(3085)

(3085)

பற்பநாபனுயர்வறவுயரும் பெருந்திறலோன்,

எற்பரனென்னையாக்கிக் ¦ காண்டெனக்கேதன்னைத்தந்த

கற்பகம், என்னமுதம் கார்முகில்போலும்வேங்கடநல்

வெற்பன், விசும்போர்பிரா னெந்தைதாமோதரனே.

 

பதவுரை

பற்பநாபன்

(உலகமெல்லாம் தோன்றுவதற்குக்

காரணமான) தாமரையைத் திருநூபியிருடையவனும்

உயர்வு அற உயரும் பெருதிறலோன்

வேறு எங்கும் உயர்த்தியில்லை யென்னும்படி அபாரசக்தியையுடையவனும்

என்பான்

என்னிடத்து ஊற்றமுடையவனும்

என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னை தந்த கற்பகம்

என்னை யுண்டாக்கி அங்கீகாரித்து எனக்கே அஸாதாரணமாம்படி தன்னைத் தந்த கல்ப வ்ருக்ஷராயனும்

என் அமுதம்

எனக்குப் பரம போக்யனும்

கார்முகில் போலும்

காளமேகம் போன்றவனும்

வேங்கடம் நல்வெற்பன்

திருவேங்கடமென்கிற நல்ல திருமலையை இருப்பிடமாகவுடையவனும்

விசும்போர்பிரான்

நித்யஸூரிகளுக்குத் தலைவனும்

தாமோதரன்

ஆச்ரித விதேயனுமான எம்பெருமான்

எந்தை

எனக்கு ஸ்வாமி.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மிகவும் விலக்ஷணனாய் மிகவும் எளியனாய் என்னையடிமைகொண்ட எம்பெருமான், என்னைத்தவிர வேறொன்றையும் அறியாதபடியானான், என்கிறார். ஸயலஜகத்தும் உத்பத்தியாவதற்குக் காரணமான திருநாபிக் கமலத்தை யுடையவனாய், பேசப்புகுந்தால் அளவிட்டுப் பேசமுடியாத செளர்யவீர்யம் முதலிய திருக்குணய்களையுடையனாய், இவ்வளவு மேன்மைகிடக்க என்பக்கலிலே ஊற்றமுடையனாய், எனக்கு தன்னை ஸர்வஸ்வதானம் பண்ணினபடியாலே எனக்குக் கல்பகவ்ருக்ஷ மென்னலாம்படி யிருப்பவனாய், யாசகனாகிய என்னையும் உத்பத்தி பண்ணித் தந்தருளினமையாலே கல்பகவ்ருக்ஷத்திற் காட்டிலும் சிறப்புப்பெற்றவனாய், எனக்குப் பரமபோக்யனாய், கொடுத்தோமென்று நினையாதே கொடுக்கும் மேகத்தின் ஔதார்யம் போன்ற ஔதார்யத்தையுடைய திருவேங்கடமலையில் வாழ்பவனாய், நித்யஸூரிகளுக்குத் தலைவனாயிருந்து வைத்து அனகரான இடையர்கட்குமிடைச்சிகட்கும் கட்டவுமடிக்கவுமாம்படி வந்து அவதாரித்து அச்செயலாலே என்னையாட்படுத்திக் கொண்டானானான், என்றாதாயிற்று.

கற்பகத்திற்காட்டில் எம்பெருமானுக்குள்ளவாசி-யாசகனையும் தானேயுண்டாக்குகையும், அவனைத்தானே ஸ்வீகாரிக்கையும், அவன் விரும்பினதைக் கொடுக்கையன்றியே தன்னையே

கொடு கொடுக்கையும், தானே போக்யமாகையும்.

“கார்முகில் போலும்” என்ற அடைமொழி வேங்கட மலைக்குமாகலாம் மலையப்பனுக்குமாகலாம்.

 

English Translation

“Padmanabha’ is the mighty one, higher than the highest.  He is my kalpa tree, he made me his and himself mine.  He is my ambrosia, dark as the rain cloud, in Venkatam.  My Lord Damodara is the Lord of high celestials too.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top