(2850)

(2850)

உணர்ந்தமெய்ஞ் ஞானியர் யோகந் தொறும்,திரு வாய்மொழியின்

மணந்தரும் இன்னிசை மன்னும் இடந்தொறும் மாமலராள்

புணர்ந்தபொன் மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும்

குணந்திகழ் கொண்டல் இராமானுசனெங் குலக்கொழுந்தே.

 

பதவுரை

குணம் திகழ்

ஆத்ம குணங்களால் விளங்குபவரும்

கொண்டல்

(ஔதார்யத்தில்) காளமேகத்தை ஒத்த வரும்

எம் குலம் கொழுந்து

எங்கள் குலத்துக்குத் தலைவருமான

இராமாநுசன்

எம்பெருமானார்

(எங்கே எழுந்தருளியிருப்பரென்றால்)

உணர்ந்த மெய் ஞானியர் யோகம் தொறும்

கற்றுணர்ந்த தத்வஜ ஞானிகளுடைய கோஷடிகளெங்கும்

திருவாய் மொழியின் மணம் தரும் இன் இசை மன்னும் இடம் தொறும்

திருவாய் மொழியினாடைய பரிமளம் மிக்க இனிய இசையுள்ள இடங்களெங்கும்

மா மலராள் புணர்ந்த பொன் மார்பன் பொருந்தும் பதிதொறும்

பிராட்டி நித்யவாஸம் பண்ணுகிற அழகிய மார்புயுடைய திருமால் எழுந்தருளியிருக்கிற திவ்ய தேசங்களெங்கும்

புக்கு நிற்கும்

எழுந்தருளியிருப்பார்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஞானம் தலையெடுத்த மஹான்களுடைய திரள் எங்கெங்கும் இருக்கின்றதோ அங்கெல்லாம் எழுந்தருளியிருப்பவரும். திருவாய்மொழியின் பரமபோக்யமான இசை எங்கெங்கு நிகழ்கின்றதோ அங்கெல்லாம் ஸேவைஸாதிப்பவரும் சரியபதியான ஸர்வேச்வரன் எங்கெங்கு ஸந்நிதாநம் பண்ணுகிறாறோ அந்தத் திருப்பதிகளெங்கும் புகுந்து நிற்பவருமான எம்பெருமானார் அஸ்மத்குல கூடஸ்தர்கிறாராயிற்று.

 

English Translation

Where bands of godly-realised souls gather, wherever the Tiruvaimoli’s fragrant music is sung, wherever the lord with the lotus dame Lakshmi on his chest resides, -there our benevolent cloud Ramanuja our clan’s master, enters and stays.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top