(2942)

(2942)

அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை

வளவயல்சூழ் வண்குருகூர்ச்சடகோபன் வாய்ந்துரைத்த

அளவியன்ற அந்தாதி யாயிரத்துள் இப்பத்தின்

வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே.

 

பதவுரை

அளவு இயன்ற

எல்லையைக் கடந்த

ஏழ் உலகத்தவர் பெருமான்

ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும் தலைவனான

கண்ணனை

எம்பெருமானைக்குறித்து,

வளம் வயல் சூழ்

வளர்ப்பமுள்ள கழனிகள் சூழ்ந்த

வண் குருகூர்

அழகிய திருநகரிக்குத் தலைவராகிய

சடகோபன்

ஆழ்வார்

வாய்ந்து உரைத்த

அன்புபூண்டு அருளிச் செய்த

அளவு இயன்ற

கட்டளைப்பட்ட (ஸகல லக்ஷண ஸம்பந்தமான)

அந்தாதி

அந்தாதித் தொடையான

ஆயிரத்துள்

ஆயிரத்துக்குள்ளே

இப்பத்தின்

இப்பதிகத்தினுடைய

வளம்உரையால்

வளமாகிய சொல்லளவினாலே

வான் ஓங்கு பெருவளம்

பரமபதத்தில் சிறந்த செல்வமாகிய கைங்கரிய ஸம்பத்து

பெறல் ஆகும்

அடையலாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டும் பாசுரம் இது. இத் திருவாய்மொழியில் சொல் மாத்திரத்தைக் கற்றாலும் திருநாட்டைப் பெறுதற்குப் போதும் என்கிறார்.

எல்லையைக் கடந்திருக்கின்ற ஏழுவகைப்பட்ட உலகங்களிலுமள்ள சேதநவர்க்கத்திற்கு ஸ்வாமியாய் அடியவர்க்கு எளியனான கண்ணபிரானைக் குறித்து *நல்லார் நவில் குருகூர் நகரான் மாறன் சடகோபன் விண்ணப்பஞ்செய்ததும் கட்டளையிடப்பட்டதுமான இவ்வந்தாதி யாயிருத்துள்ளும் இப்பத்துப் பாசுரங்களிலுள்ள இனிய சொற்களைச் சொன்ன மாத்திரத்திலும் திருநாட்டில் உத்துங்கமான கைங்கரிய ஸாம்ராஜ்யம் பெறப்பட்டதாகு மென்றாராயிற்று.

கீழ்ப்பத்துப் பாசுரங்களிலும் ஆழ்வார் தாமான தன்மையை யிழந்து வாசாமகோசரமாகக் கதறி நின்றபடியைக் கண்ட பரமபுருஷன்  ‘இவ்வளவான நிலைமையிலும் நாம் மறைந்துகிடந்தோமாகில் இனி ஆழ்வாரை இந்நுலவுலகத்தவர் இழக்கவே நேரும்’ என்று திருவுள்ளம்பற்றிப் பதறி யெழுந்தருளி ஸேவை ஸாதிக்க, மகிழ்ச்சியோடே தலைகட்டப்படு கின்றதென்பது சொல்நயத்தில் விளங்கும். ஆழ்வார் தம்மொருவர்க்கு வந்து முகங்காட்டினவளவையே கொண்டு ‘ஏழுலகதத்வர் பெருமான்’ என்றார். எம்பெருமான் இப்போது முகங்காட்டா தொழில் எம்பெருமான் லோகநாதனல்லன்’ என்று சொல்லி முடிக்க வேண்டியதாகும்போலும். கண்ணனை என்றதும் ஸாபிப்ராயம்: இங்கே நம்பிள்ளை யீடு:- “இவ்வளவிலே வந்து முகங் காட்டினானென்கிற குற்றந்தீர வந்து முகங் காட்டுகையாலே ஆச்ரித ஸுலபனானான். *பத்துடையடியவரில் க்ருஷ்ணாவதாரத்திலே அநுபவிக்கப்பாரித்து, அது கிடையாமையாலே தூது விட்டாராகையாலே இங்கு முகங்காட்டினான் க்ருஷ்ணனென்னவுமாம். இத்தால், அவனுடைய மேன்மையும் ஸௌலப்யமும் நிலைநின்றது இவர்க்கு முகங்காட்டின பின்பாயிற்றென்றபடி.”

ஸம்ஸாரத்திலே சுருங்கியிருத்தலாகிற நிலைகழிந்து பரமபதத்திலேபோய் ஸ்வஸ்வரூபத்தைப்பெற்று விரிதலாகிற பேறு இப்பதிகத்திற்கு உரைக்கப்பட்டதாயிற்று

 

English Translation

This decad of the matchless thousand songs by Satakapan of kurugur surrounded by fertile fields addresses the measureless Krishna, maker of the sever worlds. Those who master it shall enjoy the wealth of heaven.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top