(2912)
நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.
பதவுரை
|
நீர் நுமது என்ற இவை |
– |
அஹங்கார மமகாரங்களாகிற இவற்றை |
|
வேர் முதல் மாய்த்து |
– |
(ருசி வாஸநைகளாகிற) பக்க வேரோடே முதலறுத்து |
|
இறை |
– |
ஸ்வாமியை |
|
சேர்மின் |
– |
அடையுங்கள்; |
|
உயிர்க்கும் |
– |
ஆத்மாவுக்கு |
|
அதன் நேர் |
– |
அதனோடு ஒத்து |
|
நிறை இல் |
– |
பூர்த்தி இல்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- விட வேண்டிய வஸ்துக்கள் பலபல கிடப்பதால் அவற்றையெல்லாம் தனித்தனியே எடுத்துரைத்தல் பெரும்பாடாகுமாதலால் விட வேண்டியவற்றைச் சுரங்க அருளிச்செய்கிறாரிதில். (*அநாத்மந்யாத்ம புத்திர் அஸ்வே ஸ்வமிதி யாமதி: அவித்யாதருஸம்பூதிபீஜமேதத் த்விதா ஸ்திதம்*) என்று ஸ்ரீ விஷ்ணு புராணத்திற் சொல்லப்பட்டது. இதைத் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் ‘நீர்நுமதென்றிவை வேர்முதல்” என்றார். இங்கு ‘நான் எனதென்றிவை’ என்றோ ‘நாம் நமதென்றிவை’ என்றோ இருக்க வேண்டும்; அப்படி யிருந்தால்தான் அஹங்கார மமகாரங்களுக்குப் பர்யாயமாகும்: ஆழ்வார் அப்படி யருளிச்செய்யாது நீர் நுமது என்றது:- அநுவாதரீதியாலுங்கூட அஹங்கார மமகார ஸ்பர்சம் தமக்குக்கூடாதென்ற கருத்தினாலென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்- “நான் எனது தம்வாக்காலே சொல்ல மாட்டாரே, நாக்கு வேம் என்று.”
English Translation
Uproot all thoughts of you and yours. Merge with the Lord, there is no greater fulfillment.
