(2843)
அற்புதன் செம்மை இராமானுசன், என்னை ஆளவந்த
கற்பகம் கற்றவர் காமுறு சீலன் கருதரிய
பற்பல் லுயிர்களும் பல்லுல கியாவும் பரனதென்னும்
நற்பொருள் தன்னை, இந் நானிலத் தேவந்து நாட்டினனே.
பதவுரை
|
என்னை ஆள வந்த |
– |
என்னை ஆட்கொள்வதற்காக அவதரித்த |
|
கற்பகம் |
– |
உதாரரும் |
|
கற்றவர் காமூது சீலன் |
– |
ஞானிகள் ஆசைப்படும் படியான சீல குணத்தையுடையவரும் |
|
அற்புதன் |
– |
ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையரும் |
|
செம்மை |
– |
ருஜூவாயிருக்குந் தன்மை பொருந்திய வருமான |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானார், |
|
கருத அரிய பல் பல் உயிர்களும் |
– |
நினைக்கவும் முடியாத படி எண்ணிறந்திருக்கிற ஆத்மவர்க்கங்களும் |
|
பல் உலகு யாவும் |
– |
அவ்வாத்மாக்களுக்கு இருப்பட்டமான) அளவிறந்த எல்லாவுலகங்களும் |
|
பரனது என்னும் நல் பொருள் தன்னை |
– |
எம்பெருமானாடைய ஸொத்துக்களம் என்கிற ஸாரர்த்தத்தை |
|
இ நானிலேததே |
– |
இவ்வுலகத்திலே |
|
வந்து |
– |
வந்தவதரித்து |
|
நாட்டினன் |
– |
ஸ்தாபித்தருளினார். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானார் மதாந்தரங்களைக் கண்டித்து நிலைநாட்டிய ஸித்தாந்தம் இன்னதென்கிறார்.- சிறந்த ஞானிகளனைவரும் கொண்டாடுதற்குரிய திருக்குணங்களையும் அதிமாநுஷவ்யாபாரங்களுக்கு இருப்பிடமாயுள்ள ஸகல லோகங்களும் ஸ்ரீமந்நாராயணனாக்கே உரிமைப்பட்டவை” என்கிற பரமார்த்தத்தை நிலைநாட்டியளினர் என்கை.
உலகு- யாவும், உலகியாயும்; “யவ்வரீனிய்யாம்” என்பது நன்னூல்விதி.
English Translation
The wonderful glorious Ramanajua, whom the learned ones desire, is my kalpaka wishing tree, come to rule me. He established the difficult concept that all the world is the lord’s corpus and all the souls are the lord’s soul.
