(3087)

(3087)

வண்ணமாமணிச்சோதியை யமரர்தலைமகனை,

கண்ணனைநெடுமாலைத் தென்குருகூர்ச்சடகோபன்,

பண்ணியதமிழ்மாலை யாயிரத்துள்ளிவைபன்னிரண்டும்,

பண்ணில்பன்னிரு நாமப் பாட்டண்ணல்தாளணைவிக்குமே.

 

பதவுரை

வண்ணம் மாமணி சோதியை

நல்ல நிறமுடைய நீலமணியின் ஒளியை யுடையனாய்

கண்ணனை

ஸ்ரீக்ருஷ்ணனாகத் திருவவதாரித்தவனாய்

நெடு மாலை

(ஆச்ரிதர் பக்கலில்) அளவு கடந்து செல்லுகின்ற வியாமோஹத்தை யுடையவனான எம்பெருமானைக் குறித்து

தென் குருகூர்சடகோபன்

ஆழ்வார்

அமரர் தலை மகனை

நித்யஸூரி நிர்வாஹகனாய்

பண்ணிய

அருளிச்செய்த

தமிழ்மாலை ஆயிரத்துள்

தமிழ் மாலையாகிய இவ்வாயிரத்தினுள்ளும்

பண்ணில் பன்னிரு நாமப் பாட்டு இவை பன்னிரண்டும்

பண்ணோடு கூடின த்வாதச நாம கர்ப்பிதமர்ன இப் பன்னிரண்டு பாசுரங்களும்

அண்ணல்

ஸர்வேச்வரனுடைய

தாள்

திருவடிகளை

அணைவிக்கும்

சேர்ப்பிக்கும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருவாய்மொழி வல்லார் எம்பெருமானைப் பெறுவர்ரென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். அழகிய நீலமணி நிறத்தனாய், இவ்வழகு நித்யஸூரிகளுக்கும் எல்லை காண வொண்ணாதபடி பெரியவனாய், அடியார்களைத் தானே அநுபவிக்குமவனாய், அதற்கு அடியான அபாரவ்யாமோஹத்தை யுடையனான எம்பெருமான் விஷயமாக ஆழ்வாரருளிச் செய்த ஆயிரத்தினுள், பண்ணிலே புணாக்கப்பட்டதாய் த்வாதச நாமங்களைப்பற்றி வருகிற பாட்டான இவை பன்னிரண்டும், எம்பெருமான் திருவடிகளோடு சேர்த்துவிடும். இத்திருவாய்மொழியோடுண்டான ஸம்பந்தந்தானே கேசவன் தமராக்கிவிடும் என்றாவாறு.

 

English Translation

This bouquet of songs bearing the twelve names of the Lord, from the thousand songs by kurugur Satakopan is for Krishna, gem-hued Lord of celestials.  those who can sing it will attain the Lord’s feet.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top