(2645)

(2645)

இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்த அந்நாள்,

மறைமுறையால் வானாடர் கூடி,-முறைமுறையின்

தாதிலகு பூத்தெளித்தால் ஒவ்வாதே, தாழ்விசும்பின்

மீதிலகித் தாங்கிடக்கும் மீன்.

 

பதவுரை

தாழ் விசும்பின் மீது

வெளியான ஆகாசத்திலே

இலசி கிடக்கும் மீன்

விளங்காநின்ற நக்ஷத்திரங்களானவை

இறை முறையான்

ஸ்வாமியான முறைமையையுடைய எம்பெருமான்

மண் அளந்த அந்நாள்

உலகளந்த அக்காலத்திலே

வான் நாடர்

வானுலகத்திலுள்ளாரெல்லாரும்

கூடி

கும்பல்கூடி

சே அடி மேல்

(அப்பெருமானது) செவ்விய திருவடிகளின் மேல்

மறை முறையால்

வேதங்களிற் சொல்லிய விதிப்படி

தாது இலகு பூ

தாதுநயாலே விளங்காநின்றுள்ள புஷ்பங்களை

முறை முறையின்

முறை முறையாக

தெளித்தால் ஒவ்வாதே

தெளிந்தாற்போன்றுள்ளனவன்றோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இறைமுறையான்.) ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிறபோது ஒன்றுந்தோன்றாமல் ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு; “நலத்தால்மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு; ஏதோவொரு காரத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ரமயமாகக் காணப்பட்டது; உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்க விஷயமாகுமேயன்றி ஸாமாந்யமான லௌகிக் வஸ்துவாக விஷயமாகாதரகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார்.

எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல் புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி. நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்tபதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும், ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்தவரலாற ஊன்றிக்கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.

இப்பாட்டின் வியாக்கியானத்திலே – “லோக யாத்ரையை அநுஸந்திக்கப்புக்காலும் அவனைமுன்னாகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்; “சிறியாச்சான் ‘சபங்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்’ என்று பிள்ளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

 

English Translation

When the Lord extended his foot into the sky, the stars below looked like myriads of pollen-dusted flowers strewn by the gods in hordes who dusted flowers strewn by the gods in hordes who came and offered worship with proper chants.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top