(2939)

(2939)

நீயலையே சிறுபூவாய். நெடுமாலார்க் கென்தூதாய்

நோயெனது நுவலென்ன, நுவலாதே யிருந்தொழிந்தாய்

சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது

வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே.

 

பதவுரை

சிறு பூவாய்

சிறிய பூவையே!

நீ அலையே

நீ அல்லவோ? (இப்போது வேறுபட்டாயோ?)

நெடுமாலார்க்கு

‘புருஷோத்தமனுக்கு

என் தூது ஆய்

என் தூதாகிச் சென்று

எனது நோய்

எனது பிரிவாற்றாமையை

நுவல் என்ன

‘சொல்’ என்று வேண்டச் செய்தேயும்

நுவலாதே

(போய்ச்) சொல்லாதே

திருத்தொழிந்தாய்

வாளா இருந்திட்டாய்,

நான்

யான்

சாயலொடு

ஒளியோடு கூடின

மணி மாமை

அழகாகிய நிறத்தை

தளர்ந்தேன்

இழந்தேன்;

இனி

இப்படியான பின்பு

உனது

உன்னுடைய

வாய் அலகில்

வாயலகுக்குள்ளே

இன்

மதுரமான

அடிசில்

இரையை

வைப்பாரை

ஊட்டவல்லவர்களை

நாடாய்

தேடிக்கொள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தன்னுடைய நிலைமையைப் பூவென்னும் ஒரு பக்ஷிக்குக் காட்டி ‘ஏற்கெனவே உன்னை நான் வேண்டிக்கொண்டிருக்கும் எனக்காகத் தூது செல்லாதே உபேஷித்திருப்பாய்; நானோ இப்போது முடியப்புகா நின்றேன்; இனிமேல் உனக்கு இரையிடுவாரை நீயே தேடிக்கொள்ளாய் என்று சரம ஸமயத்தில் வார்த்தைபோல சொல்லுகின்றாள்.

சிறு பூவாய்! நீ அலையே- பூவாய் என்பது பூவை யென்பதன் விளி; பூவை- நாகணவாய்ப்புள் எனப்படும். நீயலையே- நீ இதுவரையில் இருந்த மாதிரியில்லையே என்றபடி. நான் எதுசொன்னாலும் விரைந்து செய்து முடிப்பதே இயல்பாக இருந்த நீ இப்போது சொன்ன சொல் கேளாமையினால் வேறுபட்டாய் போலும் என நினைக்கவேண்டும்படி யிருக்கின்றாய் என்றவாறு. எப்வோதும் உத்ஸாஹமாகவேயிருக்கு மியல்வுடைய நீ இப்போது என் நிலைமையைக் கண்டு வருந்திக் கிடக்கின்றாயாதலால் வேறுபட்டாய் போலும் என்னவுமாம்.

நெடுமாலார்க்கு என்தூதாய் எனதுநோய் நுவல் என்ன நுவலாதே யிருந்தொழிந்தாய் = நமது தலைவரோ நெடுமாலார்- பக்தர்கள் பக்கலில் பைத்தியம் பிடித்தவர் நானும் தூதுவிட வேண்டுமளவான பைத்தியம் பிடித்தவர் நானும் தூதுவிட வேண்டுமளவான பைத்தியம் பிடித்தவள்; ஆகவிப்படி இரண்டுதலையும் அன்பார்ந்திருக்கும்போது இடையிலே சேரவிடுவார் வேண்டுமத்தனையே. அது உன்னாலாகக் கூடியதாதலால் ‘என் நோயை அங்குச்சென்று தெரிவியாய்’ என்று உன்னைப் பல்காலும் இரந்தேன்; இரந்தும் உபதேக்ஷித்திருந்துவிட்டாய் என்கிறாள்.

“நோய் எனது” என்றவிடத்து நம்பிள்ளையீடு :- “ஸ்ரீபரதாழ்வான் நோயென்றால் சாதுர்த்திக மாயிராதே.” என்றுள்ளது. சாதுர்த்திகமாவது இரண்டுநாள் விட்டு மூன்று நாளுக்கொருமுறை யடிக்கிற ஜ்வரம்; இது மிகவும் ஆபத்தாக முடியும் ஜ்வரமென்று சொல்லுவார்கள். ஸ்ரீராமனைப் பிரிந்திருந்த காலத்தில் பரதாழ்வான் நோயாளியாயிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த நோய் சாதுர்த்திகஜ்வரம்போன்ற நோய் அன்று; பிரிவாற்றாமையேயாகும்; அதுபோலவேயிங்கம் என்றபடி. “மணிகெழுநீர்மருங்கலரும் வயலாலி மணவாளன் பணியாறியேன் நீசென்று என்பயலை நாய் உரையாயே” என்ற பெரிய திருமொழியுங் காண்க.

தற்கால நிலைமையைச் சொல்லுகிறாள் சாயலொடு என்று தொடங்கி, சாயல் என்பது ஸமுதாயசோபை; இது வடமொழியில் லாவண்யமெனப்படும்; மணிமாமை என்பது அழகு; இது ப்ரத்யங்க ஸௌந்தர்யமெனப்படும். இவ்விரண்டும் நீங்கப்பெற்றேனென்கிறாள். இவள் இங்ஙனஞ் சொல்லக் கேட்ட பூவையானது இதோ விரைந்து சென்று எம்பெருமானுக்கு அறிவிக்கிறேன்’ என்று புறப்படப்புகுமளவிலே இனியுனது வரயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே என்கிறாள். நானோ முடியா நின்றேன்; இனியுனக்கு ரக்ஷகராவாரைத்தேடிக்கொள் என்றவாறு.

இவ்விடத்திலே ஒரு ஐதிஹ்யம்; – பெரிய திருமாலை நம்பியென்னுமாசிரியர் ‘வெண்ணெய்க்காடும்பிள்ளை’ என்கிற ஸ்ரீகிருஷ்ண விக்ரஹத்தை ஆராதித்து வந்தார். அவர் திருவாராதநம் ஸமர்ப்பிக்க அசக்தராய் அந்திமதசையானவாறே பெருமாள் ஸந்நதிமுன்பே தண்டன் ஸமர்ப்பித்துத் திருத்திரையை நீக்கச் செய்து “சாயலொடு மணிமாமை தளர்ந்தேன் நான் இனியுனது வாயலகிலின்னடிசில் வைப்பாரை நாடாயே” என்று கைகூப்பி விண்ணப்பஞ் செய்தாராம். அடியேனோ ஆசாரியன் திருவடியடையா நின்றேன்; இனித் திருவாராதனம் கண்டருளப் பண்ணுவாரைத் தேடிக்கொள்ளாய் என்றபடி.

 

English Translation

O My little mynah!  I have lost my luster and my charms.  Alas, even when I beseech you to go to my distant Lord and tell him of my grave sickness, you do not take notice!  Better start looking for someone to feed you henceforth.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top