(3125)

(3125)

வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்,

வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்,

வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்,உலகை

ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே?

 

பதவுரை

வருந்தாத

ப்ரயந்த ஸரத்யமல்லாத ஸ்வாபாவிகமான

அரும் தவத்த

அருமையான தலத்தின் பலனாக வந்ததோ என்னலாம்படியான

மலர் கதிரின்

பாம்பின் கிரணங்களையுடைய

சுடர் உடம்பு ஆய்

தேஜோமய திவ்யமங்கள விந்ரஹயுக்தனாய்

வருந்தாத ஞானம் ஆய்

ஸ்வாபாவிக ஜ்ஞான யுக்தனாய்

வரம்பு இன்றி

எல்லையில்லாதபடி

முழுது இயன்றாய்

எங்கும் வியாபித்திருப்பவனே!

வருங்காலம், நிகழ்காலம் கழிகாலம் ஆய்

எதிர்காலம் நிகழ்காலம் இறந்தகால மென்கிற மூன்று காலங்களுக்கும் நிர்வாஹகனாய்

உலகை

உலகங்களை

ஒருங்கு ஆக

ஒருபடிப்பட

அளிப்பாய்

ரக்ஷிக்குமவனே!

சீர்

(உன்னுடைய) திருக்குணங்களை

எங்கு

எங்கே

உலக்க

முடிய

ஓதுவன்

சொல்லுவோன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- – நாட்டாரிழவு பற்றிய கீழ்ப்பாட்டு ப்ரஸங்காத் ப்ரஸ்துதமத்தனை; மூன்றாம் பாட்டோடு இப்பாட்டிற்கு நேரே ஸங்கதி காண்க. “கோவிந்தா! பண்புரைக்கமாட்டேனே” என்று சொல்லுவானேன்? நீர் ஸகல விலக்ஷணராகையாலே நம்மை நீர் பேசமாட்டீரோவென்று எம்பெருமான் திருவுள்ளமாக, எம்பெருமானே! என்னை நீ விலக்ஷணனாக்கி வைத்தாலும் உன் சுடர்ப்பொலிவை ஓர் எல்லையிலே நிறுத்திவைத்தாயில்லையே; எங்ஙனே நான் பேசுவது; என்கிறார்.

* வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய் = எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹம் எப்படிப்பட்டதென்றால் (வருந்தாத) ஒரு ப்ரயத்நத்தினால் ஸித்தமன்றிக்கே ஸ்வஸங்கல்ப மாத்திரத்தினால் பரிக்ருஹீதம். இன்னமும் எப்படிப்பட்டதென்னில், (அருந்தவந்த) பக்த ஜனங்களின் தவப்பயனோ என்னலாம்படி யிருக்கும் இன்னமும் எப்படிப்பட்ட தென்னில், (மலர்கதிரின்) எங்கும் பரந்த வொளியையுடையது. ஆக இப்படிப்பட்ட திருமேனியையுடைமை முதலடியால் சொல்லப்பட்டது. “வருந்தாத ஞானமாய்” என்றது. நம்மைப்போல் ப்ரயாஸப்பட்டு ஞானம் ஸம்பாதிக்க வேண்டாதே எம்பெருமான் இயற்கையாகவே விசாலமான ஞானம் படைத்தவனென்றவாறு.

(வரம்பின்றி இத்யாதி.) ஸர்வவ்யாபகனாய் முக்காலங்களிலும் உலகங்களை ஒருபடிப்பட ரக்ஷித்தருளுமவனே! உன்னுடைய ஸ்வரூப விளக்கமென்ன, ஞான விளக்கமென்ன, உன்னுடைய ஸர்வரூப ஸர்வவ்யாபகத்வமென்ன, ஸர்வரக்ஷகத்வமென்ன ஆகிய இவற்றாலுண்டான சிறப்பை, ஏதோ ஏகதேசம் சொல்லுவேனத்தனையல்லது முடியச்சொல்லுவது எங்ஙனே? என்றாராயிற்று. உலக்க – முடிய.

 

English Translation

O, Lord of natural radiance, through past, present and future!  Exceeding the radiance obtained by the hardest penance, you stand above, guarding the Universe,  How can I ever praise you fully?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top