(3277)

(3277)

வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்,

வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை,

வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்,

வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.

பதவுரை

வீவு இல் இன்பம்

அழிவில்லாத ஆனந்தமானது
மிக எல்லை நிகழ்ந்த

மிகுதியான எல்லையிலே வர்த்திக்கிற (படியினாலே)
நம் அச்சுதன்

அச்சுதன் என்னும் திருநாமத்தையுடையனாய்
வீவு இல் சீரன்

முடிவில்லாத வைலக்ஷண்யத்தையடையனாய்
மலர்கண்ணன்

தாமரை மலர்போன்ற கண்களையடையனாய்
விண்ணோர் பெருமான் தன்னை

விண்ணோர்க்குத் தலைவனானவனை
லீவு இல் காலம்

ஒழிவில்லாத காலமெல்லாம்
இசை மாலைகள்

இசைமிக்க சொல்மாலைகளாலே
ஏத்தி

துதித்து
மேவ பெற்றேன்

கிட்டப்பெற்றேன்;
மேவி

கிட்டி
வீவு இல்

முடிவில்லாத
இன்பம்

ஆனந்தத்தினுடைய
மிக எல்லை

முடிவான எல்லையிலே
நிகழ்ந்தனன்

இராநின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்மொழி அடிமை செய்யப்பெறுகையால் தமக் குண்டான ஆனந்தம் எம்பெருமானுடைய ஆனந்தத்தையும் அதிசயித்தது என்கிறார்.  முதலடி ஆனந்தவல்லியை யடியொற்றி அருளிச்செய்தததென்று ஆசாரியர்கள் திருவுள்ளம்பற்றுகிறார்கள்.  ஆனந்தவல்லியையாவது தைத்திரியோப நிஷத்தில் ஒரு பகுதி. அது எம்பெருமானுடைய திருக்குணங்களுள் ஒன்றான ஆனந்த குணத்தைப்பற்றிப் பேசுகின்றது. அந்த ஆனந்தம் இவ்வளவு கொண்டதென்று சொல்ல முடியாதென்பதைப் காட்டுவதற்கு அங்கு ஒருவகையான கல்பநை செய்யப்பட்டிருக்கின்றது. (அதாவது-) ஒரு மநுஷ்யன்; அவன் நல்ல யௌவந பருவத்திலுள்ளவன்; ஸகல சாஸ்திரங்களையும் ஒன்று விடாமல் ஓதிப் பிறர்களுக்கும் ஓதுவிப்பவன். ஆலஸய்மின்றி எல்லாக் காரியங்களையும் வழுவாமற் செய்பவன்; தேஹத்திலும் மனத்திலும் திடமுள்ளவன்; இவ்வளவும் வாய்ந்தாலும் தரித்ரனாயிருந்தால் பயனில்லையே. அப்படியின்றிச் செல்வமெல்லாம் நிறைந்த பூமண்டலம் முழுவதையும் செங்கோல் செலுத்தி ஆளும்படியான ஒப்புயவர்வற்ற ஸமபத்தும் வாய்ந்தவன்.  இப்படிப்பட்ட அதிசயங்கள் நிறைந்த ஒரு மநுஷ்யனிருந்தால் அவனுக்கு உண்டாகக்கூடிய ஆனந்தத்தை முன்னே எடுத்துக்காட்டி, அதைவிட நூறு பங்கு அதிகமான ஆனந்த முடையவர்களாக மநுஷ்ய கந்தர்வர்கள் என்ற வகுப்பைக்கூறி அவர்களைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தமுடையவர்களாக தேவகந்தவர்களைக் கூறி இப்படியே நூறுநூறுபங்கு அதிகமான ஆனந்த முள்ளவர்களாக வரிசையாய் சிரலோகலோகபித்ருக்களையும், ஆஜாநஜ தேவர்களையும், தேவர்களையும் இந்திரனையும் ப்ருஹஸ்பதியையும் பிராஜாபதியையும் சொல்லிவந்து, அந்த பிராஜாபதியின் ஆனந்தத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தமுடையது பரப்ரஹ்மம் என்று சொல்லிப்பார்த்து, ‘ப்ரப்ரஹ்மத்தின் ஆனந்தத்தை இவ்வளவு மட்டமாகவா சொல்லிவிடுகிறது’ என்று குறைப்பட்டு என்றபடி மறுபடியும் திரும்புகிறதாம்; அதாவது கீழ்ச் சொல்லிக் கொண்டுவந்த ப்ரக்ரியையில் கடைசியாக யாதெர்ரு ப்ரஜாபதி சொல்லப்பட்டானோ, அவனை அடுத்த பர்யாயத்தில் மநுஷ்ய ஸ்தானத்திலே நிறுத்தி அவன் முதலாக ப்ரஜாபதி யளவும் சொல்லிக்கொண்டுபோய், அந்த ப்ராஜாபதியின் ஆனந்தத்தைவிட நூறுபங்கு அதிகமான ஆனந்தம் பரப்ஹமத்தினுடையது என்று சொல்லி முடிக்கப்பார்த்து அதுவும் கூடாமையாலே முன்போலே ஒரு பர்யாயம் சொல்லுவது-இப்படியே அந்தாதியாக இன்றைக்கும் புந: புநராவ்ருத்தியிலே கிடக்கின்றானாம் வேத புருஷன்.

இப்படி அபரிச்சேத்யமான ஆனந்த முடையவனெம்பெருமான் என்று இப்பாட்டில் முதலடியில் அருளிச்செய்து, ஈற்றடியில், “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்’ என்கைர்யலே எம்பெருமானுடைய ஆனந்தவல்லியிற் காட்டிலும் ஆழ்வாருடைய ஆனந்தவல்லி மேம்பாடுடையதாகக் கொள்ள இடமுண்டு.

லீவு-விச்சேதம்; அது இல்லாத இன்பம்-அவிச்சிந்நமான ஆனந்தம்.  அதுதான் எவ்வளவென்னில், மிகவெல்லைநிகழ்ந்த-‘இனி இதுக்கு மேலில்லை’ என்னலாம்படியான எல்லையிலுள்ளதாம்.

வீவல்சீரன் என்று நித்ய விபூதியுடைமையையுஞ் சொல்லும்; கல்யாண குiமுடையையுஞ் சொல்லும்.  மலர்க்கண்ணன்-இயற்கையான ஆனந்தமுடையவ னென்னுமிடம் திருக்கண்கள் தாமே கோட்சொல்லித் தருமாம்.

English Translation

Our Achyuta, -Lord of celestials, flower-eyed Lord, bearer of the highest good, -resides in the farthest limits of eternal joy.  I have attained him through songs.  praising him without end I too am in the farthest limits of eternal joy

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top