸம் ஸாரிகளுக்கு முகங்கொடுக்கும் சீலத்தைச் சொல்லிற்றாகையாலே சீலத்துக்கு எல்லையான திருவேங்கடமுடையானைக் கவிபாடினபாயாயிற்றென்ப.

“வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்கும்” என்கையாலே பிராட்டிக்கும் எம்பெருமானுக்குப் போலவே பலனளிக்குந்திறன் உண்டென்று சிலர்சொல்லுவார்கள். நம்மை எம்பெருமான் அங்கீகரிப்பதற்கு இடையூறாக இருக்கும் தீவினைகளைப் புருஷகாரக்ருத்யத்தாலே பிராட்டி போக்குவாள் என்றதித்தனை.  சதுச் ச்லோகீ பாஷ்யத்திலே ஸ்ரீமந்நிக மாந்ததேசிகன் “…

ஹெ-அஸ்தி கர்மார்ஹபலதே பத்யௌ க்ருத்யத்வயம் ச்ரிய:இ நிக்ரஹாத் வாரணம் காலே ஸந்துக்ஷ்ணமநுக்ரஹே.” என்று ஒரு காரிகை அருளிச் செய்துள்ளார்.  இஃதொன்று போதும் அவ்வாசிரியருடைய ஸித்தாந்தத்தை நன்கு தெளிய.  இக்காரிகையின் பொருளில் யாரும் விவாதப்பட இடமில்லை.  இதிற் சொல்லுவதாவது-கர்மாநுகுணமாய்ப் பலன் கொடுப்பதில் எம்பெருமானுக்கே அதிகாரமுள்ளது.  அவன் ஹிதைஷியான பிதாவாகையாலே சில ஸமயங்களில் நிக்ரஹிப்பது முண்டு; சில ஸமயங்களில் அநுக்ரஹிப்பதுமுண்டு; அப்படிப்பட்ட ஸமயங்களில் பிராட்டி என்ன செய்கிறாளென்னில், அவன் அநுக்ரஹத்தில் அபிமுகனாயிருக்கும்போது இவள் அதை மேன்மேலும் வளரச் செய்வதில் ஊக்கங்கொள்ளுகிறாள்.  நிக்ரஹத்தில் அபிமுகனாயிருக்கும்போது அதை தணிப்பதிலே ஊக்கங்கொள்ளுகிறாள்.  இவ்விரண்டு செயல்களே பிராட்டியினுடையவை-என்பதே மேற்குறித்த காரிகையின் பொருள்.  ‘இதுவன்று பொருள்’ என்று யாரும் இயம்ப இயலாது.  இதுதான் தேசிகஸித்தாந்தம் இதுவேதான் லோகதேசிக ஸித்தாந்தமும்.

 

English Translation

This decad of the thousand sweet songs, by Karimaran Satakopan of cool-groved Kurugur city, is addressed to the Lord of incessantly raining Venkatam.  Those who master it will end all despair, by the grace of the lady-of-the-unfading-lotus

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top