(2962)
தரும அரும்பய னாய
திருமக ளார்தனிக் கேள்வன்,
பெருமை யுடைய பிரானார்,
இருமை வினைகடி வாரே.
பதவுரை
|
அ அரு பயன் ஆய |
– |
அப்படிப்படட் அருமைப் பயனான புருஷார்த்தத்தை |
|
திருமகனார் தனிகேள்வன் |
– |
பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாயகனாய்க் கொண்டு |
|
தரும் |
– |
(பிராட்டியோடு கூடி நின்று) தந்தருள்வன்; |
|
பெருமை உடைய பிரானார் |
– |
லக்ஷ்மீ சம்பந்தத்தாலே) மேன்மையை யுடைய (அந்த) ஸர்வேச்வரன் |
|
இருமை வினை |
– |
இருவகைப்பட்ட (புண்ய பாபரூபமான) கருமத்தை போக்குவான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமான் தன்னைப்பற்றின மாத்திரத்திலே இப்படி இடையூறுகளையெல்லாம் போக்கிப் பரம புருஷார்த்த்த்தையும் தந்தருளக் கூடுமோவென்ன பிராட்டி அருகேயிருக்கும்போது எதுதான் செய்யக்குறை? என்கிறார்.
முதலடியை, தரும் அவ்வரும்பயனாய என்றும், தரும அரும்பயனாய என்றும் இரு வகையாகப் பிரித்துப் பொருள் கூறுவர். ஆசார்யஹ்ருதயத்தில் (4-1) *பரபரனாய் நின்ற* என்ற சூர்ணிகையில் “தொழுதால் அரும்பயனாய் தரும்” என்றருளிச் செய்திருப்பதும் இங்கு நினைக்கத்தக்கது. அ+ அரும்பயனாய், அவ்வரும்பயனாய என்று சந்தியாகவேண்டு மிடத்து “அவரும்பயனாய்” என்று ஆனது தொகுத்தல் விகாரமென்க. பெறமுடியாததாக சாஸ்திரங்களிலே ப்ரஸித்தமாகவுள்ள புருஷார்த்தத்தங்களைத் தந்தருள்வன் என்றபடி.
இனி, மற்றைப்படியான பதவிபாகத்தில் *தருமவரும்பயனாய்* என்பது திருமகளார்க்கு அடைமொழியாகும். தருமத்தினுடைய பரமப்ரயோஜனமே ஒரு வடிவு கொண்டாப்போலே யிருக்கிற பெரிய பிராட்டியார்க்குத் தனிக்கேள்வன் என்றபடி. “லக்ஷ்ம்யா ஸஹ ஹருஷீகேசோ தேவ்யா காருண்யருபயா, ரக்ஷகஸ்ஸர்வஸித்தாந்தே வேதாந்தேபி ச கீயதே” என்கிற ஸ்ரீபாஞ்சராத்ர வசனம் இங்கு அநுஸந்திக்கத்தகும். “தேவ்யா காருண்யரூபயா லக்ஷ்ம்யா” என்றதன் கருத்தே *தருமவரும் பயனாய திருமகளார்* என்பதில் உறையுமென்க.
இருமைவினைகடிவார் = பாபத்திற்காட்டிலும் புண்ணியம் நன்றாயிருந்ததே யாகிலும் மோஹமார்க்கத்திற்கு இடையூறாகுந் திறத்தில் இரண்டும் ஒக்குமாதலால் புண்ய பாபங்களிரண்டுமே தொலையக்கடவனவான். புண்ணியங்களுக்குப் பலனாக ஸ்வர்க்காநுபவம் முதலிய ஆபாஸ புருஷார்த்தங்கள் கிடைக்கும்; பாவங்களுக்குப் பலனாக நரக வேதனைகள் கிடைக்கும்; பரம புருஷார்த்தத்தை விரும்பி நிற்பார்க்கு ஸ்வர்க்க நரகங்களிரண்டும் பரியாயமாதலால் புண்ய பாபங்களிரண்டும் தொலையவேணுமென்று சாஸ்திரம் சொல்லி நின்றது என்றுணர்க. இந்த சாஸ்த்ரார்த்தத்தை ஸ்ரீமந்நிகமாந்த மஹா தேசிகனும் வரதராஜ பஞ்சாசத்தில் “ஸத்யஸ்த்யஜந்த வரத! த்வயி பந்தபாவா; பைதாமஹாதிஷûபதேஷ்வபி பாவபந்தம், கஸ்மை ஸ்வதேத ஸுகஸஞ்சரணோத்ஸுகாய காராக்ருஹே கநகச்ருங்கலயாபிபந்த? என்ற ச்லோகத்தினால் உரைந்தருளினர். புண்ணியம் பொன்விலங்கு போன்றது. பாவம் இரும்பு விலங்குபோன்றது என்பது இந்த ச்லோகத்தின் தேர்ந்த கருத்து. யதேஷ்டமாக ஸஞ்சரிக்க விரும்புகின்றவர்களை இரும்பு விலங்கினால் கட்டி வைத்தாலென்ன? பொன் விலங்கினால் கட்டி வைத்தாலென்ன இரண்டும் க்கஹேதுவேயாகு மென்றவாறு.
இங்கே நம்பிள்ளை யீடு காண்மின்;-
‘(இருமைவினைகடிவாரே) போர்வாசியேயாம்படி நாம் பண்ணிவைத்த இருவகைப்பட்ட கர்மங்களையும் போக்குவார். புண்ய பாவங்களுக்குத் தன்னில்தான் வைஷயம்முண்டேயாகிலுமம் மோக்ஷ விரோதித்வாத் த்வாஜ்யமாதா நின்றனவிறே.”
English Translation
He breaks the two-fold karmas and grants the highest fruit. The great celebrated Lord is peerless spouse of Lakshmi.
