(3117)

(3117)

வலஞ்செய்துவைகல் வலங்கழியாதே* 

வலஞ்செய்யும் ஆயமாயவன் கோயில்* 

வலஞ் செய்யும் வானோர் மாலிருஞ்சோலை * 

வலஞ்செய்துநாளும் மருவுதல்வழக்கே. 

 

பதவுரை

 

வலம் செய்து

(சரணங்களுக்கு) வலிமை யுண்டாக்கிக் கொண்டு எப்போதும்

வைகல்

எப்போதும் 

வலம் கழியா 

அந்த வலிமையை வீணாகப் பாழ்படுத்தாமல், –

வலம் செய்யும் 

(நமக்கு) நன்மையையே 

செய்தருளாநின்ற

ஆயன்

கோபால கிருஷ்ணனான

மாயவன் 

மாயவனுடைய

கோயில் 

கோயிலாகி

வானோர் வலம் செய்யும்

 

நித்ய ஸூரிகளும் வந்து பிரதக்ஷிணம் செய்யுமிடமான

மாலிருஞ்சோலை

திருமலை விஷயத்தில் 

வலம் செய்து 

பிரதக்ஷிணம் முதலிய அநுகூல வ்ருத்திகளைச்செய்து

நாளும் 

நாடோறும்

மருவுதல் 

பொருந்தியிருப்பது

வழக்கு 

யுக்தம். 

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

* திருமலையை நித்யம் பிரதக்ஷிணஞ் செய்வது தகுதி யென்கிறார். கண்டவற்றையும் தின்று தேஹத்திற்கு வலிமையை ஸம்பாதித்துக் கொண்டிருக்கிற ஜனங்களே! அந்த வலிமையை ஸ்வரூபத்திற்குத் தகாத விஷயங்களிலே செலுத்திப் பாழ்படுத்தாமல் திருமலையைப் பிரதக்ஷிணஞ் செய்வதாகிற நற்செயலிலே உபயோகித்து வாழுங்கோளென்கிறார். 

ஆயன் + மாயவன், ஆயமாயவன். “சில விகாரமாமுயர்திணை ” என்பது நன்னூல். எம்பெருமானுக்கு வலஞ்செய்யும் என்று அடைமொழி கொடுத்தது. 

“***” என்கிற சுருதிபை அடியொற்றியதாகும். தன்னையும் கொடுத்துத் தன்னை யநுபவிக்கைக் கீடான வலிமையையும் கொடுப்பவன் எம்பெருமான் என்றுணர்க. இதற்கு வேறு வகையாகவும் பொருள் கூறுவர்; “திருச்சித்ரகூட பரிஸரத்திலே பிராட்டியையுங்கூடக் கையைப் பிடித்துக் கொண்டு உலாவினாப்போலே, பிராட்டி கையைப் பிடித்துக்கொண்டு அழகர் ஆதரத்தோடே ஸஞ்சரிக்கிற தேசம்” என்பது நம்பிள்ளை யீடு. “அழகர் பிராட்டிமாரோடே கூட வலஞ்செய்கிற” என்றார் பெரியவாச்சான் பிள்ளையும், இப்பொருளில், ஆயமாயவன் வலஞ் செய்யுங் கோயில் என்று அந்வயிப்பது. 

வலஞ்செய்யும் வானோர் = பெருமாள் காட்டுக் கெழுந்தருளுகிற போது திருவயோத்தியி லுள்ளாரடங்கலும் பின் தொடர்ந்தாப்போலே பராத்பரன் இங்கே யெழுந்தருள, நித்ய முக்தர்களுங் கூடவந்து வலஞ் செய்வர்களாயிற்று. 

ஈற்றடியில் ஒரு ஐதிஹ்ய மருளிச் செய்வர் ; ” பிள்ளை திருநறையூரரையரும் பட்டரும் ப்ரதக்ஷிணம் பண்ணாநிற்கப் பின்னே ஸேவித்துக் கொண்டு போனேன்; அல்லாதார் கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணாலே பருகுவாரைப்போலே பார்த்துக் கொண்டு வந்தார்களென்று நஞ்சீயரருளிச் செய்வர்.” என்று. – “**** – விஷ்ணோராயதநம் நித்யம் ஸாயம்ப்ராதர் திரே திநே – ப்ரதக்ஷிணத்வயம் குர்யாத் அச்வமேதபலம் பவேத்.” என்று சாஸ்த்ரங்களிற் சொல்லியுள்ளது. எம்பெருமான் ஸந்நிதியை நாடோறும் காலை மாலை வலஞ் செய்தால் அபரிமிதமான பலன் கிடைக்குமென்று, வலஞ் செய்வதானது உபாய கோடியில் பேசப்பட்டிருக்கிறது. உபாயாந்தரங்களில் அர்வயம் பொறாத ப்ரபந்நர்கள் ப்ரதக்ஷிணஞ் செய்யலாகுமோ? என்கிற சங்கைக்குப் பரிஹாரமாக இந்த ஐதிஹ்ய முள்ளது. உபாஸகர்கட்கு உபாயமானவிதுவே விலக்ஷணர்களுக்கு ஸ்வயம் ப்ரயோஜநமா யிருக்குமென்று காட்டியவாறு, வழக்கு – நியாயம்.

English Translation

Rather than roam and waste one’s life, it is best to stay and worship the lord who roamed after the grazing cows and lives in Malirumsolai, worshipped by celestials.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top