(3089)
நீந்தும்துயர்ப்பிறவி யுட்படமற்றெவ்வெவையும்,
நீந்தும் துயரில்லா வீடுமுதலாம்,
பூந்தண்புனல்பொய்கை யானைஇடர்க்கடிந்த,
பூந்தண்துழாயென் தனிநாயகன் புணர்ப்பே.
பதவுரை
|
பூ தண் புனல் பொய்கை |
– |
அழகிய குளிர்ந்த நீரையுடைய தடாகத்தில் |
|
யானை |
– |
கஜேந்திராழ்வானுடைய |
|
இடர் |
– |
ஆர்த்தியை |
|
கடிந்த |
– |
தொலைத்தருளினவனும் |
|
பூ தண் துழாய் |
– |
துழாய் மாலையை யுடைவனுமான |
|
என் தனி நாயகன் |
– |
எம்பெருமானுடைய |
|
புணர்ப்பு |
– |
ஸம்பந்தமர்னது |
|
நீந்தும் |
– |
கடத்தற்கு அரிதான |
|
துயர் |
– |
துன்பத்திற்கு ஹேதுவான |
|
பிறவி உட்பட மற்று |
– |
பிறப்பு முதலாக மேலுமுள்ள |
|
எவ்வெவையும் நீந்தும் |
– |
எப்படிப்பட்ட துன்பங்களையும் கடத்தும் (அன்றியும்) |
|
துயர் இல்லா வீடு முதல் ஆம் |
– |
துயர் சிறிதுமில்லாத மோக்ஷத்திற்கும் ஹேதுவாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் ‘வீடுமுதலாம்’ என்றதை விவாரிக்கிறதா யிருக்கின்றது இப்பாசுரம். எம்பெருமான் வேணுமென்கிற நிர்ப்பந்தமில்லை, அவனோடுண்டான ஸம்பந்தமே போரும் மோக்ஷமளிப்பதற்கு-என்கிறார்.
“நீந்துந் துயர்ப்பிறவியுட்பட மற்றெவ்வெவையும் நீந்தும்” என்னுமளவும் ஒரு வாக்கியமாக்கி “துயாரில்லா வீடுமுதலாம்” என்று மற்றொரு வாக்கியமாக்கியுரைப்பதும், அன்றியே, இரண்டடிகளுஞ் சேர்ந்து ஒரே வாக்கியமாக்கி ‘நீந்துந் துயர்ப் பிறவியுபட்ட மற்றெவ்வெவையும் நீந்துந் துயாரில்லா’ என்னுமளவும் வீட்டுக்கு விசேஷணமாக்கி யுரைப்பதும், ஆக இருவழிகளுமுண்டு. முதல் யோஜநையில்-
நீந்துந் துயர்பிறவி யுட்பட மற்றெவ்வெவையும் நீந்தும்- போக்கிக்கொள்ள முடியாத துக்கத்தை விளைக்கின்ற பிறப்பு முதலான ஜராமரணாதிகயெல்லாவற்றையும் (பகவத் ஸம்பந்தம்) போக்கடிக்கும்
துயர் இல்லா வீடுமுதல் ஆம்- துக்க லேசமுமில்லாத முக்தியையும் அளிக்கும் என்றபடி.
இரண்டாவது யோஜநையில்-அபாரமான துயரங்களை விளைப்பதான பிறவி முதலாக மற்றும் அபாரமான ஜராமரணாதிகளான எவ்வகைப்பட்ட துக்கமும் ஸ்பர்சியாத மோட்ஷாநந்தத்திற்கு ஹேதுவாம் என்றபடி.
அது எது என்ன, பகவத் ஸம்பந்தம் என்கிறது. பின்னடிகளில் கஜேந்திராழ்வானைக் காத்தருளினவனும், அப்படியே பக்தர்களனைவரையும் காத்தருள்வதாகத் தனிமாலை யிட்டுக்கொண்டு அத்விதீய நாயகனாக விளங்குபவனுமான எம்பெருமானோடுண்டான ஸம்பந்தம், இவை செய்யும் என்க. அவன் திருவடிகளில் ஸம்பந்தம் துக்கநிவ்ருத்தியையும் பண்பிக்கொடுத்துப் பரமாநந்தத்தையும் பெறுவிக்கு மென்றதாபிற்று.
நீந்தும் என்றதற்குக் ‘கடக்கவாரிதான’ என்னும் பொருன் எங்ஙனே கிடைக்குமென்னில், நீந்திக்கொண்டேயிருக்க பேணுமேயன்ளிக் கரையேற இயலாதென்று தாற்பாரிய முகமாகக் காட்டினபடி யென்ப. இரண்டாமடியிலுள்ள நீந்தும் என்பது வினைமுற்றாகக் கொள்ளப்படுகிற நிர்வாஹத்தில் நீந்தும் என்ற வல்லொற்று மெல்லொற்றாயிருக்கிறபடி யென்பா;.
English Translation
My Lord who wears cool Tulasi flowers, is the saviour of the elephant in distress! Blending with him alone is liberation, from birth and all other miseries.
