(3018)

(3018)

வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த,

ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்,

மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த,

மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே

 

பதவுரை

மா வாய் பிளந்து

குதிரை வடிவாக வந்த கேசி யென்னு மசுரனுடைய வாயைப் பிளந்தவனும்

மருது இடை போய்

இரட்டை மருத மரங்களின் நடுவே தவழ்ந்து சென்று அவற்றை

முறித்துத் தள்ளினவனும்

மண் அளந்த

(த்ரிவிக்ரமனாய்ப்) பூமியை அளந்து கொண்டவனுமான

மூவா முதல்வா

அழியாமுதல்வனே!

வேவு ஆரா

எவ்வளவு வேவச் செய்தும் த்ருப்தியடையாத

வேட்கை நோய்

ஆசை நோயானது

மெல் ஆவி

மெல்லிய ஆம்மாவை

உள் உலர்த்த

குரத்துவற்றாக வற்றுவிக்க

இராப் பகல்

இரவும் பகலும்

ஓவாது

இடைவிடாமல்

உன்பாலே

உன்னிடத்திலேயே

வீழ்த்து

ஈடுபடுத்தி

ஒழிந்தாய்

உபேக்ஷரித்துவிட்டாய்; (போனது போகட்டும்)

இனி

இனிமேல்

எம்மை

எம்மை

சோரேல்

கைவிடவேண்டா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி அளவுகடந்த ஆர்த்தியோடே துடிக்கிற ஆழ்வாரைக் குளிர நோக்கி ஒருவாறு சுகப்படுத்த வந்து நெருங்கிய எம்பெருமானைக் குறித்து, பிரானே! சிலநாள் நலிந்து விடுவதன்றியே மேன்மேலும் மிகவும் நலிகின்ற விரஹவ்யஸநமானது ஏற்கனவே மெலிந்துபோன ஆத்மாவை மிகவுதட நோவு படுத்த இரவும்பகலும் இடைவிடாதே உன்னுடைய குணசேஷ்டிதங்களையே  நினைந்து நிநைந்து உள்கரைந்து உருகும்படியாகச் செய்திட்டாய்; இவ்வளவு செய்த நீ இனி ஒருகாலமும் என்னைக் கைவிடாதே கொள்ளவேணும் என்று பிரார்த்திப்பதாய்ச் சொல்லுகிறது இப்பாசுரம்.

 

English Translation

O Youthful Lord! You ripped the horse’s jaws, pierced many trees and measured the Earth!  With the raging fire of love-sickness, incessantly, You have scorched my frail soul within, by day and by night, and made me drop at your feet, I pray you, evade me no more!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top