(3195)

(3195)

குவலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை

நலந்தா னிலாதசண் டாளசண் டாளர்க ளாகிலும்,

வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்றுள்

கலந்தார், அடியார் தம்மடி யாரெம் மடிகளே.

 

பதவுரை

குலம் தாங்கு

ஸகல குலங்களுக்கும் ஆதாரமான

சாதிகள் நாலிலும்

பிராம்மணாதி ஜாதிகள் நான்கிலும்

கீழ் இழிந்து

கீழே போந்து

எத்தனை நலம் தான் இலாத

மிகவும் தாழ்வின் எல்லையிலே நின்ற

சண்டாளர் சண்டாளர்கள் ஆயினும்

சண்டாளரினும் கடை கெட்ட சண்டாளர்களேயானாலும்,

வலம் தாங்கு சக்கரத்து

வலத்திருக்கையில் ஏந்தப்பட்ட திருவாழியையுடைய

அண்ணல்

ஸ்வாமியால்

மணி வண்ணற்கு

நீலமணி நிறத்தனான எம்பெருமானுக்கு

ஆள் என்று

சேஷப்பட்டிருக்கின்றோமென்று

உள் கலந்தார்

உண்மையான ஸ்வரூபஜ் ஞான முடையவர்களுக்கு

அடியார் தம்

அடிமைப்பட்டவர்களுக்கு

அடியார்

அடிமைப்பட்டவர்கள்

எம் அடிகள்

நமக்குத் தலைவராவார்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கையுந்திருவாழியுமான அழகைக்கண்டு அடிமை புக்கவர்களுடைய அடியார் எனக்கு ஸ்வாமிகளென்கிறார். ப்ராஹ்மண க்ஷத்ரிய வைச்ய சூத்ரர்களென்று நான்கு  ஜாதிகள் ப்ரஸித்தங்களாகவுள்ளன; அவற்றிலும் கீழிழிந்த சண்டாளர்களிலும் மிக நீசரான சண்டாளர்களாயிருந்தாலும் அவர்கள் “வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு” என்று திருவாழியாழ்வானோடுண்டான சேர்த்தியில் ஈடுபட்டுப் பல்லாண்டு பாடுமவர்களாகில் அவர்களின் தாஸாது தாஸர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றாராயிற்று.

இப்பாசுரத்தைப் பற்றிக்கொண்டு இக்காலத்தவர்கள் சில ஆக்ஷேபங்கள் கூறுவர்கள்; “எத்தனை நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்” என்று ஆழ்வார் அருளிச் செய்திருப்பதை நோக்கினால் ஆழ்வாரருளிச் செயலில் அன்புடையார் இதை அநுஷ்டாநர்யந்தமாகக்கொண்டு வரவேண்டியது ஆவச்யகமல்லவா? இங்ஙனே ஆழ்வார் அருளிச்செய்ததற்கு அர்த்தமுண்டா இல்லையா? இல்லையென்னில், ஆழ்வார் ஸ்ரீஸூக்தியை அவமதித்தபடியாகும். உண்டென்னில், அதன்படியே அனுட்டானித்திற் காட்டவேணுமல்லவா? என்று பலபல பேசுகிறார்கள். இவற்றுக்குப் பெரியோர் அருளிச்செய்யும் ஸமாதானமாவது:- “அமரவோரங்கமாறும் வேதமோர் நான்கு மோதித், தமர்களில் தலைவராய சாதியந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பாராகில் நொடிப்பதோ ரளவிலாங்கே, அவர்கள் தாம் புலையர்போலும், அரங்கமாநகருளானே!” என்று தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச்செய்கிறார்; ‘சிறந்த பிராமணர்களாயிருந்தாலும் அவர்கள் பாகவத நிந்தனை செய்பவர்களாயிருந்தால் அவர்கள் சண்டாளரேயாவர்” என்று இப்பாசுரத்தினால் சொல்லப்படுகிறது; அப்படிப்பட்ட பாகவத நிந்தகர்கள் எத்தனையோபேர்கள் இவ்வுலகில் காணப்படுகிறார்கள்; சண்டாளரைக் கண்டால் விலகுமாபோலே  அவர்களைக் கண்டால் விலகவேணுமே; அப்படி யாரேனும் விலகுவாருண்டோ; அந்தப்பாசுரத்தின் பொருள் அனுட்டானத்திற்கு வருமாகில் இந்தப் பாசுரத்தின் பொருளும் அனுட்டானத்திற்குவரும்- என்று சில பெரியோர்கள் கூறுகின்றார்கள்.

மற்றுஞ்சிலர் கூறுவதாவது- “கெடுமிடராயவெல்லம் கேசவாவென்ன” என்று நம்மாழ்வார் அருளிச் செய்கிறார்; கேசவா! என்று ஒருகால் திருநாம ஸங்கீர்த்தனம் பண்ணின மாத்திரத்திலே இடர்கள் யாவும் தொலைந்து போகின்றனவாக இதனால் ஏற்படுகின்றது; இது திருநாமஸங்கீர்த்தனத்தின் பெருமையைப் புகழ்ந்து கூறினபடியேயல்லது வேறில்லையன்றோ; அதுபோலவே இங்கும் பாகவதர்களின் பெருமையைப் புகழ்ந்து கூறுகிறபடியேயல்லது வேறில்லை. கேசவாவென்ன மாத்திரத்தாலேயே இடராய வெல்லாம் கெடுமாகில் ஸந்தியாவந்தனம் முதலிய கருமங்களினால் பரபநிபர்ஹணம் செய்து கொள்வது எதற்கு? என்று கேள்வி பிறந்தால் என்ன விடை? சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட வர்ணாச்ரமதருமங்களை அனுட்டித்தே தீர வேண்டும் என்று விடையாகில், பிரகிருதத்திலும் அதுவே விடையாகும். *மதீஷ் வைதிகாசாரம் மநஸாபி ந லங்கயேத்* என்றும், *லங்கயத் சூலமாரோஹேத் என்றும் தஸ்மாத் சாஸ்த்ரம் ப்ரமாணம்தே கார்யாகார்ய வ்யவஸ்திதௌ என்றும், ச்ருதி ஸ்ம்ருநீர் மனமவாஜ்ஞா யஸ் தாமுல்லங்கிய வர்த்ததே, ஆஜ்ஞாச்சேதீ மம த்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவா என்றுமுள்ள பிரமாணங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் சாஸ்த்ரங்களுக்கும் அவற்றிற்காட்டிலும் பிரபலமான சிஷ்டாசாரங்களுக்கும் மாறாக நடந்து கொள்ள இயலாது- என்பதாம்.

திருமழிசைப்பிரான், திருப்பாணாழ்வார், நம்பாடுவான் போல்வாரான பரம விலக்ஷணாதிகாரிகளை உத்தேசித்தே அவதரித்த பாசுரங்களைக் கொண்டு லோகக்ஷோபம் செய்ய நினைக்கலாகாது. விலக்ஷண பாகவதர்களுக்குப் பண்டைக்குளம் தவிர்த்து தொண்டக்குணலம் என்று ஒரு சிறந்த நற்குலம் உண்டாகின்ற தென்பது உண்மை மேற்பாசுரத்தின் உரை முடிவு காண்க.

 

English Translation

What though a person be of lowely birth, -even a Chandala of the lowly Chandalas, -if he is a devotees of my discus-bearing gem-Lord, his servant’s servant shall be my master, just see!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top