(2849)
கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே
மிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்
சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரை
உடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.
பதவுரை
|
கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் |
– |
நான்கு ஸமுத்ரங்களை எல்லாவிடங்களிலும் |
|
கலி இருளே மிடைதரு காலத்து |
– |
கலிபுருஷனாகிற அந்த காரமே நெருங்கிக் கிடந்த காலத்தில் |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார் (திருவவதரித்து) |
|
நால் மறையின் |
– |
நான்கு வேதங்களின் |
|
மிக்க சுடர் ஒளியால் |
– |
அளவற்ற தேஜஸ்ஸைக் கொண்டு |
|
அவ்விருளை துரந்திலன் எல் |
– |
அந்த கலிதோஷத்தைப் போக்கியிராமற் போனால் |
|
உயிரை உடையவன் நாரணன் என்று |
– |
‘எல்லா ஆத்மாக்களுக்கும் சேஷி ஸ்ரீமந் நாராயணனே என்று |
|
உற்று உணர்ந்து |
– |
யாரும் தெரிந்துகொண்டிருக்கமாட்டார்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னப்பனிராமாநுசன் திருவலதரித்து வேதார்த்தங்களை விளங்கக் காட்டியருளா விடில் இவ்வுலகமனைத்தும் அஜ்ஞாநமயமாகவே கிடக்கும்; தைவாதீநமாக என்னப்பன் திருவவதரித்து எங்கும் வியாபித்துக்கிடந்த கலிபுருஷனாடை தோஷங்களைத் தொலைத்து வேதச் சுடர் விளக்கேற்றி அஜ்ஞாநாந்தகாரங்களைப் போக்கடிக்கவே எல்லாரும் ஸ்ரீமந் நாராயணனே ஸர்வசேஷி யென்கிற பர மார்த்தத்தைத் தெரிந்து உய்வுபெறலாயிற்று என்றார்.
மிடைதருதல் – நெருங்கியிருத்தல் இடைவிடாது எங்கும் பரவியிருத்தல்.
English Translation
In these days of Kali when darkness engulfs the world in all the eight Quarters to the very end of the oceans, if Ramanuja had not dispelled that darkness with the light of the four Vedas, we would never have realised the truth that Narayana is the lord and master of all the souls.
