(2842)
பார்த்தான் அறுசம யங்கள் பதைப்ப,இப்பார்முழுதும்
போர்த்தான் புகழ்கொண்டு புன்மையி னேனிடைத் தான்புகுந்து
தீர்த்தான் இருவினை தீர்த்தரங் கன்செய்ய தாளிணையோ
டார்த்தான் இவையெம் இராமா னுசன்செய்யும் அற்புதமே.
பதவுரை
|
(எம்பெருமானாரானவர்) |
||
| அறு சமயங்கள் |
– |
(வேதபாஹ்யங்களான) ஆறுதாசநங்களும் துடிக்கும்படியாக |
| பதைப்ப பார்த்தான் |
– |
திருக்கண் செலுத்தினார்; |
| இப்பார் முழுவதும் |
– |
இப்பூமண்டலம் முழுவதையும் |
| புகழ் கொண்டு |
– |
தமது கீர்த்தியினாலே |
| போர்த்தான் |
– |
மூடிவிட்டார்; |
| புன்மையினேனிடை |
– |
நீசனான அடியேன் பக்கலிலே |
| தான் புகுந்து |
– |
தாமாகவே (நிர்ஹேதுக க்ருபையினால்) வந்துயுகுந்து |
| இரு வினை |
– |
பெரிய பாவங்களை |
| தீர்த்தான் |
– |
போக்கியருளினார்; |
| தீர்த்து |
– |
பாவங்களைப் போக்கினது மன்றியில் |
| அரங்கன் |
– |
ஸ்ரீ ரங்கநாதனுடைய |
| செய்ய தாள் இணையோடு ஆர்த்தான் |
– |
அழகிய திருவடிகளோடே (என்னை)அந்வயிப்பித்தார்; |
| இவை |
– |
ஆகிய இக்காரியங்களெல்லாம் |
| எம் இராமாநுசன் செய்யும் அற்புதம் |
– |
எமக்கு ஸ்வாமியான எம்பெருமானார் செய்தருளின ஆச்சரியச் செயல்களாம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானாருடைய ஆச்சரியமான சில செயல்களை எடுத்துக் கூறுகின்றார்:-சாகயர் உலூக்யர் பௌத்தர் சார்வாகர் பாசுபதர் காணுதர் என்றிப்படி சொல்லப்படுகிற புற மதத்தவர்களையெல்லாம் நடுங்கச்செய்தார்; இப்பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி செய்தார்; ஆத்மகுணமொன்றில்லாத என்னுடைய ஹ்ரதயத்திலே புகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய = பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப்பூமண்டலமெங்கும் தமது திருப்புகழே பரவும்படி செய்தார்; ஆத்மகுணமொன்றில்லாத என்னுடைய ஹ்ருதயத்திலே பகுந்து என் பாவங்களைப் போக்கி அழகிய மணவாளனாடைய = பாதங்களிலே என்னை ஆச்ரயிக்கச் செய்தார்; இப்படியாக எம்பெருமானார் செய்தருளுமவையெல்லாம் மிக அற்புதமானவை.
English Translation
With his Darsanas. Ramanuja drove out the six heretic thoughts, and spread his fame for and wide. He entered my lowly heart and ended my twin, Karmas, then linked me to the lotus feet of Ranganathan. These are a few of his wondrous deeds.
