(3048)

(3048)

உள்ளுளாவி யுலர்ந்துலர்ந்து, என

வள்ளலே கண்ணனேயென்னும், பின்னும்

வெள்ளநீர்க்கிடந்தாய்,என்னும், என்

கள்விதான்பட்ட வஞ்சனையே.


பதவுரை

என கள்வி

என்னிடத்திலும கூட உண்மையை மரைப்பவளான இப்பெண்பிள்ளைதான் அகப்படும்படி அவன் செய்த

தான்பட்ட

தான் அகப்படும்படி அவன் செய்த

வஞ்சனை

வஞ்சகம் (பலித்தபடி என்னென்னில்)

உள்ளுள் ஆவி

உள்ளுயிரானது

உலர்ந்து உலர்ந்து

மிகவுமுலர்ந்து

என வள்ளலே

என்னுடைய பெருங்கொடையாளனே!

கண்ணனே

க்ருஷ்ணனே!’

என்னும்

என்கிறாள்;

பின்னும்

அதற்குமெலே

வெள்ளம் நீர்

(திருப்பாற்) கடலிலே

கிடந்தாய்

கண்வளர்ந்தருளினவனே!

என்னும்

என்கிறாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  தன் மகளுடைய வருத்தங்களையும், அவன் தன் குணங்களாலே இவளை வஞ்சித்தபடியையும் தாய் சொல்லுகிறாள். (உள்ளுலாவி உலர்நதுலர்ந்து) பகவத் கீதையிலே ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிச் சொல்லும்போது * அச்சேத்யோய மதாஹ்யோயம் அக்லேத்ய; அசோ‘ய் ஏவ ச. * என்று சொல்லப்பட்டுளளது. அசோஷ்ய; – உலர்த்த முடியாதது – என்று சொன்னதும் பழுதாயிற்று;  ஆந்தரமான மநஸ்ஸூக்கு தாரகமான

ஆத்மா சருகாயிற்று.  அந்த நிலைமையிலும் விடாயர் கற்பூரநிகரம் வாயிலிடுமா போலே என வள்ளலே! கண்ணனே! என்கிறாள்– அவனுடைய ஔதார்யத்தையும் ஸௌலப்யத்தையுஞ் சொல்லிக் கத்துகிறாளென்க.

பின்னும் வெள்ளநீர்க் கிடந்தாய் என்னும்=ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் *அந்தகாரே அதி தீவ்ரே ச நரஸிம்ஹமநுஸ்மரேத், தரத்யகிலதுஃக்கா நி தாபார்த்தோ ஜலசாயிநம் *என்றுசொல்லப்பட்டுள்ளது.  திணுங்கின; இருளிலே நரஸிம்ஹமூர்த்தியை நினைக்கவேணுமென்றும், தாபம் மிக்கிருக்குங்காலத்து க்ஷரிரார்ணவசாயியான எம்பெருமானை நினைக்கவேணுமென்றும் சொல்லியிருக்கையாலே வெள்ள நீர்க்கிடந்த பெருமாளைப் பேசாநின்றாள்.

என கள்வி தான்பட்ட வஞ்சனையே=தன்னுடைய நெஞ்சிலுள்ளது பிறரறியாதபடிமறைத்துக்கொண்டிருக்கு மியல்வுடைய இவள் இப்போது படும்பாடு என்னே ! என்கிறாள். தன்னுடைய மருமங்களைப் பிறரறியாமல் மறைத்துக்கொள்பவளென்ற பொருளில் இங்குக் கள்வி எனப்பட்டது.

வஞ்சனைஸ்ரீபிராட்டி திருவடியிடத்தில் “ஊர்த்வம் மாஸாந் ந ஜீவிஷ்யே” (ஒரு மாதத்திற்கு மேல் நான் பிழைத்திருக்கமாட்டேன்) என்று சொல்லியனுப்பினாள்’ அதைக் கேட்ட பெருமாள் “ந ஜீவேயம் கூஷணமபி விநா தாம் அஸிதேகூ‘ணாம்” (குவளையங் கண்ணியான பிராட்டியைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் தாரித்திருக்க என்னால் முடியவில்லையே) என்றார்.  இங்கே அஸிதேகூ‘ணாம் என்று அடைமொழி கொடுத்துச் சொன்னமையாலே பிராட்டியின் கண்ணழகிலே பெருமாள் தோற்றவர் என்பது பெறப்படும்.  ஆகவே அவர் தோற்க வேண்டியது ப்ராப்தமர்யிருக்க இப்போது இவள்

தோற்றிருப்பது ஏதோ வஞ்சனையாக நடந்த காரியமே யன்றி ருஜூவாக நடந்தபடியன்று என்கிறாள்.

 

English Translation

Her heart is dry, her soul is parched, “Dear-as-my eyes Lord!” Oh, the deceit that my clever one has fallen prey to!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top